இறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை
நவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது.
Bacon, sausage, and ham போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிலும் பற்வையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள் red meat கூடாது என்கிறார்கள்.
பொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரை போன்றவற்றின் இறைச்சிகள் red meat எனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவை வெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.
அண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது.
பொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.
Canned meat
Cured meat
Ham
Lunch meat
Sausage
Bacon Gelatins
Fresh meat with additives
Cured meat
Ham
Lunch meat
Sausage
Bacon Gelatins
Fresh meat with additives
நடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருட காலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.
அதேபோல புற்றுநோய்களால் இறப்பதற்கான சாத்தியமும் 43% சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.
அவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன?
இறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.
இறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.
ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லது எனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும் குறைந்த அளவே உண்பது உசிதமானது.
http://hainallama.blogspot.in/2013/03/blog-post_9.html--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக