லேபிள்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?


وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41
11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.

நேர்வழியை ஏற்றுக்கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தினரின் மீது வழிகெட்ட பெருங்கூட்டத்தினரால் அளவு கடந்த சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

வழிகெட்ட கூட்டத்தினர் ஒழுக்கக்கேட்டையும், பெரும் சீரழிவையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால்; பெருவெள்ளத்தை ஏற்படுத்தி அதில் அவர்கள் முழுவதையும் அழித்து விட்டு அவர்களின் சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு கூட்டத்தினரை காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக இறக்குவதற்காக இறை உத்தரவின்படி நபியவர்களால் கப்பல் கட்டி முடிக்கப்பட்டு அதில் ஏறச்சொல்லும் போது தான் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது.   என்றுக் கூறி ஏறச் சொன்னார்கள்.  
கப்பலை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதிலிருந்து அது ஏன் உருவாக்கப்படுகின்றது என்பது வரை இறைவன் நபியவர்களுக்கு வஹியின் மூலம் முன்கூட்டியே அறிவித்து விட்டதால்  இதில் ஏறுங்கள் ஓடும் என்று உறுதியாக கூறமுடியும் என்றாலும் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது.  என்று ஏன் கூறினார்கள் ?

படிப்பினைகள்
நம்மைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்காகவும் இறைவனை நிணைவு கூர்ந்து நன்றி செலுத்தக் கூடிய நாம் நம்முடைய எதிர்கால நிகழ்வுகள் இவ்வாறு தான் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நம்முடைய புலனுக்கு சரியாகத் தோன்றினாலும் அது நிகழ்வதும், நிகழாததும் இறைவனின் நாட்டத்தில் உள்ளது என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும், பிறருக்கும் பதியச் செய்யவேண்டும்.
மக்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபியவர்களின் சத்தியப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் இணைந்து கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தாருடைய மனதில் இதை ஆழமாக விதைக்க வேண்டும் என்பதற்காக கப்பல் ஓடும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது.என்றுக்கூறி ஏறச் சொன்னார்ககள்.

பட்டைத் தீட்டிய வைரங்கள்
இது ஒடாமல் நின்று விட்டால்  ஏற்கனவே அசத்தியவாதிகளிடம் அனுபவித்த சித்ரவதைகளை விட கூடுதலாக அனுபவிக்க நேரிடலராம் என்ற அச்சத்தால் மீண்டும் அசத்தியத்திற்கே திரும்பி விட்டால் என்ன செய்வது என்று இழுத்துப் பிடித்து நிருத்துவதற்காக இது ஓடும் ஏறுங்கள் என்ற உற்சாக வார்த்தையைக் கூற வில்லை.
அரைகுறை நம்பிக்கையாளர்கள் பத்து ஒன்பதாக குறைந்தாலும் ஒன்பது எட்டாகக் குறைந்தாலும் இறுதியாக எத்தனைப்பேர் இறைநம்பிக்கையில் உறுதியுடன் நிற்கின்கின்றார்களோ அவர்களை இன்னும் இறைநம்பிக்கையில் தோய்த்தெடுத்து பட்டைத் தீட்டிய வைரங்கள் போல் மிண்ணச் செய்கின்ற பணியையே நூஹ் நபி காலத்திலிருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலம் வரை இறைத்தூதர்கள் செய்து வந்தனர்.
நம்மைக் கடக்கவிருக்கும் அடுத்த வினாடிப் பொழுதும் கூட நம் கையில் இல்லை வல்லமைப் பொருந்திய இறைவனின் திட்டத்தில் உள்ளது என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தோய்த்தெடுத்து இறைநம்பிக்கையில் பட்டைத் தீட்டிய வைரங்களாக மிண்ணியவர்களின் வாரிசுகள் இன்று
கண்டிப்பாக அடுத்த மாதம் தந்து விடுகிறேன் 1000 ரூபாய் கடன் கொடுங்கள்; என்று வாக்குறுதி அளித்து கடன் பெரும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம்..

கண்டிப்பாக வெள்ளிக்கிழமை இன்ன இடத்தில் உங்களை வந்து சந்திக்கிறேன் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள், பெருநாளைக்கு ஊருக்கு வந்து விடுகிறேன் எதிர் பார்த்தக் கொண்டிருங்கள், என்று வாக்குறுதி அளிக்கும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம.

கண்டிப்பாக உங்கள் மகளை என் மகனுக்கு ( பிறந்து 6 மாதத்தில் இவன் ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ) முடித்து வைக்கிறேன் என்ற விதியின் அமைப்பை மறந்து வாக்குறுதி அளிக்கும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம்.
இவ்வாறு இறைவனை மறந்து வாக்குறுதி அளிப்பவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் விழிப் பிதுங்கி நின்றவர்கள பலரைப் பாரத்திருக்கின்றோம்.  
கண்டிப்பாக தந்து விடுகிறேன்.
சம்பளத்தில் கொடுத்து விடலாம் என்று நம்பிக்கை வைத்தே வாக்குறுதி அளித்து கடன் பெறுகின்றோம், ஆனால் அதற்கு முன் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு அதற்கே சம்பளம் முழுவதையும் ஒதுக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டு விடும். வாக்குறுதி அளித்து கடன் பெற்ற உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் பெரும் விரிசல் ஏற்பட்டு விடுவதை நமது அனுபவப் பூர்வமாக பார்த்து வருகிறோம்.
கண்டிப்பாக வந்து விடுகிறேன்
வெள்ளிக்கிழமை விடுமுறை என்கின்ற காரணத்தால் வந்து வடுகிறேன் என்ற உறுதியான வாக்குறுதி அளிக்கிறோம், ஓவர்டைம் இருந்தால், அல்லது உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டால் பரவா இல்லை எனலாம். வருவதாக முன்கூட்டியே வாக்குறுதி அளித்தவரை விட முக்கியமான வேறொருவர் அழைத்து விட்டால் இவர் முக்கியமா ? அவர் முக்கியமா ? என்ற நெருக்கடியான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு முதலாமவர் புறக்கனிக்கப்பட்டால் அவர் நம்முடன் வருத்தப்பட்டு ஒதுங்கும் நிலை ஏற்படுகிறது.
வெக்கேஷன் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பெருநாளைக்கு ஊர் வந்துவிடுகிறேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறோம் ஆனால் கம்பெனியில் பெருநாளைக்கு வேறொருவரை அனுப்பி விட்டு அவர் வந்தப் பின்னரே நம்மை அனுப்புவதாக சொல்கின்றார்கள். வீட்டில் போன் செய்து சொல்லி விட்டோம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் மேலும் நமக்கு வெக்கேஷன் இருப்பதால் போய்த் தான் ஆகவேண்டும் என்று கம்பெனியில் சண்டைப் போட்டு இறுதியாக ஒன்வேயில் போகும் நிலை நம்மில் பலருக்கு எற்படுகிறது. 
கன்டிப்பாக முடித்து வைக்கிறேன்.
சிறு வயதில் பார்க்கும் போது அழகாக இருக்கலாம், சிறுது வளர்ந்ததும் அழகில் மாற்றம் ஏற்படும் அடுத்து படிப்பில் மந்தம் ஏற்படும், அடுத்து நடைமுறையில் மாற்றம் ஏற்படும்,இதை எல்லாவற்றையும் விட வாக்குறுதி கொடுத்துக் கொண்டப் பெறறோர்களில் யாராவது ஒருவர் வசதியில் ஓகோ என்று ஆகிவிடலாம் ஒருவர் வறுமையின் கோரப்படியில் சிக்கிவிடலாம் நிலை மாறியப்பின் வாக்குறுதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு நிகரான வசதி படைத்தக் குடும்பத்தைத் தேடி ஓடி இரத்த உறவுகளை முறித்தக் கொண்டவர்கள் நம்மில் எத்தனை, எத்தனையோப் பேர்.
இறைவனை பொறுப்பு சாட்டாமல் தந்து விடுவேன், வந்து விடுவேன், முடித்து வைப்பேன் என்பதுப் போன்ற எதிர்கால நிகழ்வுகளை உறுதிப்படக் கூறினால் அவற்றை நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலமையை இறைவனே ஏற்படுத்துவான் என்பதை திருக்குர்ஆனின்18வது அத்தியாயத்தில்; 32வது வசத்திலிருந்து 40வது வசனம் வரைப் பார்க்கலாம். 
இன்ஷா அல்லாஹ் வருகின்ற சம்பளத்தில் திருப்பித் தந்து விடுகின்றேன் அல்லாஹ் நாடிவிட்டால் இன்னும் முன்கூட்டியேக் கூட தந்து விடுவேன்,

வெள்ளிக்கிழமைக்குள் வேறு எதாவது முக்கிய அலுவல்கள் ஏற்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் வருகிறேன்.

இதை விட வேறொரு நல்ல வாழ்க்கையை உங்கள் மகளுக்கு இறைவன் விதியில் எழுதி இருந்தால் அது தான் நடக்கும், அல்லது இது நடக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால் இதே நடக்கும். 
இவ்வாறான வார்த்தைகளையே அனைத்து எதிர்கால தேவைகளுக்காகவும் வெளிப்படுத்த வேண்டும். இதுவே இறைநம்பிக்கையாளர்களின்  இனிய பன்புகளில் ஒன்றாகவும், இறைவனின் அடிமை என்ற தன்னடக்கத்தையும் ஏற்படுத்தும்.
அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக!''எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக! 23:24
கண்டிப்பாக என்ற பலமான வாக்குறுதி அளிக்காமல் அல்லாஹ் நாடினால் திருப்பித் தந்து விடுவேன் என்று அல்லாஹ்வை பொறுப்புச் சாட்டுவதால் மட்டும் நெருக்கடியான சூழ்நிலைக்கு தந்துதவ மறுத்தால் மனம் தளர்ந்து விட வேண்டாம் வேறொருவர் மூலம்,அல்லது வேறு சிறந்த வழிகளில் அல்லாஹ்  நெருக்கடியை தீர்த்து வைப்பான்,அல்லாஹ் கைவிட்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை மனதில் கொள்ள வேண்டும்....அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக- பொறுப்பேற்பதில் அல்லாஹ் போதுமானவன். 4:81

சமாளிக்க பயன்படுத்தக்கூடாது

சிலர் தங்களுடைய வீட்டு தேவைக்கோ அல்லது இன்ன பிற தேவைக்கோ சிலரை அழைத்தால்,அழைக்க பட்டவர்களுக்கு அந்த அழைப்பிற்கு செல்ல மனமில்லை என்றாலும் இன்ஷா அல்லாஹ் என்று சமாளிப்பதற்காக சொல்வார்கள்..அதாவது இவர்களை பொறுத்தவரை அந்த வார்த்தை என்பது சமாளிப்பு வார்த்தை.

இறுதி எச்சரிக்கை
மற்ற சமுதாயத்து மக்களில் சிலர் தன்னிடம் இருப்பு தாராளமாக இருந்தும் கொடுத்துதவ மனமில்லாதவர்கள் சினை ஆட்டைக்காட்டி இது தான் இப்பொழுது என்னிடம் இருக்கிறது இதை வேண்டுமானால் ஓட்டிக் கொண்டுப் போ என்பார்களாம் காரணம் சினை ஆட்டை ஓட்டிக்கொண்டுப் போக எவருக்கும்  மனம் வராது. 
நம்முடைய சமுதாயத்து மக்களில் சிலர் தன்னிடம் இருப்பு தாராளமாக இருந்தும் கொடுத்துதவ மனமில்லாதவர்கள் இல்லை என்று சொல்லாமல் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று இழுத்தவாறு கூறுவார்கள் (எல்லோரும் அல்ல சிலர்). இவ்வாறு இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று இழுத்தவாறுக் கூறுவதைக் கேட்டவர் கிடைக்காது என்று உறுதி படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார்.
நீ உலகில் வாழும் பொழுது உன்னிடத்தில் உணவு கேட்டு வந்தேன் தர மறுத்து விட்டாயே என்று இறைவன் கூற ! உலகின் அதிபதியாகிய என் இறைவா !  நீயா ?என்னிடமா ? உணவு கேட்டு வந்தாய் ? என்று அடியான் கூற !
ஒரு பசியாளி உன்னிடத்தில் உணவு கேட்டு வந்த பொழுது அவனுக்குத் தர மறுத்தாயே அவனுக்கு கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக கருதி இருந்திருப்பேனே என்று மறுஉலக விசாரணையில் இறைவன் கேட்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள். 
இறைவன் கொடுப்பதற்கு நாடுகிறான்,
தடுப்பதற்கு அல்ல !
நாம் தடுப்பதற்கு இன்ஷா அல்லாஹ் கூறலாமா ? 
கொடுப்பதற்கே இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும் !
உண்மையில் இருப்பு இல்லாத பொழுது கேட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் நாம் இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறினால் இறைவன் எங்கிருந்தாவது நம்முடைய மடியை கேட்டவருக்காக நிறைத்திடுவான்.
உண்மையில் நம்மிடத்தில் இருப்பு இருந்து கொடுக்க மனமில்லாமல் இன்ஷா அல்லாஹ் என்றுக்கூறினால் நம்மிடத்தில் உள்ள மொத்தத்தையும் போக்கிடச் செய்யும் ஆற்றல் படைத்தவன் இறைவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எவருடைய உள்ளம் என்ன நோக்கத்தில் இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுகிறது என்பதை உள்ளங்களை பார்வையிடக்கூடிய இறைவன் அறிவதால் எதிர்கால நிகழ்வுகளுக்காக தூய எண்ணத்துடன் இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்.
இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுவது இறைவனின் பேராற்றலை வெளிப்படுத்தும் சிறந்த வார்த்தையும், நம்முடைய எதிர்கால தேவைகளுக்கான சிறந்த பிரார்த்தைனயுமாகும்.
எனவே இறைநம்பிக்கையாளர்கள் திறந்த மனதுடனும், சிறந்த நோக்கத்தடனும் இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், பொன்ற வார்த்தைகளை கூற வேண்டும்.அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

கருத்துகள் இல்லை:

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது. இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்...

Popular Posts