லேபிள்கள்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

குட்டீஸ்க்கு போடுற டயாபர் பற்றி பெற்றோர்களுக்கு தெரியுமா


குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும் பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, 'டயாபர்'களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன் பிரபலத்தால், துணி, 'டயாபர்'களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

சரும நோய்கள்

'டிஸ்போசபிள்' டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளன.

ஹார்மோன் பிரச்சினை

டிஸ்போசபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் ( TBT) கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கி எறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும் டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகை டயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ரீயூசபிள் டயாபர்'கள் சிதைவடைய, ஆறு மாத காலமே ஆகின்றன.

வெட்டப்படும் மரங்கள்

உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்தை உருவாக்க, உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ­ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

செலவு குறைவு

'டிஸ்போசபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், 'ரீயூசபிள் டயாபர்'கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போசபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில், பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts