லேபிள்கள்

புதன், 7 நவம்பர், 2012

வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி ? எவ்வளவு செலவு ஆகும் ?


வாகனம் நம் அன்றாட பயன் பாட்டு நிலை என்ற நிலை மாறி,இன்று ஆடம்பரம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாகனம் என்ற நிலை மாறி ஒரு வீட்டிலும் இரண்டுக்கு கீழே வாகனம் இருப்பது அரிதாகி விட்டது.


ஒன்று அனைவரின் வருமானம் உயர்ந்துள்ளது.மற்றொன்று நிதி நிறுவனத்தின் தாராள போக்கு, ஒருவனுக்கு உண்மையான தகுதிகளை பற்றி முழுமையாக ஆராய்யாமல் செக்கும்,இருப்பிட முகவரி கொடுத்தால் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் இங்கு பல பல.

 

நாம் வாங்கும் வாகனத்திற்கு பல புதிய எக்ஸ்ரா பிட்டிங்களை மாட்டுவோம்,அதில் கிடக்கும் திருப்தியே தனி தான் .அதே வாகனம் ஆறு மாதம் கழித்து செலவு செய்ய மனம் அதிக ஈடுபாடு காட்டாது அல்லது கொடுக்காது .ஆசை அடங்கி விடும்.இது மனித இயல்பு.
கூடுமான வரை வாகனம் வாங்கும் போதே செய்ய வேண்டிய பிட்டிகை செலவு செய்வது நல்லது.

சரி கதை ட்ராக் மாறுகிறது,விஷயத்திற்கு வருவோம்
நம்முடைய வாகனத்தை வெளி உலகிற்கு தெரிய படுத்துவது ஒன்று வாகனத்தின் ஸ்டெயில் அழகு அடுத்தது கூடுத்தல் அழகு பிட்டிங் சேர்ப்பு மற்றும் வாகனத்தின் பதிவு எண்.

வாகனம் மட்டும் பந்தாகவாக இருந்தால் பத்தாது,அதன் பதிவு எண்ணும் பந்தாவாக இருந்தால் தான் மதிப்பு.பல லச்சம் போட்டு வாகனம்வாங்கும் நமக்கு சில ஆயிரங்கள் போட்டு ஃபேன்சி வாங்குவதில் என்னை பொறுத்த வரையில் தவறு இல்லை.
நமது கார் வெளியே எங்கு நின்றாலும் கார் நம்பரை பார்த்து இன்னார்ருடைய கார்தான் என்று கணிக்க வேண்டும்.

 

ஃபேன்சி நம்பர் வாங்க எவ்வளவு செலவு ஆகும் ?


இரண்டு சக்க வாகனத்திற்கு மட்டும் முன்பு இருந்த விலையே நிர்ணிக்கப்பட்டுள்ளது அதாவது ரூபாய் 2000/- ஆகும்.
நான்கு சக்கர வாகனத்திற்கு 4 இலச்சத்திற்குள் சந்தை மதிப்பு பெற்றுஇருந்தால் முன்பு ரூபாய் 5000/- ஆகும்.தற்பொழுது 10,000/- ஆக உள்ளது.


அதுவே 4 இலச்சத்திற்கு மேல் உள்ள வாகனத்திற்கு முன்பு ரூ8,000/- தற்பொழுது 16,000/-ஆகியுள்ளது.
மேலே கூறிய விலை அனைத்தும் தாங்கள் நேரில் சென்று விண்ணப்பித்து பெற்றால் மட்டுமே.புரோக்கர் மூலம் சென்றால் விலை சற்று கூடுதல் செலவு ஆகும்.
தாங்கள் கேட்கும் சில நம்பர்(4444,5000,1) இருந்தாலும் பல நேரத்தில் இல்லை என சொல்ல கூடும்.இது போன்ற எண்களை பெற புரோக்கர்களை நாடுவதை தவிர வேற வழி இல்லை.


RTO அலுவலகத்தில் பணி புரிவோருக்கும் புரோக்கருக்கும் பலமான தொடர்பு உண்டு.நேரில் கண்ட அனுபவம்.

ஃபேன்சி நம்பர் கட்டணத்தை தமிழக அரசு தனது கருணை உள்ளம் மூலம் தற்போது இரு மடங்காக ஆக்கியுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :


இண்டர் நெட்டில் இருந்தும் விண்ணப்பத்தை தர விறக்கிக் கொள்ளலாம்.RTO அலுவலகத்திற்கு வெளியே ஸிராக்ஸ் கடையிலும் கிடைக்கும்.


நீங்கள் வண்டி டெலிவரி எடுக்கும் முன்னமே பதிவு எண்ணை விண்ணபித்து பெற முடியும்.
நீங்கள் வாங்க இருக்கும் வாகனத்தின் இன்ஜின் எண்,சேஸ் எண் கண்டிப்பாக இருந்தால் மட்டுமே பதிவு எண் பெற விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பத்தில் உங்கள் வாகனம் உரிமையாளர் பெயர்,விலாசம்,வாகன
 இன்ஜின் எண்,சேஸ் எண் ,வாகன வகை,சீட் எண்ணிக்கை,மாடல்,தாரிப்பு நிறுவனம் பெயர் ஆகியவற்றுடன் செலுத்த வேண்டிய தொகை ,தாங்கள் விரும்பும் பதிவு எண் போன்றவை இருந்தால் போதும் அவ்வளவுதான்.தாக்கல் கேட்கும் பதிவு எண் தற்போது அங்கே என்ன சீரியல் வரிசையில் நம்பர் பதிய பட்டு கொண்டுருக்கிறொதொ அதில் உள்ள 1000 நம்பர்களில் பிடித்தை தேர்ந்தெடுக்கலாம்.


அதிஷ்டம் இருந்தால் கேட்ட நம்பர் கிடைக்கும்,இல்லையேல் காத்துஇருந்து அடுத்த சீரியலில் வரும்போது வாங்க வேண்டிய நிலை வரலாம்.

மற்றொரு முறை,

1000 எண்களை தாண்டி விரும்பும் நம்பர் வேண்டும் என்றால் இயக்குனர் அலுவலகம் மற்றும் அமைச்சர் அலுவலகம் மூலமாக பெற முடியும்.இதற்கு முன்பு கட்டணமாக ரூ20,000/- இருந்து தற்பொழுது 40,000/- ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பித்து முடித்தவுடன் அதற்கு சான்றாக இரஷீது வழங்கப் படும்.அது ஒரு மாத கால அளவு செல்ல தக்கது ஆகும்.அதற்குள் வண்டியை விற்கும் டீலரிடம் அந்த இரஷீதை கொடுத்தால் அவர்களே மற்ற வேலைகள் முடித்து விடுவார்கள்.


இதை வண்டி வாங்கும் முன்பே டீலரிடம் ஃபேன்சி நம்பர் தகவலை தெரிவித்துவிட வேண்டும்.இல்லையேல் சாதாரணமாக பதிவுக்கு வண்டியை அனுப்பி விடுவார்கள்.

 

ஃபேன்சி நம்பர் ஃபாம் தரவிறக்க கிளிக் செய்க

http://www.motorstar180.blogspot.com/2012/06/blog-post_17.html

கருத்துகள் இல்லை:

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது. இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்...

Popular Posts