லேபிள்கள்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம்

 ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.
இவ்வாறாக,இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன? என்பதை இனி நாம் பார்ப்போம்.
ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.
எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும். உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும்.
நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?
வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.
இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.
விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?
விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?
இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?
விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!
இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts