லேபிள்கள்

திங்கள், 29 அக்டோபர், 2012

உங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் கண்டறிய.


உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா? Anti Virus நிறுவினால் மட்டும் போதாது. அந்த Antivirus software வைரஸ்கள் சரியாக நீக்குகிறதா? என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் எதிர்ப்பை சரிவர நிறைவேற்றுகிறதா என கண்டறிய இந்த முறை உங்களுக்கு உதவும். முதலில் நீங்களே உங்கள் கணினியில் சோதனைக்காக ஒரு வைரஸ் நிரலை உருவாக்க வேண்டும். 


வைரஸ் நிரலை உருவாக்க...
உங்கள் கணினியல் ஒரு சாதாரண வைரஸ் கோப்பை உருவாக்க கீழ்க்கண்ட நிரல் வரிகளை நோட்பேடில் எழுதிக்கொண்டு அதை virus என்ற பெயரில் சேமித்துவிடுங்கள்.
 

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

பிறகு கணினியில் உள்ள ஆட்ன்டி வைரஸ் மென்பொருள் கொண்டு உங்கள் கணினியை வைரஸ் ஸ்கேன்(Scan) செய்யுங்கள். இப்போது நீங்கள் உருவாக்கிய சோதனை வைரஸ் நிரல் அதில் காண்பிக்கப்பட்டால் உங்களுடைய ஆன்ட்டி வைரஸ் நன்றாக இயங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம்..
 
இல்லையென்றால் உங்களுடைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை Update செய்து ஆக வேண்டும்.. அல்லது அதற்கு மாற்றாக மற்றொரு நல்ல ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவுவதே உங்கள் கணினியை வைரஸிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி.

நீங்கள் சோதனைக்காக உருவாக்கிய வைரஸ் நிரலால் எந்த பிரச்னையும் வராது என்பதை நினைவில் வைக்கவும்.
 

சனி, 27 அக்டோபர், 2012

உங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆசையா?


குழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது என்று சித்த மருத்துவர் வேலாயுதம் கூறுகிறார். 

மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால் உயரமானது தடைபடுகிறது என்றும் கூறுகிறார்.
இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது.
ஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் உளுந்து தைலத்தை வாங்கி, காலையில் அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். மேலும் அவர்களை எகிறி குதித்துத் துள்ளி விளையாடவும் பழக்க வேண்டும். இவை குழந்தைகள் உயரமாக வளர்வதற்கான வழிகள் என்றும் கூறி, சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.
1. குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டும் உணவாக கொடுக்க வேண்டும். அப்படி தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைக்கு உடலில் நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

2. ஆறாவது மாதம் முதல் குழந்தைக்கு புழுங்கல் அரிசிச் சோறு, வேக வைத்த பருப்புடன் பசுநெய் சேர்த்து கொடுத்தால், உடம்பில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துக்கள் போன்றவை நேரடியாக சேரும்.

3. குழந்தைகளை குளிப்பாட்டும் போது கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

4. ஒரு வயது ஆனதும் செல்லத்துக்கு முட்டை, காய்கறி, தினம் ஒரு கீரை என்று கொடுத்து வந்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவை உடலில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சிறந்தாக இருக்கும்.

5. குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் எள்ளு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றால் செய்த ஸ்நாக்ஸை கொடுத்தால், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் கொடுக்க வேண்டும்.

6. மேலும் உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் நன்றாக வளர்ச்சியடைந்து குழந்தைகள் உயரமாக வளர வழிவகுக்கும். இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளர்வார்கள்

வியாழன், 25 அக்டோபர், 2012

வீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்!


வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும்.

சுத்தமான வீடு

வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.

மனம் கவர்ந்த இயற்கை காட்சிகள்

சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம். அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம்.

குரோட்டன்ஸ் செடிகள்

வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.

மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும். பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும்.

எல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்.

அழகான பர்னிச்சர்கள்

வரவேற்பரையில் எதிரெதிராய் பெரிய சோபாக்களைப் போட்டு வடகிழக்கு மூலையில் சின்னதாய் பவுண்டென் வைத்தால் அழகு அள்ளிக்கொண்டு போகும்.

பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் , இந்த காலத்தின் மாடர்ன் ஆர்ட்களையும் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்!


நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்காக அதன் அடையாளமாகக் கொடுப்பதே அன்பளிப்பாகும்..! உங்கள் அன்பளிப்பு உன்னதமாக நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்...
அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்துகொள்வதால் மகிழ்ச்சி பெருகும். ஒருவரை முக மலர்ச்சியோடு உபசரிப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், தட்டிக்கொடுத்தல் மூலமும் அன்பை பகிர்ந்துகொள்வது உண்டு.
பேச்சு, செயல், பார்வை ஆகிய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக்குரியவர்களுக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது. உண்மையான அன்போடு நாம் மற்றொருவருக்கு ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் அதுதான் அன்பளிப்பு ஆகும்.
மெய்யான அன்பைக் காட்டுவதற்கு நாளும் தேவையில்லை, சமயமும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். ஒரு காதலன் தன் காதலிக்கு சிறு சிறு பரிசுகளை வழங்குவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. அதேபோல கணவன் தன் மனைவிக்கு சில அன்புப் பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்கும் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.
ஆனால் காதலன்-காதலி, கணவன்-மனைவி இவர்களைத் தவிர உறவினர் மற்றும் நண்பர்களை பொறுத்தவரை அன்பளிப்பு கொடுப்பது அரிதான ஒன்றாக உள்ளது. பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், விழா நாள் போன்ற விசேஷமான காரணம் ஏதாவது இருந்தால் தான் அன்பளிப்புகளை வாங்கிக் கொடுப்பார்கள்.
இப்படி அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எத்தனையோ வாய்ப்புகளும், நாட்களும் வரத்தான் செய்கின்றன. அவ்வாறு வரும் ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் என்னென்ன பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று இனி பார்க்கலாம்.
நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்கு அடையாளமாக கொடுப்பதே அன்பளிப்பாகும். அப்படிப்பட்ட அன்பளிப்பு பொருட்கள் எவை? என்ற கேள்விக்கு விடை அளிப்பது கடினமான விஷயம்தான். ஏனென்றால் இன்னென்ன பொருட்களைத்தான் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று யாராலும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. எனவே, நாம் பொதுவாக அன்பளிப்புக்குரிய சில பொருட்களை பட்டியலிட்டுக் கூறலாமே தவிர, இவை மட்டும் தான் அன்பளிப்புக்கு உரிய பொருட்கள் என்று கூற முடியாது.
ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதன் நோக்கம் என்ன? அவரை மகிழ்விப்பதற்காகத்தான். எனவே ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு என்ன மாதிரி பொருளில் விருப்பம் அதிகம் என்று தெரிந்து கொண்டு, அவருக்குப் பிடித்தமான பொருளை வாங்கி அன்பளிப்புச் செய்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
அன்பளிப்பு பொருட்களில் பரவலாக இடம் பெறத்தக்கவை வருமாறு:
 
பேனா செட்:
 
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் முதல், அலுவலகப் பணியாளர், தொழிலாளி, முதலாளி, தொழிலதிபர், வியாபாரி வரை எல்லாருக்குமே இன்றியமையாத ஒன்று பேனா ஆகும். யாருக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்பதை எண்ணிப்பார்த்து, அவருக்கு எப்படிப்பட்ட பேனாவை பரிசளித்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கருத்தில்கொள்வது நல்லது.
கைக்கடிகாரம்:
 
படித்தவர் முதல் பாமரர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை எல்லா வயதினரும் விரும்பி ஏற்கும் ஒரு பொருள் கடிகாரம் ஆகும். கைக்கடிகாரத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனி டிசைன்களில் கடிகாரங்கள் உள்ளன. உள்நாட்டுக் கடிகாரங்களோடு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடிகாரங்கள், வைரக்கல் பதித்த கடிகாரங்கள் என்று வகைவகையான கடிகாரங்கள் உள்ளன. பேனாக்களைப் போலவே கடிகாரங்களைப் பரிசளிக்கும் போதும், யாருக்கு எது பயன்படும் என்பதையும், யாருக்கு எது விருப்பம் என்பதையும் கவனித்து, கருத்தில் கொண்டு பரிசளிக்க வேண்டும்.
சுவர்க் கடிகாரம்:
 
இந்தப் பட்டியலில் டைம்பீஸ் என்னும் கடிகாரமும், சுவர்க் கடிகாரமும் அடங்கும். புதுமனை புகுவிழா போன்ற சமயங்களில் பரிசளிக்க ஏற்றவை சுவர்க் கடிகாரங்கள். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அலாரம் வைக்கும் அமைப்பைக் கொண்ட டைம்பீஸ்கள் பயனுள்ளதாக அமையும். அவர்களுக்கு டைம்பீஸ்களை பரிசளித்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தப் பொருட்கள் இருப்பவர்களுக்கு இவற்றை வாங்கிப் பரிசளிப்பது தேவையற்றது. எனவே கடிகாரங்களைப் பரிசளிப்பதற்கு முன்னர் இந்த விஷயத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.
கூலிங் கிளாஸ்:
 
அன்பளிப்புக்கு ஏற்ற பொருட்களில் மூக்குக் கண்ணாடியும் ஒன்று. கண் குளுமைக்காகவும், தூசு, துரும்புகள் கண்ணில் படாமல் பாதுகாக்கவும், சூரிய வெப்பம் கண்களைத் தாக்காமல் காக்கவும் இவற்றை பெரும்பாலானவர்கள் அணிந்துகொள்கிறார்கள். கண்ணாடிகளை அன்பளிப்பாக அளிக்க விரும்புகிறவர்கள், அவற்றை யாருக்கு அளிக்கிறார்களோ அவர்களுடைய முக அமைப்புக்கும், அளவுக்கும், ஏற்றதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் பார்த்து வாங்கிப் பரிசளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
புத்தகங்கள்:
 
திருமணங்களின் போதும், சாதனை நிகழ்த்தும் மாணவ மாணவியரைப் பாராட்டும் போதும் பரிசளிப்பதற்கு பெரிதும் உகந்த பொருள் நல்ல தரமான நூல்களாகும். மாணவர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தை விளக்கும் நூல்களும், விஞ்ஞானம், வரலாறு, விளையாட்டு மற்றும் சாதனை நூல்களும் பரிசளிக்கலாம். முதியவர்களுக்கு இதிகாசம், புராணம், இலக்கியம், வரலாற்று நூல்களையும், பெண்களுக்கு அழகுக் குறிப்புகள், சமையற்கலை, குழந்தை வளர்ப்பு போன்ற நூல்களையும் பரிசளிக்கலாம்.
ஆடை, அணிகள், சால்வைகள்:
 
அரசியல் தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் சால்வைகளும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆடைகளையும் வாங்கி வந்து அன்பளிப்பு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தை தொடரலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் அகமகிழ்வார்கள்.
பொம்மைகள்:
 
பொம்மைகளைப் போலக் குழந்தைகளை மகிழ்விக்கும் அன்பளிப்புகள் வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம். சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிறந்த நாள் விழாக்களில் பொம்மைகளைப் பரிசளிப்பது மிகவும் புத்திசாலித்தனம் ஆகும்.
வீட்டு உபயோகப் பொருட்கள்:
 
டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை திருமணம், புதுமனை புகுவிழா போன்றவைகளுக்கு அன்பளிப்புச் செய்யலாம்.
காமிராக்கள், கால்குலேட்டர்கள்:
 
சாதனைகள் புரியும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற்றோரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் காமிராக்களையும், கால்குலேட்டர்களையும் அன்பளிப்பு செய்யலாம்.
வாழ்த்து அட்டைகள்:
 
பண்டிகைகள், விழாக்கள் போன்றவைகளுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். வாழ்த்து அட்டைகளை நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம்.
கலைப் பொருட்கள்:
 
காட்சிக்கு வைக்க வேண்டிய கலை நுணுக்கம் மிக்க பொருட்களை வசதியானவர்களுக்கு வழங்குவதே பொருத்தமானதாகும்.
செலவில்லாத அன்பளிப்பு:
 
அன்பளிப்புகள் எல்லாமே காசு கொடுத்து வாங்குவது தான் என்று அர்த்தமில்லை. யாருக்கு எது பிடிக்குமோ, யாருக்கு எது தேவையோ, அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதுதான் வெற்றிகரமான அன்பளிப்பு கொள்கை ஆகும். புன்னகையை கொடுங்கள், புன்னகையோடு வாழுங்கள். இந்தக் கொள்கையை மறக்காமல் கடைப்பிடித்தால் நமக்குத் தெரிந்தவர்களிடமும், உறவினர் மற்றும் நண்பர்களிடமும் நல்லவர் என்ற பெயர் எடுப்பது மிக சுலபம். இந்த சுலபமான வழி இருக்கும்போது, அன்பளிப்பு கொடுக்க யோசிக்க வேண்டுமா என்ன?

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்-


ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்ப டும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணை யின் துவக் கப்புள்ளியாகும்.
சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ் வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாக வே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அதிகாரி கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலா ம்.
புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிட ம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க லாம்.
புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனு வை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வே ண்டும். காவல் நிலையத்தில் பல படி நிலைகளில் அதிகாரிகள் இருந்தாலு ம், குற்ற நிகழ்வுகளில் காவல் நிலையத்தி ல் பணியாற்றும் காவல் துறை ஆய்வா ளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டு மே அந்த புகாரை பரிசீலித்து முதல் தக வல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந் தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுக லாம். அதை பிறகு பார்ப்போம்)
குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவர ங்கள் புகாரில் இடம் பெற வே ண்டும். எதிரி மிகவும் மோச மான வார்த்தைகளில் திட்டி யிருந்தால் அதை குறிப்பிடு வது நல்லது. அதேபோல கொ லை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலு ம் அதையும் புகாரில் தெரிவி ப்பது நல்லது. தாக்குதல் நடந் திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்ப தையும் புகாரில் கூற வேண்டும். திரு ட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந் தால் இழப்புகள் குறித்த முழு விவரங்க ளும் அளிக்கப் பட வேண்டும்.
இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறை க்கு மிகவும் உதவியாக இருக்கும். நம க்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்க ளுடைய பெயர், முகவரியோடு குறிப்பி ட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி ய நபர்களை பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர் என்று தெளிவாக குறிப்பிட வே ண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடை யாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.
தாக்குதல் போன்ற சம்பவ ங்களில் காவல் நிலையத் தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம்பட்டவர் களுக்கு மருத்துவ சிகிச் சை அளிப்பதும் முக்கியம் . எனவே அவர்களை தாம திக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண் டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல் நிலை யம் சென்று புகார் அளிக்கலாம்.
காவல்நிலையத்தில் அளிக்க ப்படும் புகாரில் கூறப்பட்டு ள்ள விவர ங்களின் அடிப்ப டையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ப தால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையா ன தகவல்களை தருவது நல் லது.
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற் கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.
இவ்வாறு காவல்நிலையத்தி ல் பதிவு செய்யப்படும் புகார் களை விசாரித்து தகுதியுடை ய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கி றது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள்மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங் கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவி ல்லை என்றாலும் பல நேர்வுக ளில் நீதி மன்றம் இந்த முறை யை ஏற்றுக் கொள்கிறது.
புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடை ய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசா ரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கி றது.
ஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகா ரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.  குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல் லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில் லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.
காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை இதுவரை பார்த் தோம். புகா ரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடு களை தற்போது பார்ப்போம்.
காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகா ரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ் வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ் வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். 
                                               ஏனெனில் அனைத்து வகை குற்றங்க ளிலும் அவர் உடனடியாகவும், நேரடி யாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதி காரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடி வை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். 
பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்ற ங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும். 
பிணை என்பது கைது செய்ய ப்பட்ட நபரை வெளியில் விடு வதற்கான பெறப்படும் உத்தர வாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழ ப்பையும் வலியையும் ஏற்படு த்திய நபரைநபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்க வும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலை த்துவிடாமல் இருப்பதற் காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற் கொள் ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட் டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவரு க்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பி ணையில் விடுவிக்கும் செய லை செய்வதில் சில நடை முறைகள் உள்ளன. 
மிகச்சிறிய குற்றங்களை செய் தவர்களை காவல்துறை அதி காரியே பிணையில் விடுவிக் கும் அதிகாரம் உள்ளது. அவ் வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்ட வர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடு விக்க முடியும். 
காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்ற ங்களை பிணையில் விடமுடியாத குற் றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங் கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப் பாக வழங்கப் பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டு கள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற் றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாக வும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படு வது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்ட ரீதியாக இதை அங்கீ கரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவ தே நல்லது. 
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விட முடி யாத குற்றங்களை செய்வோ ரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியு ம். இவ்வாறு கைது செய்வதற் கு குற்றவியல் நீதிமன்ற நீதிப திகளின் கைது ஆணை (வார ண்ட்) தேவை யில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல் துறை அதிகா ரியே பிணையில் விடத் தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்த கையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். 
இந்த அம்சங்களை பரிசீலனை செ ய்து ஒரு முடிவுக்கு வருவது, காவ ல்துறை அதிகாரியின் முக்கியமா ன கடமையாகும். 
ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள வேண்டு ம் என்று சட்டம் வலியுறுத்துகிற து. அந்த நடவடிக்கை எம்மாதிரி யானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. 
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங் கள், இந்திய தண்டனை சட்டத் தின்கீழ் பிணையில் விடமுடியா த குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முத ல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்ட ரீதியாக விசாரணை, கைது உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும். 
அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய் ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டு மே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசார ணை செய்ய முடியும். 
எனவே, புகாரை பெற்றுக் கொ ண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந் தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்ற ங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும். 
முதல் தகவல் அறிக்கை
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப் பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக் கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக் கைஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய் மொழித் தகவலாக இருந்தால் அதை எழு த்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப் படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும். 
குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவு ம் கிடையாது. குற்ற நிகழ்வு குறி த்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம். 
ஒரு குற்ற வழக்கின் அடிப்படை யே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். 
ஒரு முதல் தகவல் அறிக் கை படிவத்தில், மாவட்ட ம், காவல் நிலையம், ஆ ண்டு, முதல் தகவல் அறிக் கையின் எண், நாள், குற்ற வியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்று ம் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ் வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்ற த்தில் தொடர் புடையவ ர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற் பட்ட பாதிப்புகள் உள்ளிட் ட விவரங்கள் பதிவு செய் யப்படும். 
பின்னர் குறிப்பிட்ட புகாரி ன் உள்ளடக்கத்தை அப்ப டியே பதிவு செய்து, குறி ப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப் பட் டது என் பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍?


சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை
சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும்திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை மாற்றித்தருவோம் என்று சொல்லிவிட்டது.
வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அது ஏன் முக்கியம்? என்பதே பலருக்கும் தெரியாத நிலையில், நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான் றிதழ் என்றால் என்ன? வாரிசுச் சான்றி தழுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படி வாங்க வேண்டும்? என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு. இந்த கேள்விக்களுக்கு சட்டப்பூர்வமான விள க்கம் தருகிறார் வழக்கறிஞர் ரமேஷ். 
வாரிசுச் சான்றிதழ் என்றால்..?
ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்க ளையோ அல்லது பணப்பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்படும் சான் றிதழ்தான் வாரிசுச் சான்றிதழ். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திரு மணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.
இதை எப்படி பெறுவது?
சாதி சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ, அதுதான் வாரிசுச் சான் றிதழ் வாங்குவதற்கும். வட்டாட்சியர் அலு வலகத்தில் உரிய மனுவுடன் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் வசிப்பிடச்சான் று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர் வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய் வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சி யரால் வழங்கப்படும்.
எப்போது மறுக்கப்படும்?
இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடை யே பிரச்னைகள் இருப்பது, தத்து எடு க்கப் பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவ து, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம்.
நீதிமன்றத்தை அணுகி யாரு க்கு வாரிசுச் சான்றிதழ் வழங் குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம். ஏனெனி ல், யார் வாரிசு என் பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வட் டாட்சியருக்கு கிடையாது. பிரச்னைக்குரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி இறந்தவ ருக்கும் தனக்கும் இருக்கும் உறவை நிரூபித்து, அவரது வாரிசு என்று கோரும் தகுதியை உணர் த்துவதன் மூலமே அவர் பெயருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.  
எதற்கு வாரிசுச் சான்றிதழ்?
பட்டா போன்ற வருவாய் ஆவ ணங்களில் பெயர் மாற்றம் செய் வதற்கு, பொதுத் துறை நிறுவன ங்களில் அல்லது அரசுப் பணி களில் பணிபுரிந்து இறந்தவர்க ளின் குடும்ப ஓய்வூதியம் மற்று ம் பணி பலன்கள் பெறுவதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமா கிறது.
நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப்பெறுவ தற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய் ப்பு பெறவும் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்ப தற்கோ, அடமானம் வைப்பதற்கோ உள்ள வாரிசு உரிமையை காண் பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப் படும்.
இறங்குரிமை சான்றிதழ்
(Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முத லீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வ மான உரிமை இருக்கிறது என்ப தைக் காண்பிக்க ஒருவர் நீதிமன் றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.
எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம்.  
ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந் த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குக ள்/முதலீடுகள் முதலிய வற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட் டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்க ளா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத் தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்க ளில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வள வு முதலீடு/பங்குகள் உள்ளது என்ப தை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத் தினால் நீதிமன்றம் அவர்களுக் கு இறங்குரிமை சான்றிதழ் வழ ங்கும். அந்த இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் நிறு வனங்கள் முதலீடுகளை/ பங்கு களை பெயர் மாற்றமோ அல்ல து பணத்தை திருப்புவதையோ தயக்கமில்லாமல் செய்து தரும்.
இறந்த வருடைய வீடு, நிலம் போ ன்ற அசையாச் சொத்துகளை அடைவதற்கு அல்லது அடமானம் வைப்பதற்கு இறங்குரிமை சான் றிதழ் தேவையில்லை. வாரிசுச் சான்றிதழ், இறங்குரிமை சான்றித ழை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் இப்போது புரிந்ததா?
http://pettagum.blogspot.in/2012/05/blog-post_9835.html

புதன், 17 அக்டோபர், 2012

நம்ம டிரைவர் நல்ல ஆளா?


கைகொடுக்கும் யோசனைகள்
பல லட்ச ரூபாய் கொடுத்து, பார்த்து பார்த்து நமக்குப் பிடித்த காரை வாங்குகிறோம். சந்தோஷம்... சரி, தகுதியான டிரைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

டிரைவராக நியமிக்கப்படும் நபர் தவறான ஆசாமியாக இருந்து விட்டால் நினைத்துப் பார்க்க முடியாத விபரீதங்கள் எல்லாம்கூட நடந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, டிரைவரைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

டிரைவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சாதாரண டிரைவராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு பல நூறு டிரைவர்கள் வேலை செய்யும் ஒரு டிராவல்ஸ் கம்பெனிக்கு அதிபராக இருக்கும் பாலா டிராவல்ஸ்
  தரும் அனுபவப் பாடம் இது...

‘‘டிரைவராக வேலை கேட்டு வருபவர், இதற்கு முன்பு எங்கு வேலை செய்தார்? வேலை செய்த இடத்திலிருந்து ஏன் வெளியேறினார், என்று விசாரிக்க வேண்டும். அவர் வேலை செய்த இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் (முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட) வாங்கிக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச் சொல்ல வேண்டும். அதற்குள், அவர் கொடுத்த முகவரிக்கு போன் செய்து ஆள் யார்? எப்படி? ஏன் வேலையை விட்டு நின்றார் என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் திருப்தி அளித்தால் அவரை வேலைக்கு வரச் சொல்லலாம்.

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களையும், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. நாளைக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அடையாளம் சொல்லவும், முகவரியைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஆதாரங்கள் பயன்படும்.

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா? ஒரிஜினல்தானா என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், காவல்துறையில் நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்பெற்று வரச் சொல்லலாம். ஆனால், அது டிரைவரின் தன்மானத்தைச் சோதிப்பதாக இருக்கக் கூடாது.

குறளகம் எங்கே இருக்கிறது? எழிலகம் எங்கே இருக்கிறது? விழுப்புரத்துக்கு எப்படிப் போவது? பெல்ஸ் ரோடு செல்ல வழி எது? ஊரில் எங்கெங்கே யு&டர்ன் இருக்கிறது என்பன போன்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பதைக் கேள்விகள் கேட்டு சோதித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், டிரைவரை சில கிமீ தூரம் காரை ஓட்டச் சொல்லிப் பார்ப்பது நல்லது. நெருக்கடி நிறைந்த சாலைகளில் எப்படி ஓட்டுகிறார்? எதிரே வருபவர்களை எப்படிச் சமாளிக்கிறார்? டிராஃபிக் விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கிறாரா? என்பதையெல்லாம் கவனித்து டிரைவரின் திறமையைக் கணக்கிட அது வசதியாக இருக்கும்.

டிரைவருக்கு ஓரளவு கார் மெக்கானிசம் தெரிந்திருந்தால் நல்லது. ஆனால், இன்றைய நவீன யுக வண்டிகளில் ஏற்படும் ரிப்பேர்களை டிரைவர்களால் சரி செய்ய முடியாது. சர்வீஸ் சென்டருக்குத்தான் போன் செய்ய வேண்டும். அதனால், குறைந்த பட்சம் கார் சக்கரத்தைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது.

டிரைவர் நாகரிகம் தெரிந்தவரா? நேர்மையானவரா? ஒழுக்கமாக நடந்துகொள்வாரா என்பதையெல்லாம் பார்த்த உடனே தெரிந்துகொள்ள முடியாது. பழகித்தான் தெரிந்துகொள்ள முடியும்.

டிரைவரின் நேர்மையைச் சோதிக்க, அவர் அறியாதபடி சில சோதனைகளைச் செய்யலாம். காரில் சில ரூபாய் தாள்களை தெரியாததுபோல் விட்டுச் சென்றுவிட்டு, அதை எடுத்துத் திருப்பிக் கொடுக்கிறாரா? இல்லை, அவரே வைத்துக்கொள்கிறாரா? என்று கவனிக்க வேண்டும். ஆயினும் அவரும் மனிதர்தான், அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு அவரைக் காயப்படுத்தாமல் இந்தத் தேர்வுகளை நடத்த வேண்டும்.

உங்களின் அனைத்து தேர்வுகளிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றால், அதன் பிறகு அவரைச் சந்தேகப்படக் கூடாது...இதுதான் முக்கியமான பாடம்!’’
 

திங்கள், 15 அக்டோபர், 2012

குர்ஆனின் நற்போதனைகள்…


 உண்மை பேசுக!
அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts