லேபிள்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

கிராம்பு--மருத்துவக் குணங்கள்


பசியைத் தூண்ட

சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.

பித்தம் குறைய

வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

பல்வலி நீங்க

பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.

வாந்தி நிற்க

பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.ஸ் சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.

தலைபாரம் நீங்க

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்

தொண்டைப்புண் ஆற

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.

கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.

கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.

தோலில் உண்டாகும் படைகளுக்கு

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.

கிராம்புத் தைலம்

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணையே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு!!!


அலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக தூங்கவே நேரம் கிடைக்காத இந்த காலத்தில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் உடலானது உடற்பயிற்சி செய்யாமல் பருத்துவிடுகிறது என்று வருந்தவேண்டாம். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இல்லை, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எப்படியென்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளிலே நிறைய உடற்பயிற்சி இருக்கிறது. வீட்டைத் துடைத்தல், அயர்ன் பண்ணுதல் போன்ற வேலைகளிலே உடற்பயிற்சி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு உடற்பயிற்சி அடங்கியுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் எந்தந்த வேலையில் என்னென்ன உடற்பயிற்சி உள்ளது என்றும் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.

கிச்சனில் உள்ள கேஸின் மேல் பகுதியில் உள்ள அழுக்கை சுத்தம் பண்ணும் போது நம் கையில் உள்ள ஆர்ம்ஸ் வலுபெறுகிறது. மேலும் பாத்திரம் கழுவுவதும், கைகளுக்கும், விரல்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியைத் தருகிறது.

வீட்டில் உள்ள கிச்சன், பாத்ரூம், பெட்ரூம் ஆகியவற்றை துடைக்கும் போது, மாப் கொண்டு துடைக்காமல், கைகளால் துடைத்தால் கைகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். ஏனென்றால் இதை செய்யும் போது கைகளின் அசைவு அதிகமாகவும், வேகமாகவும் இருப்பதாலும், மேலும் இந்த வேலையை முட்டி போட்டு செய்வதாலும் கைகளுக்கும், தொடைக்கும் நல்லது.

துணி துவைப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி. துணி துவைக்கும் முறையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். துணியை கைகளால் துவைக்கும் போதும், காய போடும் போதும் கைக்கும், அதை அலச நாம் குனிந்து செய்யும் போது இடுப்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிறது. பின் துணி காய்ந்ததும் அதை மடிக்கும் போதும், அயர்ன் பண்ணும் போது தோல் பட்டை, கழுத்து அதில் ஈடுபடுவதால், இது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

பெட்ரூமை சுத்தம் செய்யும் போது பெட்டில் உள்ள பெட்சீட்டை எடுத்து, பெட்டை தட்டி, மறுபடியும் பெட்டில் பெட்சீட்டை விரிப்பது போன்ற செயல்கள் உடலுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.

மேலும் வீட்டில் ஒட்டடை இருந்தால், அதை எடுக்கும் போதும், கதவுகள், கார் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்யும் போதும் உடலானது நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகும்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் குழந்தை வளர்ப்பு


* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
*கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும். 
* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
 
* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
 
* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
 
* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
 

* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது. 
* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 
* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
 
* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
 
* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
 
* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

 * கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். 
* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
 
* ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
 * தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது. 
* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
 

* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். 
* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
 
* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
 

* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். 
* மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
 
* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
 
* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
 

* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
 * ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம். 
* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம். * வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
 

* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும் 
* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
 
* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
 
* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
 
* எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..
 

* வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம். 
* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
 
* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
 
* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
 
* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
 

* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள். 
* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
 
* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
 
* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும். 
* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
 
* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
 
* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
 
* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.
http://pettagum.blogspot.in/2012/06/blog-post_623.html

புதன், 23 ஜனவரி, 2013

ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை


சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. நரம்புகள்
சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.
கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. புது
மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும்,
ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலை யால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் பிவைட்டமின்களும், ‘சிவைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல்
இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.
எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

திங்கள், 21 ஜனவரி, 2013

ஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் !



கடை கடையாக ஏறி, இறங்கி பொருட்கள் வாங்குவதைவிட, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, ஜஸ்ட் மவுஸ் கிளிக் பண்ணி 'ஆன்லைன் ஷாப்பிங்செய்வது, தற்போது பரவிக் கொண்டிருக்கிறது!
ஆனால், 'நேரில் பொருட்களை வாங்கும்போதே ஏகப்பட்ட தில்லு முல்லு திருகுதாளங்கள் நடக்கின்றன. அப்படியிருக்க, கண்காணாமல், கம்ப்யூட்டரில் படத்தை மட்டுமே பார்த்து வாங்கும்போது... எந்த அளவுக்கு மோசடி இருக்கும்?' என்று ஒரு கேள்வி கண்டிப்பாக பலருக்கும் எழும். இது உண்மையும்கூட. ஆம், ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றுவதற்கும்... ஏமாறுவதற்கும் ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. ஆனால், உஷாராக கையாண்டால்... இதைவிட ஷாப்பிங்குக்கு சூப்பர் வழி இப்போதைக்கு வேறு இல்லை என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது!

இதோ, ஆன் லைன் ஷாப்பிங்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார்... வைத்தீஸ்வரன். இவர், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'இண்டியா பிளாஸா ஆன்லைன் ஷாப்பிங்’-ன் ஃபவுண்டர் மற்றும் சி.இ.ஓ. இந்தியாவில் முதன் முதலாக, 1999-ல் ஆன்லைன் ஷாப்பிங்குக்காக 'இண்டியா பிளாஸா.காம்என்ற வெப்சைட் ஆரம்பித்தது, இவர்தான்!

''கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது, பயணச் செலவுகளில் ஆரம்பித்து, நேரம், உடல் களைப்பு தொடங்கி பல விரயங்கள் ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க, ஏ டு இஸட் எல்லா பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வாங்க முடியும். ஷோ ரூம்களில்... கடைக்கான வாடகை, ஏ.சி, கரன்ட் பில், ஊழியர்களின் சம்பளம் முதல் அத்தனை செலவுகளும் வாங்கப்படும் பொருட்களின் விலையில்தான் சேர்க்கப்படும். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்தச் செலவுகள் பெருமளவு இருக்காது. அதனால், கடைகளைவிட, ஆன்லைனில் விலை குறைவாகவே இருக்கும்!'' என்றவர், ஆன்லைன் ஷாப்பிங்குக்காக சில ஆலோசனைகளை வழங்கினார்.

''முதலில், ஆன்லைன் ஷாப்பிங்குக்காக இருக்கும் பலவிதமான வெப்சைட்களையும் தெரிந்துகொண்டு, ஒருமுறை வலம் வாருங்கள். அவற்றில் எது பிரபலமானது, நம்பிக்கையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். தொடர்பு முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் ஐ.டி, புகார் எண் என அனைத்தும் குறிப்பிடப்பட்ட வெப்சைட்களே பரிந்துரைக்கத்தக்கது. இ-மெயில் ஐ.டி மட்டுமே தந்திருக்கும் வெப்சைட்களைத் தவிருங்கள்.

அடுத்ததாக, நீங்கள் வாங்க விரும்பும் பொருளை ஒரு வெப்சைட்டில் பார்த்தவுடன் வாங்கிவிடாமல், அதே பொருளுக்கு மற்ற வெப்சைட்களில் நிர்ணயித்துள்ள விலையையும் அறிந்துகொண்டு, விலை குறைவாக, அதேசமயம் பிராண்டடாக இருக்கிறதா என்பதை அலசுங்கள். டிஸ்கவுன்ட் கொடுத்தால் கூடுதல் சிறப்பு.

போலி வெப்சைட்களும் நிறையவே புழக்கத் தில் இருக்கின்றன என்பதால், நீங்கள் 'லாக் இன்ஆகிற வெப்சைட் பாதுகாப்பானதுதானா என்பதை அறிய, அந்த வெப் பக்கம் ஓபன் ஆகும்போதே லிங்க் பகுதியில் 'லீttஜீs’ என்று இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு பாஸ்வேர்ட் டைப் அடிக்கும்போதும் 'லீttஜீs’ என்று இருக்க வேண்டும்'' என்றவர், டெலிவரி விஷயங்களைப் பேசினார்.

''ஆன்லைனில் நீங்கள் புக் செய்யும் பொருட்கள் எல்லாம் கப்பல், ரோடு டிரான்ஸ்போர்ட் என்று கடந்து உங்களை வந்தடையும். ஷிப்பிங் சார்ஜை உங்களிடம் வசூலிக்காத வெப்சைட்டாகப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்.  பொருளை புக் செய்யும்போதே எத்தனை நாட்களுக்குள் டெலிவரி கிடைக்கும் என்பதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தோதான நேரத்தில் கைக்கு கிடைக்காது என்றால், அதைவிட குறுகியகால டெலிவரிக்கு உத்தரவாதம் தரும் அடுத்த வெப்சைட்டை அணுகலாம்.

டெலிவரி ஆகும்போது ஏதேனும் சேதமாகியிருந்தால், சில ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அவற்றை மீண்டும் ஏற்க மாட்டார்கள். சிலர், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ஏற்றுக் கொள்வார்கள். வெப்சைட்டில் இதுபற்றிய தகவல் களை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை சேதமாகியிருந்தால், குறிப்பிட்ட முகவரிக்கு, உரிய காலக்கெடுவுக்குள் அனுப்பி, புதிய பொருளைப் பெற்றுக்கொள்ளலாம்'' என்ற வைத்தீஸ்வரன்,

''ஆன்லைன் ஷாப்பிங் செல்லும்போது, இந்த எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கட்டும். நாம் கவனமாக இருந்தால், குறைந்த விலையில் சுலபமாக பொருள் வாங்க ஆன்லைங் ஷாப்பிங் வெப்சைட்கள் சூப்பர் சாய்ஸ்!'' என்று சர்டிஃபி கேட் தந்தார்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் இப்போது பெண்களின் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதில் தன் அனுபவம் சொன்னார் சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் புரொபஷனல் அனுஷா.
''என் வேலை காரணமா எப்பவும் சிஸ்டம் முன்னயே உட்கார்ந்திருக்கணும். அதனால கொஞ்சம் டைம் கிடைச்சாலும் ரிலாக்ஸ் பண்ண.. மார்க்கெட்ல புதுசா என்ன வந்திருக்குனு தேட ஆரம்பிச்சுருவேன். சொன்னா நம்பமாட் டீங்க... ஆன்லைன்ல வாங்குற பொருட்கள் விலை குறைவாவும், அதேசமயம் தரமாவும் இருக்கு.

குறிப்பா, ஸ்க்ரீன்ல பார்க்கறப்போ எப்படி இருக்குதோ அதேமாதிரிதான் கைக்கு வர்றப்பவும் இருக்குது. இப்ப எனக்கு ஏகப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் அறிமுகம். கம்மல், காலணி, பெட்ஷீட், வீட்டுக்குத் தேவையான பொருட்கள்னு அத்தனையும் இதுல வாங்கியிருக்கேன். இதுவே நாம கடைக்குப் போகணும்னா, வண்டிக்கு பெட்ரோல்ல இருந்து... நம்ம எனர்ஜி வரைக்கும் அத்தனையும் செலவாகும். இதுல எல்லாம் மிச்சம்தானே?!'' என்று சந்தோஷமாகச் சொன்னார் அனுஷா!

சனி, 19 ஜனவரி, 2013

ஏ.சி. ஒருகணம் யோசி!


சந்தேகங்களும் தீர்வுகளும்
ஒரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?
''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.


''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல. தட்பவெப்ப நிலையை மனித உடலுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக, இதமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். இந்தச் சொல் ஹீட்டருக்கும் பொருந்தும்.
பொதுவாக முறையாகப் பயன்படுத்தும் வரை ஏ.சி-யினால் எந்த ஆபத்தும் இல்லை. ஸ்ப்ளிட் வகை ஏ.சி-களைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யைக் கூடுதல் கவனம்கொண்டு பராமரிக்க வேண்டும். அப்படிச் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசு, குப்பையால் உள்ளே வரும் காற்று மாசு அடைந்து, இரண்டு வகை பாக்டீரியாக்கள் அறைக்குள் வளர்ந்து பரவும். ஒன்று, லெஜியோனெல்லா நியுமோஃபிலியா
      (Legionella pneumophila). இன்னொன்று, ஆக்டினோ மைசெட்ஸ்  (Actino mycetes).  அழற்சிக்கென்றே பிறந்தவை இந்த அழிவு ஜீவன்கள். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கும்பட்சத்தில் லேசாகத் தொண்டை அழற்சியில் தொடங்கி அப்புறம் எரிச்சல், புண் ஏற்பட்டு தொடர் வறட்டு இருமல் ஏற்படும். கவனிக்கவில்லை என்றால், முகம் எங்கும் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் எனக் கடைசியாக நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக அதிகக் குளிர்ச்சியில் தொடர்ந்து இருந்தால் தோலில் நீர் வற்றி தோல் வறண்டு அழற்சி வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் டாக்டரை மட்டும் பார்த்தால் பயன் இல்லை; ஏ.சி. மெக்கானிக்கையும் பார்க்க வேண்டும்.

ஏ.சி-யை முறையாகப் பராமரித்தால் மட்டும் போதுமா என்றால் போதாது. ஏ.சி. அறையில் இருப்பவர்கள் கட்டாயம் தங்களையும் தாங்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஏ.சி. அறையில் காற்றோட்டம் இருக்காது. இதனால், நோயுற்ற ஒருவரின் வாய், சுவாசம் போன்றவை மூலம் அங்கு இருப்பவர்களுக்கு எளிதில் நோய்த் தொற்று பரவும். சிலர் எச்சில் தெறிக்க, உரையாற்றுவார்கள். அவர்கள் ஏ.சி. அறையைத் தவிர்ப்பது அந்த அறையில் இருக்கும் மற்றவர்களுக்கு நல்லது. மேலும் ஏ.சி. அறையில் அழுக்கு சேர்ந்தாலும் துர்நாற்றம் உருவாகும். சிலர் பல நாட்கள் துவைக்காத அழுக்கு சாக்ஸ் அணிந்து வந்து கமுக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள். இன்னும் சிலர் காலணிகளைக் கழுவாமல் அணிந்து வருவார்கள். அதில் நாட்பட்ட அழுக்கும் வியர்வையும் கலந்துகட்டி செத்த எலியின் வாடையை உருவாக்கும். இவை அனைத்தும் சுவாசக் கோளாறு, நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்குக் கூடுதல் தொந்தரவு, தோல் அழற்சி போன்றவற்றை உருவாக்கும். எனவே, ஏ.சி. அறை மட்டும் அல்ல... அங்கு இருப்பவர்களும் சுத்தமாக இருப்பது அவசியம்.

நமது உடலின் ஆரோக்கியமான வெப்ப நிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். இது ஏறவும் கூடாது; இறங்கவும் கூடாது. சிலர் காருக்குள் ஏ.சி-யைப் போட்டுவிட்டு ஜன்னல், கதவுகளை அடைத்துக்கொண்டு தூங்குவார்கள். நீண்ட நேரம் அப்படி இருக்கும்போது குளிர்நிலை அதிகமாகி உடல் வெப்ப நிலை குறையும். அப்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறையும். இதனால், தூக்கத்திலேயே மயக்கம், மூச்சுத் திணறல், கை கால் விறைப்பு ஆகியவை ஏற்பட்டு மரணம்கூட நேரிடலாம்.

இன்னொரு விஷயம்... ஏ.சி. இயந்திரத்தில் இருக்கும் ஹீலியம் வாயு கசியும்பட்சத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும். தீ விபத்தை உருவாக்கும்'' என்கிறார் இளங்கோ.
மொத்தத்தில் ஏ.சி-யில் இருப்பது தவறு இல்லை. எப்படி இருக்கிறோம்... இயந்திரத்தை எப்படிப் பராமரிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நமது உடலின் ஆரோக்கியம்.

வியாழன், 17 ஜனவரி, 2013

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?


டாக்டர் கல்பனா நரேந்திரன்
நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் செல்லும் முன்பாகவே கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெற்றோற்களின் கவனத்திற்க்கு...
பார்வைக் குறைபாடுகள் (Refractive Errors)
பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. பார்வைக் குறைபாட்டை மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. தூரப்பார்வை (Long sight), கிட்டப்பார்வை (Short sight) மற்றும் சமச்சீரற்ற பார்வை (Astigmatism).

பார்வைக்குறைபாடுகளின் அறிகுறிகள்:
* கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்த்தல்.
* புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படித்தல்.
* கண்களை சுருக்கிப் படித்தல்.
* தலைவலி அல்லது கண்வலி.
* மாறுகண்
- போன்றவை பார்வைக் குறைபாடுகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.
   
மாறுகண் (Squint)
மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு குறைபாடு. இது குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தை பாதிக்கும். இந்த குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாகும். இல்லாவிட்டால் மாறுகண் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

சோம்பலுற்ற கண் (Amblyopia)
சாதாரணமாக இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளை பார்க்கும்போது, ஒரே மாதிரியான உருவம் மூளையைச் சென்றடையும். அப்படி இல்லாமல், இரண்டு வேறுபட்ட உருவங்கள் தெரிந்தால் இதை சோம்பலுற்ற கண் என்று மருத்துவ அறிஞர்கள் அழைக்கின்றனர். குழந்தையின் மூளை, நல்ல பார்வையுள்ள கண்ணிலிருந்து வரும் உருவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து வரும் உருவத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்கிறது. இதனால் அந்த கண்களில் நாளடைவில் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

சோம்பலுற்ற கண் ஏற்படக் காரணங்கள்:
* மாறுகண்
* பிறவியிலேயே ஏற்படும் கண்புரை
* கருவிழியில் தழும்பு
* குறைமாதக் குழந்தை
* இரண்டு கண்களிலும் வேறுபட்ட பார்வைத் திறன் இருந்தும், ஆரம்பத்திலேயே உரிய கண்ணாடி அணியாமல் இருத்தல்.
   
நோய் கண்டவுடன் செய்ய வேண்டியது
இந்த குறையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இல்லாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும். தாமதமாக சிகிச்சை பெறும்போது இருக்கும் பார்வையை பாதுகாக்கலாம்.

கண்புரை (Cataract)
கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.
டாக்டர் கல்பனா நரேந்திரன், டி,ஒ., டி என் பி. அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

தைராய்டு தொல்லைக்கு தீர்வு!--மருத்துவ டிப்ஸ்


எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது: 
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி.
  இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும். 

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது
  முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம். 

உடலில் அயோடின் உப்பின் அளவு
  குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். 

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே
  சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும். 

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு
  பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.                  

ரெசிபி

கோதுமை பால் பர்பி: முழு கோதுமை இரண்டு கப் எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அதை நன்றாக அரைத்து இரண்டு கப் கெட்டிப் பால் பிழியவும். அடி கனமான பாத்திரத்தை எடுத்து இரண்டு கப் சர்க்கரை போட்டு வறுத்துக் கொள்ள
  வேண்டும். அதில் கோதுமைப் பால் சேர்த்து பின்னர் நெய் மற்றும் முந்திரி சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பால் கெட்டியான பின் ஒரு தட்டில் ஊற்றி பர்பிகளாக வெட்டி சாப்பிடலாம். 

அவல் பக்கோடா: அவல் இரண்டு கப், வெள்ளை ரவை கால் கப், பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் தேவையான அளவு, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை. அவலை இரண்டு நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும். ரவை, பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை பக்கோடா பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
 

தேங்காய் பால் உருளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 2 கப் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சிறிது. அரிசி மாவு அல்லது பொரி கடலைத் தூள் 2 டீஸ்பூன். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பிரியாணி பொருட்களைப் போட்டு வதக்கவும்.
 

அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போடவும். தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி மாவு, புளி அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு புதினா கொத்தமல்லி, பொரி கடலைப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம்.

டயட்

உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும்.
  டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. 

தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 

உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்என்கிறார் சங்கீதா.
 

பாட்டி வைத்தியம்

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.
 

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.
 

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.
 

அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.
 

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.
 

தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts