பெட்ரோல் டீசல் எது லாபம்?
'பெட்ரோல் விலை சீக்கிரமே 100 ரூபாயைத் தொடப் போகுதாம். டீசல் வாங்குறதுதான் புத்திசாலித்தனம்' என சிலர் டீசல் கார்களை வாங்க ஓடுவதும், 'டீசலும் விலை ஏறப் போகுதாம்' என்று பயந்துகொண்டு, தேவை இருந்தும் கார் வாங்குவதைத் தள்ளிப் போடுவதும்தான் இப்போது அதிகம் நடக்கிறது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள், வரிசை கட்டி டீசல் கார்களை விற்பனை செய்து, டீசல் கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
'உண்மையிலேயே டீசல் காரை வாங்குவது லாபமா? பெட்ரோல் விலை என்னாகும்? டீசல் விலை என்னாகும்?' - இந்தக் கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன், 'என்னுடைய தேவை என்ன, என்னால் காருக்கு என மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் செலவிட முடியும்? மாதத்துக்கு எவ்வளவு தூரம் காரில் பயணம் செய்வேன்' என்பதைத்தான் கணக்கிட வேண்டும்.
உதாரணத்துக்கு, ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை எடுத்துக் கொள்வோம். விலை உயர்ந்த ஃபிகோ பெட்ரோல் மாடலின் விலை 6,02,532 ரூபாய் (சென்னை ஆன் ரோடு). அதுவே, டீசல் ஃபிகோவின் டாப் எண்ட் மாடலின் விலை 7,16,071 ரூபாய். இரண்டு கார்களுக்குமான விலை வித்தியாசம் 1,13,539 ரூபாய்.
மாதத்துக்கு 1,000 கி.மீ தூரம் பயணிப்போம். ஆண்டுக்கு 12,000 கி.மீ சராசரியாகப் பயணிப்போம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஃபிகோ பெட்ரோல் பொதுவாக, லிட்டருக்கு 13.15 கி.மீ மைலேஜ் தரும். அப்படி என்றால், ஓர் ஆண்டுக்கு 912.54 லிட்டர் பெட்ரோல் தேவை. 1 லிட்டர் பெட்ரோலின் விலை 70.58 என்பதால், நீங்கள் ஆண்டுக்கு 64,407 ரூபாய் செலவிடுவீர்கள்.
இப்போது டீசலுக்கு வருவோம். இதே போல், மாதம் 1,000 கி.மீ. ஆண்டுக்கு 12,000 கி.மீ பயணம் செய்வீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 1 லிட்டர் டீசலின் விலை சென்னையில் 50.13. ஃபிகோ டீசல் பொதுவாக, லிட்டருக்கு 16.3 கி.மீ மைலேஜ் தரும். இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஆண்டுக்கு 736.19 லிட்டர் டீசல் உங்களுக்குத் தேவை. அப்படியானால், ஓர் ஆண்டுக்கு நீங்கள் 36,905 செலவு செய்வீர்கள். டீசல் காரை வாங்குவதால், எரிபொருள் பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.27,502 ரூபாய் மிச்சப்படுத்துவீர்கள். ஆனால், டீசல் காரை வாங்குவதற்கு, ஆரம்பத்தில் நீங்கள் கூடுதலாகச் செலுத்தி இருக்கும் தொகை 1,13,539.
இந்தத் தொகையைத் திருப்பி எடுக்க, நீங்கள் நான்கு (4.12) ஆண்டுகள் காரைப் பயன்படுத்த வேண்டும். அல்லது 49,540 கி.மீ தூரம் ஓட்டிய பின்புதான், ஆரம்பத்தில் கூடுதலாகச் செலுத்திய 1.13 லட்சம் ரூபாய் ஈடுகட்டும்.
அதாவது, 4 ஆண்டுகள் அல்லது சுமார் 50,000 கி.மீ-க்குப் பின்புதான் நீங்கள் டீசல் காரை வாங்கியதற்கான பயனையே அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள்.
இதுவே, நீங்கள் மாதத்துக்கு 2,000 கிமீ வரை காரைப் பயன்படுத்துபவராக இருந்தால், ஆண்டுக்கு நீங்கள் 24,000 கி.மீ வரை பயணம் செய்வீர்கள். அதாவது, நீங்கள் டீசல் கார் வாங்கக் கூடுதலாகச் செலுத்திய 1.13 லட்ச ரூபாயை 1.5 ஆண்டுகளில் எடுத்துவிடலாம்.
நீங்கள் கார் வாங்கும்போது மைலேஜ் மற்றும் எரிபொருளுக்கான செலவை மட்டும் பார்க்காமல், மாதந்தோறும் கடனுதவி பெற்று கார் வாங்கி இருந்தால், தவணை செலுத்த வேண்டிய தொகை மற்றும் சர்வீஸ் செலவுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், டீசல் இன்ஜினுக்கான உதிரி பாகங்களின் விலை, பெட்ரோல் மாடலைவிட அதிகம் என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, நீங்கள் 2 லட்சம் ரூபாய் முன் பணமாகச் செலுத்தி ஃபிகோ டீசல் காரை வாங்குகிறீர்கள். 10.5 வட்டி விகிதம் என்ற அடிப்படையில், 3 ஆண்டுகள் கடனுதவிக்குக் கணக்கிட்டால், 36 மாதங்கள் நீங்கள் மாதந்தோறும் 16,774 தவணை கட்ட வேண்டும். இதுவே நீங்கள் பெட்ரோல் மாடல் வாங்குகிறீர்கள் என்றால், இதேபோல் 2 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தி, மாதந்தோறும் 13,083தான் கட்டுவீர்கள். டீசல் மாடலைவிட பெட்ரோல் மாடலுக்கு, தவணையில் மாதம் 3,691 மிச்சமாகும்.
அதே சமயம், நீங்கள் மாதம் பெட்ரோலுக்கு மட்டும் 5,364 ரூபாய் செலுத்துவீர்கள். இதுவே, டீசலுக்கு 3,075 ரூபாய் செலவிடுவீர்கள். பெட்ரோல் மாடல் மாதத் தவணை மற்றும் பெட்ரோல் சேர்த்து, மாதம் 18,447 ரூபாய் செலவாகும். இதுவே டீசல் மாடல் என்றால், தவணை மற்றும் டீசல் சேர்த்து மாதம் 19,849 ரூபாய் செலவாகும். இந்த வகையில் பார்த்தால், மாதத்துக்கு நீங்கள் பெட்ரோல் காரில் 1,402 ரூபாய் சேமிப்பீர்கள். இந்தப் பணத்தை நீங்கள் சர்வீஸ் செலவுகளுக்கு என்று சேமித்து வைக்கலாம்.
டீசல் காருக்கு பெட்ரோல் காரைவிட ரீ - சேல் மதிப்பு அதிகம் என்றாலும், நீங்கள் ஆண்டுக்கு 20,000 கி.மீ மேல் பயன்படுத்துவீர்கள் என்றால் மட்டுமே, டீசல் கார் வாங்குவது லாபம். இல்லை என்றால், என்னதான் பெட்ரோல் விலை அதிகம், மைலேஜ் குறைவு என்றாலும், பெட்ரோல் கார் வாங்குவதே லாபம்!

இவை மட்டுமின்றி டீசல் காரில் டீசல் தீர்ந்துவிட்டால் மறுபடியும் அதை இயக்க மிகவும் சிரமம் ஏற்படும். பெட்ரோலில் அப்படியல்ல. மீண்டும் பெட்ரோல் ஊற்றினால் போதும் இயக்கிவிடலாம். டீசலில் ஏர் லாக் ஆகும் வாய்ப்பு அதிகம்!!
தினசரி 100 கி.மீ.க்கு மேல் ஓட்டவேண்டிய தேவை இருந்தால் மட்டும் டீசல் வண்டி வாங்குங்க..
ஆடிக்கொருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை கார் உருட்டற பார்ட்டியா இருந்தால், பெட்ரோல்தான் உங்களுக்கு பெஸ்ட்..
சும்மா நிக்கிற வண்டிகளில், டீசல் மாடல் அதிகம் செலவு வைக்கும்.

--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக