லேபிள்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு!!!


அலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக தூங்கவே நேரம் கிடைக்காத இந்த காலத்தில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் உடலானது உடற்பயிற்சி செய்யாமல் பருத்துவிடுகிறது என்று வருந்தவேண்டாம். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இல்லை, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எப்படியென்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளிலே நிறைய உடற்பயிற்சி இருக்கிறது. வீட்டைத் துடைத்தல், அயர்ன் பண்ணுதல் போன்ற வேலைகளிலே உடற்பயிற்சி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு உடற்பயிற்சி அடங்கியுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் எந்தந்த வேலையில் என்னென்ன உடற்பயிற்சி உள்ளது என்றும் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.

கிச்சனில் உள்ள கேஸின் மேல் பகுதியில் உள்ள அழுக்கை சுத்தம் பண்ணும் போது நம் கையில் உள்ள ஆர்ம்ஸ் வலுபெறுகிறது. மேலும் பாத்திரம் கழுவுவதும், கைகளுக்கும், விரல்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியைத் தருகிறது.

வீட்டில் உள்ள கிச்சன், பாத்ரூம், பெட்ரூம் ஆகியவற்றை துடைக்கும் போது, மாப் கொண்டு துடைக்காமல், கைகளால் துடைத்தால் கைகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். ஏனென்றால் இதை செய்யும் போது கைகளின் அசைவு அதிகமாகவும், வேகமாகவும் இருப்பதாலும், மேலும் இந்த வேலையை முட்டி போட்டு செய்வதாலும் கைகளுக்கும், தொடைக்கும் நல்லது.

துணி துவைப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி. துணி துவைக்கும் முறையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். துணியை கைகளால் துவைக்கும் போதும், காய போடும் போதும் கைக்கும், அதை அலச நாம் குனிந்து செய்யும் போது இடுப்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிறது. பின் துணி காய்ந்ததும் அதை மடிக்கும் போதும், அயர்ன் பண்ணும் போது தோல் பட்டை, கழுத்து அதில் ஈடுபடுவதால், இது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

பெட்ரூமை சுத்தம் செய்யும் போது பெட்டில் உள்ள பெட்சீட்டை எடுத்து, பெட்டை தட்டி, மறுபடியும் பெட்டில் பெட்சீட்டை விரிப்பது போன்ற செயல்கள் உடலுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.

மேலும் வீட்டில் ஒட்டடை இருந்தால், அதை எடுக்கும் போதும், கதவுகள், கார் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்யும் போதும் உடலானது நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகும்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts