எல்லோரும் தம்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு
நடப்பதில்லையே. ஒரு சிலர் தான் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கிறார்கள்.
சாதனையாளர்களாகிறார்கள். வாழ்வில் பெயரும், புகழும்
பெறுகிறார்கள்.
பலர் வெற்றி பெற
முடியாமல் தோல்வியில் துவண்டு போகிறார்கள். நொந்து நூலாகி விரக்தியின் காரணமாகத்
தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை. கருணையுடைய கடவுள் ஒருசிலருக்கு மட்டும் வெற்றியைத் தந்துவிட்டு,
மற்றவர்களிடம் ஓர வஞ்சனையுடன் நடந்து கொள்கிறானா? இல்லையே
வெற்றி பெற முடியாமல்
போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றி
பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அதுதான் உழைப்பு, மன
உறுதி, விடாமுயற்சி. இக்கட்டுரையில் வெற்றிக்கான பல
படிக்கட்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கல்வி பயிலும் மாணவன், நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கினால், விரும்பிய கல்லூரியில் சேர்ந்து, விரும்பிய
பாடத்தை எடுத்துப் படிக்கலாம். யாரையும் சிபாரிசுக்கென்று அணுகி அலையத்
தேவையில்லை. அப்படி மதிப்பெண்கள் பெற முடியாதவர்கள் தான் கிடைத்த கல்லூரி, கிடைத்த பாடம் என்று சேர்ந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
ஆளாகிறார்கள்.
நாம் செல்ல வேண்டிய
பாதையைத் தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. அப்பாதை இரண்டாகப் பிரிகிறது என்று
வைத்துக்கொள்வோம். வலப்புறம் திரும்பி நடந்தால் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால்
போகப்போக அந்தப் பாதையில் பயணிப்பது உற்சாகமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்
இன்னொரு பாதை
இடப்புறமாகப் பிரிகிறது. இந்தப்பாதையில் சென்றால் ஆரம்பத்தில் மகிழ்ச்சி தருவதாகத்
தோன்றினாலும், பின்னால் போகப்போகத் துன்பத்தைத் தருவதாக
அமைகிறது. இதில் எந்தப் பாதையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதைப்
பொறுத்து நமது வெற்றியும், தோல்வியும் அமைகிறது.
வலப்புறப் பாதையானது
உழைப்பு. இடப்புறப் பாதை என்பது சோம்பல், ஆர்வமின்மை
என்பதாய் வைத்துக்கொள்வோம். இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே எது சரி
என்று புலப்படும். விடாமுயற்சிக்குத் திடமான, உறுதியான
மனம் தேவை. நாம் மேற்கொள்ளும் பணிக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளையும், சிரமங்களையும், சிக்கல்களையும் சலிப்பு,
சிறுசிறு பிரச்சனைகளையும் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு
வெற்றி காண வேண்டும் என்று ஒரே எண்ணத்துடன், முனைப்புடன்,
நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
இடையில் ஏற்படக்கூடிய
தடங்கல்களைக் கண்டு தளராத மனம், சலிப்படையாத
உள்ளம், எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்ற
நம்பிக்கை, தீராத பிரச்சனை எதுவுமே கிடையாது. எல்லாமே
நமது மனப்பான்மையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டு வெற்றி கிட்டும் வரை
தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
எண்ணிய எண்ணியாங்
கெய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்
என்று நமக்கு நம்பிக்கையை
ஊட்டுகிறார் வள்ளுவர். நம்பினோர் கெடுவதில்லை. எண்ணம்போல வாழ்வு. முயற்சி தம்
மெய்வருத்தக் கூலி தரும் என்றெல்லாம் ஆன்றோர் சொல்லி வைத்திருப்பது இதன்
அடிப்படையில் தான்.
ஒருமுறை, இருமுறை என்று முயன்றுவிட்டு, வெற்றி
கிட்டவில்லையே என்று துவண்டு போவோரே பலர். வெற்றி கிட்டும் வரை விடாது
முயற்சிப்பவனே பலன் பெறுகிறான்.
நான்கு இடங்களில் கிணறு
தோண்டுவதைவிட, ஒரு இடத்தில் ஆழமாகத் தோண்டினால் தண்ணீர்
கிடைக்குமன்றோÐ அதுபோல நம் முயற்சியை ஒருமுகப்படுத்தித்
தொடர்ந்து முயன்றோமானால் வெற்றி பெறுவது நிச்சயம்.
அதற்கான தாரக மந்திரம்
இதுதான் – உழைப்பு, விடாமுயற்சி,
குறிக்கோள், தன்னம்பிக்கை. செம்மையான
திட்டம் வேண்டும். எதனை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டுச் செயல்படும்போது,
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இடையே ஏற்படக் கூடிய
இடையூறுகளை எப்படிக் களைவது என்று ஆராய்ந்து, தேவையானால்
வழிமுறைகளை மாற்றிக்கொண்டு, தொடர்ந்து முயன்றால்
வெற்றிதான்.
விளையாட்டுகளில் தடை
ஓட்டம் என்ற ஒன்று இருக்கிறது (ஏன்ழ்க்ப்ங்ள் தஹஸ்ரீங்). இடையிடையே உள்ள பல
தடைகளைத் தாண்டிக் குதித்துத் தான் வெற்றிக்கம்பத்தை எட்ட வேண்டும். 10, 15 பேர் பங்கு பெற்றாலும் ஓரிருவரே இறுதியில் வெற்றி பெறுகிறார்கள். இடையே
சோர்ந்து போய் விலகுபவர்களும் உண்டு. கடைசியாக வெற்றிக்கம்பத்தைத் தொடும்போது
தோல்வியுறுபவர்களும் உண்டு. தளரா உறுதியுடன், கோப்பையைப்
பெற்றே தீர்வது என்ற உறுதியுடன் பெறுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏகலைவன் துரோணரிடம்
சென்று வில் வித்தையைக் கற்றுத் தருமாறு பணிவுடன் கோரினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஏகலைவன் மனம் சோரவில்லை. துரோணரைப் போல ஒரு
பதுமையைச் செய்து, அச்சிலையையே தனது மானசீகக்
குருவாகக்கொண்டு வில் வித்தை பயின்றான். கடைசியில் அவனது இடையறாத முயற்சி, பயிற்சி அவனை அர்ஜுனனுக்கு சமமான
வில்லாற்றல் மிக்க வீரனாக
ஆக்கியது என்பது மகாபாரதக்கதை.
சரியான திட்டம் இல்லாவிட்டால்
வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. நமது இலக்கை முதலில் நிர்ணயம் செய்துகொண்டு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்துவோமானால் நம் எண்ணம் இறுதியில்
பயனைத்தரும் என்பதற்கு மேற்சொன்ன இரண்டு புராணக்கதைகளுமே தக்க சான்றாகும்.
இல்லாத ஒன்றைக் குறித்து
வருந்துவதைவிட, இருக்கின்ற ஒன்றை வைத்து, கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, செம்மையாகத்
திட்டமிட்டு, நிறைந்த வாழ்க்கை வாழலாமே. முயன்றால்
முடியாததொன்றில்லை.
பெருமைக்குரிய நமது
முன்னால் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தது சின்னஞ்சிறு ஊர்.
எளிமையான குடும்பம். சாதாரண சூழலில் கிராமத்தில் படிப்பு. செல்வச் செழிப்போ, வசதி வாய்ப்போ இல்லை. ஆனால் அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், ஆர்வமும், தளராத மனமும், சாதிக்க வேண்டும் என்ற
முனைப்பும் அவரைச் சிகரத்தை எட்ட வைத்தது. அவரது உறுதிக்கும், உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கடவுளும் துணையாக நின்றிருக்கிறார்
என்பது உண்மையல்லவா.
மதி இருந்தால்
விதி என்ன செய்யும்?
விதி என்ன செய்யும்?
வெற்றி பெறாதவர்கள் தான்
விதியின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார்கள். பிரச்சனையே
இல்லாத வாழ்க்கை இல்லை. ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாவது சிலரது சோகம். பிரச்சனையைக்
கண்டு துவளாமல், அதனை எப்படிச் சமாளிப்பது என்று தைரியமாக
எதிர்கொள்ளும்போது, அமைதியாக சிந்திக்கும் போது வழி
பிறக்கிறது. பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் நமக்கு
ஒரு பாடமாக அமையட்டும்.
அமெரிக்க தத்துவஞானி
திரு. பிராண்ட் ரயஸியின் “எம்பவர் மீ ஆன் லைன்”
என்ற நூலில் வெற்றிக்கான பதினெட்டுப் படிக்கட்டுகளைக்
குறிப்பிட்டுள்ளார். அவற்றை நாமும் பின்பற்றி வெற்றி பெறலாமே.
1. முதலில்
பெரிதாகக் கனவு காணுங்கள்.
2. வழி நடத்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள். அந்த லட்சியக் கனவு நிறைவேறுவதற்கான வழிவகை என்ன? என்பதை நன்கு தீர்மானித்துச் செயல்படுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் அடைய வேண்டிய பத்து லட்சியங்களைக் குறித்து வைத்துக்கொண்டு, அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முயலுங்கள்.
3. நீங்கள் உங்களைச் சுயதொழில் முனைவோராக (நங்ப்ச்-ங்ம்ல்ப்ர்ஹ்ங்ழ்) நினைத்துக் கொள்ளுங்கள்.
4. நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும் நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
5. எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக, சிறப்பாகச் செய்ய முயலுங்கள். தொழில்நுட்பம் பற்றிச் சிந்தித்தால் இன்னும் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
6. கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச் சற்றேனும் இடம் தராதீர்கள்.
7. தொடர்ந்து முன்னேற்றத்தின் ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள். மேன்மேலும் அந்தத் தொழிலை எப்படித் திறம்பட வளர்த்துக் கொள்வது என்பதை அறிந்து செயல்படுங்கள். மேன்மேலும் கற்றுக்கொள்பவராக, அதில் முழுமையாக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
தினமும் ஒருமணி நேரமாவது உங்கள் துறை சம்பந்தப்பட்டவரைப் பற்றி படியுங்கள். மேன்மேலும் அது சம்பந்தமான பலப்பல விஷயங்களையும், யுக்திகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
8. உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் சேமியுங்கள் ‘நஹஸ்ங் ரட்ண்ப்ங் வர்ன் நல்ங்ய்க்’ என்பதை உங்களது தாரக மந்திரமாகக் கொள்ளவும். அதற்குமேல் மீதியுள்ள சம்பளத்தில் செலவழியுங்கள்.
9. உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின் முழுநுணுக்கங்களையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இதுபோட்டிகள் நிறைந்த உலகம். போட்டியைச் சமாளிப்பதற்கேற்ப உங்கள் தொழில் அல்லது வியாபார யுக்தியை அவ்வப்போது அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.
10. மற்றவர்களுக்குச் சேவை செய்ய முயலுங்கள். ‘இன்ள்ற்ர்ம்ங்ழ் இஹழ்ங்’ (வாடிக்கையாளர்களது தேவை பற்றிய கவனம்) என்பது மிகமிக அவசியம். வாடிக்கையாளர் திருப்தி தான் உங்களுக்கு வரப்பிரசாதம். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த இன்னும் ஏதேனும் செய்ய முடியுமா என்பதைக் கவனித்துச் செயல்படுங்கள். இதுவே உங்கள் வளர்ச்சியின் தாரக மந்திரம்.
11. உங்களது தொழில் வளர்ச்சியில் தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும் என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 12. உங்களைப் போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
12. உங்களைப்போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
13. முக்கியமாக நிறைவேற்ற வேண்டியவற்றை முன்னுரிமையுடன் நிறைவேற்ற வேண்டியவை, அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை என்பதை நன்கு தீர்மானித்து, பட்டியலிட்டுக் கொண்டு செயல்படுங்கள். Plan Your Properties. Plan Accordingly and Complete Them Important, Priority, Urgent என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
14. ஒரு உயரத்திலிருந்து அடுத்த உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். சுழற்சியையும், போக்கையும், மாற்றங்களையும் அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.
15. உடன் பிறந்த கற்பனைத் திறனை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் எப்படி சரி செய்வது, இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.
16. எப்போதும் உங்களைச் சுற்றிலும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சூழ வாழுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு படியிலும் வெற்றியாளர் சூழ வாழுங்கள்.
17. உடல் நலமுடன் இருந்தால்தானே உங்களால் எதையும் சாதிக்க முடியும். ஆகவே, உங்கள் உடல் நலனில், ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்.
18. பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள். கவலையும், அச்சமும் தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன இந்த 18 முறைகளை நீங்கள் சரியாகப் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக