லேபிள்கள்

சனி, 29 டிசம்பர், 2012

School - போக குட்டீஸ் அழராங்களா? - இதோ டிப்ஸ்!


குழந்தை பிறந்தது முதல் மூன்று வயதுவரை நம் கண்பார்வை எதிரிலேயே வளர்ந்திருக்கும். எந்த ஒரு விசயத்திற்கும் பெற்றோர்களை நாடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. திடிரென குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அவர்கள் அழுது ஆர்பார்ட்டம் செய்வது இயல்பானதுதான்.
ஆனால் நன்றாக பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல மறுத்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்து உளவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயத்தை போக்குங்கள்!
முதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம்.முதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது.

எண்ணங்களை திசை மாற்றுங்கள்!
பயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். "அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்தைக்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இருந்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும்.
பெண்குழந்தைகளின் அச்சம்!வளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும். அதை விடுத்து அவர்களை பள்ளி செல்ல கட்டாயப்படுத்தும்போதுதான் அவர்கள் தற்கொலை போன்ற விபரீமான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.

பதட்டத்தை போக்குங்கள்!
அதேபோல் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடும்போது கத்தி கூச்சல் போடாமல் அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள்.

நாய்கள் குறித்து விளக்கம்!
குழந்தை நாய்களுக்குப் பயப்படும்போது அதை கவனமாக கையாளவேண்டும். நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி இருட்டில் பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, அதற்காக பயப்படக்கூடாது" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம்.
நன்றி: மயூரா அகிலன்
http://abuwasmeeonline.blogspot.com/2012/06/school.html

வியாழன், 27 டிசம்பர், 2012

ஜீன்ஸ் (Jeans) டிரஸ் - ஓர் ஆய்வு!


ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஓர் உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. 

ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.

பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிடும்.
 

ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர்.

ஜீரணம் பாதிக்கும்

நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
 

அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்மைக் குறைபாடுபெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்' என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். ஆண்களின்

இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது ஆண்களின் விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருக்கமான உடை அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரோக்கியமான உடை

ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.

`ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும். தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றி: ஜெயா

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தோல்விக்கு 'குட்பை' சொல்லுங்கள்...


எடுத்த முயற்சிகளிலெல்லாம் தோல்வி.. எங்குப் பார்த்தாலும் துரதிருஷ்டத்தின் ஆதிக்கம்.. ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி பின்நோக்கித் தள்ளிவிடுகிறது உலகு. எனக்கும் மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது..நான் மட்டுமே இந்த உலகில் அதிர்ஷ்டம் இல்லாதவன். இப்படி மனிதன் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் வாழ்ந்தென்ன லாபம்? என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாலே அவன் அடுத்து எடுக்கப் போகும் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும். 

வாழ்க்கையில் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தால்... ஒரு மனிதன் எத்தனைநாள்தான் இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்க முடியும். இறுதியில் இதனால் விளைவது விரக்தி. விரக்தியின் முடிவு அல்லது வெளிப்பாடுதான் இந்த தற்கொலை எண்ணம்.
 

இப்படித்தான் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தோல்விகளனைத்தையும் சேர்த்துவைத்துக்கொண்டு, துக்கம் மிகுதியால் இனி வாழவே தான் அருகதையற்றவன் என்று எண்ணி தற்கொலைக்கும் முயல்கிறார்.

இன்றிரவு என்னுடைய கதையை முடித்துக்கொள்கிறேன்
 என்று முடிவெடுத்துவிடுகிறார். நடு இரவு..தற்கொலை எண்ணத்துடன் வெளியில் நடக்கிறார். அருகில் அழகான ஏரி. அந்த ஏரியில் குதித்து தன்னுடைய கதையை தானே முடித்துக்கொள்ள எண்ணி விரைகிறார்..  நிசப்தமான சூழ்நிலை.. உடலுக்கு இதமான குளிர்காற்று வீசுகிறது.. இரவில் பனிக்கொட்டுகிறது.. ஏரியின் அருகில் வந்துவிட்டார்.. இனி குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் என்ற திடமனதோடு ஏரியை நெருங்கிவிட்டார்.. இதோ குதிக்கப்போகிறார்.. ஏரி நீரில் அழகான வெண்ணிலா பிரதிபலிக்கிறது. அடர்ந்த இரவு வானில் நட்சத்திங்கள் ஜொலிக்கிறது.

இலேசாக அடித்த காற்றில் தலைகேசம் பரக்கிறது. அருகில் தாயார் இருந்து பாசத்தோடு தலையை கோதிவிடுவது போன்ற உணர்வு. தாயாரை நினைத்ததும் மனது விம்முகிறது. நீரில் கண்ட நிலவே அழகாக இருக்கிறது. அலைந்தாடும் நீரில் அதுவும் அசைவது போன்ற தோற்றத்தை ரசிக்கிறது. நீரில் இருக்கும் தோற்றமே இப்படி என்றால்.. நிஜமான நிலா எப்படி இருக்கும் என்று வானத்தை அன்னார்ந்து பார்க்கிறார்.
 

முழுநிலவும் ஆகாயத்தில் ஒளிவெள்ளமாய் ஜொலிக்கிறது. நட்சத்திரங்கள் கூடவே கண்கள் சிமிட்டு ஜாலம் செய்கிறது. என்ன அருமையான இயற்கை... இயற்கையின் படைப்பில்தான் எத்தனை அழகு...! இந்த நிலவெங்கே இருக்கிறது.? நாம் இருக்கும் பூமி எங்கே இருக்கிறது..? பூமியைச் சுற்றும் நிலவு... சூரியனைச் சுற்றும் பூமி..இப்படி ஒன்றை ஒன்று சார்ந்தேதானே இயங்கிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஒருநாள் இனி எல்லாமே முடிந்துவிட்டது. அவ்வளவுதான் என்று ஒரு நாளேனும் எண்ணியிருந்தால் என்னவாகியிருக்கும்? ஒருநாளேனும் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவைத்திருந்தால் பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கும்?
 

இப்படி மனம் சிந்தனை செய்கிறது..

இப்படி சிந்தனைகளை ஓடவிட்டவர்.. திடீரென தான் எதற்கு வந்தோம்.. இப்போது என்ன சிந்தனை செய்துகொண்டிருக்கிறோம் என்று எண்ணினார்.

தற்கொலை எண்ணத்துடன் விரைவாக வந்த அவர், முதலில் இயற்கை ரசித்ததும்,, பிறகு இயற்கையின் செயல்பாடுகளைப் பற்றி சிந்தனை செய்ததையும் நினைத்தார். தற்போது தற்கொலை செய்யும் எண்ணத்தின் வீரியம் குறைந்திருந்தது. அது வேகமற்று செயலிழந்திருப்பதை உணர்ந்தார்..

அமைதியான சூழ்நிலையில் இந்த பிரபஞ்சம் தன்னிடம் ஒரு செய்தியை சொல்வதாக உணர்ந்தார்.

"உன் உயிரை எடுத்துக்கொள்ள எனக்கு மட்டுமே, படைத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. உனக்கோ, உன்னைச் சார்ந்தவருக்கோ அந்த உரிமை இல்லை.. நீ என்னில் ஒரு அங்கம்.. உன்னை தேவை என வைத்திருப்பதும், தேவையில்லையென நீக்கம் செய்வதும் என்னால் மட்டுமே முடியக்கூடிய செயல்.. இப்போது நீ செல்.. உலகில் வெல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. உனக்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரியும். உன்னில் நீ தாழ்வு எண்ணம் கொள்ளாதே. மற்றதை உன் மனமே பார்த்துக்கொள்ளும்"
 என்று அறிவுறுத்தியதாகப்பட்டது.

உடனே நான் ஏன் சாக வேண்டும்? தற்கொலை செய்ய வேண்டும்? தற்கொலை செய்துகொள்ள, உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்லையே.. படைத்தது பிரபஞ்சமாகிய நீ, உயிர்த்தது பூமியில்... அப்படி இருக்கையில் என் உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கென்ன உரிமை இருக்கிறது. என்ற சிந்தனை மேலோங்கியது.
 

உடனே அந்த இடத்திலிருந்து 'சட்'டென எழுந்துவிட்டார். ஒரு உத்வேகம் தன்னுள் எழும்பியதை அவர் உணர்ந்தார். உடனே விரைந்தார் வீட்டிற்கு..உலகினில் உயர்ந்தார். யார் அவர்.. ?

பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேனாட்டவர் தான். தனது 32 வயதிலேயே இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை தற்கொலை எண்ணத்தோடு சென்றவர் இவர்.. அப்போது தற்கொலை செய்திருந்தால் உலகிற்கு அவர் யாரென்று தெரியாமலேயே போயிருக்கும்.
 
இந்த மேதை செய்த சாதனைகளனைத்தும் இல்லாமலேயே போயிருக்கும் இல்லையா?. 

இயற்கையின் மடியில் அவர் இறுதி மூச்சுவிடும்போது எந்நிலையை எட்டியிருந்தார் தெரியுமா?
 

1. கணித மேதை(Mathematical Genius),
 
2. பொறியாளர்(Engineer)
3. கவிஞர்(Poet)
 
4. கட்டிடக்கலை நிபுணர்(Architect)

என பலதுறையில் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனைகளைப் படைத்தவர். கிட்டதட்ட நூற்றிஎழுபது கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்ற மிகப் பெரிய நிலையை, சாதனையை எட்டியிருந்தார். ஒரு வேளை அவர் தனது 32 வயதில் தற்கொலை செய்திருப்பாரேயானால் மேற்கண்ட சாதனைகளும் சாத்தியமில்லை.
 இந்தக் கட்டுரைக்கு அவர் உதாரணமாகவும் வந்திருக்க முடியாது. 

எனவே நண்பர்களே.. வாழ்க்கையில் மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் ஏதாவது ஒருவிதத்தில் துன்பம், துயரம் இவை போன்றவைகள் வரவே செய்யும். இது இயற்கை. இயற்கையில் மேடுபள்ளங்கள் இருப்பதுபோல...மனிதனுக்கும் இன்ப துன்பங்கள் இரண்டுமே மாறி மாறி வருவது இயற்கை.

இவற்றிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக, சமயோசிதத்துடன், துக்கத்தை உள்வாங்காமல், இயற்கையாக, இயல்பாக நமது மனத்தை மாற்றி, அந்த துன்பத்தையே ஒரு அனுபவப் பாடமாகக்கொண்டு மீண்டும் வெற்றிப்பெற எண்ண செய்ய வேண்டும் என்று சிந்தித்து, புத்துணர்வு பெற்று, புரட்சிகரமாக செயல்களை செய்து, வெற்றிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். இப்படி யார் செய்கிறானோ.. அவனே மனிதன்.. அவனே வெற்றியாளன்.. அவனே இந்த பிரபஞ்சத்தின் உண்மையான உயிர்நாடி..
 

http://www.thangampalani.com/2012/06/how-to-avoid-suicidal-thoughts.html

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

வலியில்லாத பிரசவம்!


 மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.
பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
  • 1. குழந்தையின் எடை.
  • 2. கருவறையில் குழந்தையின் நிலை.
  • 3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
  • 4. சுருங்கும் தன்மையின் வலிமை.
  • 5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு -
என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.
இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் எபிடியூரல் டெலிவரிஎன்பது! இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..
எபிடியூரல் டெலிவரிஎன்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.
நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.
எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.
ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.
எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!
குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.
ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.
இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.
இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.
எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘
தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே? இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா?
பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘
எபிடியூரல் அனெஸ்தீஸியாமூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்
பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!
இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் எபிடியூரல் அனெஸ்தீஸியாமட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது
டாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.
டாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.
நன்றி: - பவள சங்கரி குமுதம்

வெள்ளி, 21 டிசம்பர், 2012

அழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்!


உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளை மட்டும் செய்வதில்லை. அவை மேனி எழிலை பாதுகாக்கவும், செய்கின்றன. நாம் சமையலறையில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் உணவு சமைக்கவும் மட்டுமல்ல இது மிகச்சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இது பிரசவகால தழும்புக்களை போக்கவும், பித்தவெடிப்புகளை நீங்கும் மிகச்சிறந்த மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.
உப்பு, சர்க்கரை
உப்பும் சர்க்கரையும் உணவு சமைப்பதில் இன்றியமையாத பொருளாக உள்ளது. அதேசமயம் இது முகத்திலும், கை, கால்களிலும் இறந்த செல்களை நீக்கப் பயன்படும் பொருளாக பயன்படுகிறது.
ப்ளீச் பவுடர்
முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் திட்டுகள்தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த கருப்பு முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற ப்ளீச்பவுடர் பாசிப் பருப்பு மாவு. இதனுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருமை காணமல் போகும்.
பேஷியல் பழக்கூழ்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.
அழகு ஆப்பிள்
ஆப்பிள் பழம் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
ஆப்பிள் ஷாம்பு
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
மின்னும் முகம்
நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.
வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்
 நன்றி: ஒன்இந்தியா.காம்

புதன், 19 டிசம்பர், 2012

இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!


கோபம் இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின்
 வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது.

அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது.

கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.

அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.
ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) புகாரி, திர்மிதீ, அஹ்மத்).
கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) புகாரி, முஸ்லிம்).
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) புகாரி, முஸ்லிம்).
அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல.
மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள். தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.
சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.

சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர் (ரலி) புகாரி).
பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) திர்மிதீ, அஹ்மத்)

இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது.
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
இணையத்திலிருந்து

திங்கள், 17 டிசம்பர், 2012

கணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?


காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது கோர்ட் வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.
தம்பதியராக இருந்தபோது உயிருக்கு உயிராக இருந்துவிட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்றைக்கு திருமணம் நடைபெறுவது என்பது சிரமமான, செலவு ஏற்படுத்தும் விசயம். ஆனால் ஒரு நொடியில் பிரிந்து விடலாம் என்று இருவரும் முடி வெடுப்கின்றனர். எனவே பிரிவு ஏற்படாமல் தவிர்க்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைவது தாம்பத்ய உறவுதான். பல்வேறு சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கம்தான் சிக்கலுக்கு காரணமாகிறது. தன்னை நேசிக்கும் கணவரையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அடிக்கடி ஐ லவ் யூ சொல்லி மனைவியின் மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.
மன்னிப்பது தெய்வ குணம்
தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.
சந்தோசமாக பேசுங்கள்
கணவன் மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.
பொறுப்புணர்வு
குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான். ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது. பணத்தை விட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மை தரக்கூடியது.
நேர்மறை வார்த்தைகள்
தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
எதற்குமே இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று கூறுவதனால் உறவு பலப்படுகிறது என்பதை அறிந்து நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.
காது கொடுத்து கேளுங்கள்
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட இதயப்பூர்வமாக கேளுங்கள். ஏனெனில் அதைத்தான் உங்கள் மனைவி அதிகம் எதிர்பார்க்கிறார்.
வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான முக்கிய காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்கா விட்டாலும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளலாமல் இருக்கின்றனர்.
ஆரோக்கியத்தில் கவனம்
பல ஆண்கள் தங்களின் ஆரோக்கியம் பற்றி கவலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும். அதேபோல் மனைவிக்கும் மாதத்தில் சில நாட்கள் விடுமுறை அளியுங்கள். ஏனெனில் ஓய்வற்ற நிலையில்தான் பிரச்சினைகள் எழுகின்றன.அந்த நாளில் உங்கள் மனைவி எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானது. இதுவே பிரச்சினைகளுக்கான முற்றுப்புள்ளியாகும்.
நன்றி: வன்னிமீடியா

சனி, 15 டிசம்பர், 2012

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே…


1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.
2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.
3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.
4. தினசரி நான்கு `கப்காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.
6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவுவகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களைகொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.
9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.
10. சாதாரணமாக குளிர்பானஙகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.
12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.
13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.
14. மதுபானம் அருநதும் வழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நிறுத்த வேண்டும்.
15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.
16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.
17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.
19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.
20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.
21. பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.
நன்றி: தகவல் களஞ்சியம்

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts