லேபிள்கள்

திங்கள், 9 ஜூலை, 2012

கவலைக்கு முதல் மருந்து


கவலைக்கு முதல் மருந்து
உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ஜாக்கிங்செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். தியானமும், ஜாக்கிங்கும் கொஞ்ச நேரம் கழித்து ஓய்வு நிலையைத் தரும். உடனடி நிவாரணத்திற்கு உடற்பயிற்சி நல்லதாம்.

கவலைப்படாதே சகோதரா

உடல் நலமும் நல்ல உற்சாகமான மனநிலையும் தேவை என்றால் கவலைப்படாதீர்கள்!

எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.

இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம். மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை அதிகமாவதைவிட, நம் உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் சக்தியுடையது. அது நன்றாகக் குணமாகிவிடும் என்று மனப்பூர்வமாக ஒரு இம்மியளவு கூட சந்தேகம் இல்லாமல் முழுமையாக நம்பினால் முற்றிலும் குணமாகிவிடும். எனவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்.

இந்த உண்மைகளை ஆஸ்திரிய மனோதத்துவ டாக்டரான ஆல்பிசட் ஆட்லர் கண்டுபிடித்து நிரூபித்தும் காட்டினார்.

கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.

உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். கஷ்டங்கள் அகலும் என்று நம்புங்கள்.

இத்துடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள்.

மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக் காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில் சூழ்நிலைகள் உருவாகின்றன.

ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.

இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்துங்கள்.

சட்டென்று குணம் மாறி வள் வள் என்று விழுதல் என்பது கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி (B) குறைந்தாலும் எளிதில் கோபம் கொள்ளுதல் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும்.

உணர்ச்சிக் கொந்தளிப்பால் உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நன்கு சேர்த்துப் பலப்படுத்த ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் ரொட்டி போன்ற மாவு வகைகளையும் ரொட்டி வகைகளையும் உணவில் சேர்க்கவும்.

மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் டாக்டர்களையும் மாற்றுவார்கள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும்.

தினமும் மூளையுடன் தொடர்புள்ள இரண்டு கட்டை விரல்களையும் சரியாக 5 நிமிடங்கள் பிடித்து விடுங்கள். பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் கண்களைமூடி அமைதியாக இருங்கள். கடல் என்றோ அமைதி என்றோ மனதுக்குள் சொல்லித் கொள்ளலாம். இந்த இரண்டு அம்சங்களாலும் மனம் உண்மையில் அமைதியடையும். கவலையை முறியடிக்கும் உணவுகளும் தினமும் சேர மன அமைதி தொடர்ந்து கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும்

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts