லேபிள்கள்

செவ்வாய், 1 மே, 2012

வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் ! மிரட்டும் குழந்தைகள்… மிரளும் அம்மாக்கள்


காலை நான்கு மணிக்கு சென்னை, சென்ட்ரலில் அந்த ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கலைந்த பின்பும், அங்கேயே நிற்கிறார்கள் இரண்டு பதின்பருவச் சிறுவர்கள். கையில் பையும் இல்லை; காசும் இல்லை. கண்களில் களேபரம். எங்கே போவதுஎப்படிப் போவது?சென்னை, எக்மோரில் தென் தமிழகத்திலிருந்து வரும் அந்த ரயில் வந்து நிற்கிறது. ஏதோ சாதித்துவிட்ட ஆசையில் ஒரு சிறு பெண் இறங்குகிறாள். ஆனால், தான் ஆசையுடன் பார்க்க வந்த சினிமா நடிகரின் வீட்டுக்குப் போகும் வழி தெரியவில்லையே என்கிற பயம் வந்தவுடன்கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. சமூக விரோத கும்பல் அவளை நெருங்குகிறது. அங்கிருக்கும் பிச்சைக்காரர், ரயில்வே போலீஸிடம் விரைந்து சென்று விவரம் சொல்ல, அந்தச் சிறுமி அவர்களிடம் தஞ்சமடைகிறாள்.

பள்ளிக்கூடம் போகிறேன்என்று கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ்தன் சொந்த ஊரிலிருந்து சென்னை வரும் பஸ்ஸில் ஏறினான். கோயம்பேடு வந்து இறங்கியவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பசி தாங்கமுடியாமல் எச்சில் தட்டு கழுவும் வேலைக்குச் சேர்ந்தான்அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில்! அரசு அலுவலர்களான அம்மா, அப்பா தேடிக் கண்டுபிடித்துவிட்ட பின்பும் வீட்டுக்குத் திரும்ப அவன் விரும்பவில்லை என்பது பெரும் சோகம்.
இப்படிஅம்மா, அப்பாவிடம் கோபித்துக் கொண்டோ, சண்டை போட்டுக் கொண்டோ வீட்டை விட்டு ஓடிவரும் பதின்பருவ சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கைதான் அதிகம்என்கிறது தமிழகக் காவல்துறை.எம்பொண்ணுக்கு படிக்கறதுல அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா, அவ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறணுமேனு படிபடினு சொல்வேன். இப்போ எல்லாம், ‘ரொம்ப படுத்தினாவீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்னு சொல்றா. எனக்கு உயிரே போறமாதிரி இருக்கு. அதனால் படினு சொல்றதையே நிறுத்திட்டேன். படிப்பைவிட புள்ளைதானே முக்கியம்..?!”- இப்படி மனம் பிழியும் வருத்தத்துடன் சொல்லும் அம்மாக்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதிலிருந்தே
பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது என்பதை நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும்.வீட்டை விட்டு ஓடிவரும் குழந்தைகளை மீட்கும் சைல்ட் ஹெல்ப் லைன்ஒருங்கிணைப்பாளார் பெல்சி, இதைப்பற்றி பேசும்போது, ”10 – 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்தான் அதிகமாக வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். வீட்டில் படிபடிஎன்று படுத்துவதால் ஓடிவரும் குழந்தைகள், பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள் என்றொரு தவறான புரிதல் இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து வீட்டுக் குழந்தைகளும், நல்ல வேலைகளில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளும் இதில் அடக்கம். அம்மா, அப்பா என்னைச் சரியா கவனிக்கறது இல்ல. என்கிட்ட உட்கார்ந்து பேசக்கூட அவங்களுக்கு நேரமில்ல. வெறுத்துப் போயி வந்துட்டேன்’, ‘எங்கப்பா குடிச்சிட்டு வந்து தினம் தினம் பண்ற அக்கிரமம் தாங்க முடியல’, ‘எப்பப் பார்த்தாலும் படிக்கச் சொல்லியே அடிக்கறாங்கஎன்றெல்லாம் கண்ணீர் வழியக் காரணம் சொல்லும் குழந்தைகளும் இருக்கிறார்கள்என்ற பெல்சி,”விவாகரத்து பெற்று, அல்லது கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்கிற பெண்களின் குழந்தைகளும் அதிகமாக ஓடி வருகிறார்கள். அப்பாவுக்கு, திருமணத்துக்குப் பிறகு இன்னொரு உறவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதுவே விவாகரத்தான அம்மா இன்னொரு உறவை ஏற்றால், அதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. அக்கம்பக்கத்தினரின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள முடியாமல், ஓடிவருகிறார்கள்என்று இதன் பின் இருக்கும் சமூகப் பிரச்னையையும் உடைத்தார்.
வீட்டை விட்டு ஓடி வருகிறவர்களில் ஆண் குழந்தைகளைவிட, பெண்கள்தான் அதிகம் என்கிற உண்மைமிகுந்த பேரதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்களா அல்லது கடத்தப்படுகிறார்களா என்கிற காரணத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான சமூகக் காரணங்களையும் உளவியல் காரணங்களையும் அதன் வேரின் ஆழத்தில் இருந்து ஆராய வேண்டிய தருணம் இது என்பதற்கான அபாய மணிதான் இந்தத் தகவல்என்கிறார் சமூக ஆர்வலர் ஷீலு.
குழந்தை உலகில் உறுத்திக் கொண்டிருக்கும் இப்பிரச்னைகளுக்கு, தாய்மை நிறைந்த அக்கறையுடன் தீர்வுகளை அடுக்குகிறார் குழந்தைகள் மனநல சிறப்பு மருத்துவர் ஜெயந்தினி.வேகமாக நகரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், குழந்தைகளுக்கு எந்த சிறு ஏமாற்றத்தையோ, கஷ்டத்தையோ தாங்கும் மனது இருப்பதில்லை. இதுதான் குழந்தைகளிடம் இருக்கும் பிரச்னை. கல்வியும், வீட்டுச் சூழலும் அந்த தன்னம்பிக்கையை, பொறுமையை, எந்தப் பிரச்னையையும் எதிர்நோக்கும் மனசக்தியை அவர்களுக்கு வளர்ப்பதில்லை. கூடவே, டி.வி. நிகழ்ச்சிகளால் வேறு அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள்தான் படிப்பு, ஹோம் வொர்க், தான் விரும்பும் பொருளை வாங்குவது என்ற காரணங்களுக்காக அம்மாவை இப்படி பயமுறுத்தும். அம்மாவிடம் சொன்னால் உணர்வுபூர்வமாக அவள் மிகவும் பயப்படுவாள் என்று குழந்தை புரிந்து வைத்திருக்கிறது. அப்படி அம்மாவை பயமுறுத்தி காரியம் சாதிக்கும் குழந்தைஉச்சபட்சமாக, தான் சொன்னதை நிரூபிக்க வீட்டை விட்டும் வெளியேறும்.
சூழ்நிலையில் தவறு இருக்கும் குழந்தை, தான் விரும்பாத, தன்னை அச்சுறுத்தும் அந்தக் சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக அப்படிச் செய்வாள். குடும்பத்தில் எப்போதும் குழந்தைகள் முன்பு சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோர், தினம் தினம் அடித்து மிரட்டும் குடிகார அப்பா, பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் உறவுக்காரர்கள்இவைஎல்லாம்தான் குழந்தைகள் வெறுக்கும் சூழல்கள். இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் வீட்டை விட்டு ஓடுவார்கள்என்ற டாக்டர், குழந்தைகளை அணுகும் விதம் பற்றியும் பகிர்ந்தார்.
குழந்தை முதல் முறை நான் வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்என்று சொல்லும்போது பயந்துவிடாமல், அவனை அடித்து துன்புறுத்தாமல் அந்த விஷயத்தை விட்டுவிட வேண்டும். வீட்டை விட்டு ஓடிப்போனால் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதையும்; உணவு, உடை, படிப்புகூட கிடைக்காமல் ஏங்கும் பலநூறு குழந்தைகள் இருக்கஎக்ஸாம் ஃபீவர், விரும்பிய சைக்கிள் கிடைக்காதது என அந்தக் குழந்தைக்கு இருக்கும் மன வருத்தங்கள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதையும் அன்பாகச் சொல்லி புரியவைக்க வேண்டும். சில குழந்தைகள் மிக ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தால், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது!என்று பாஸிட்டிவ் வழிகாட்டினார் ஜெயந்தினி!கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த 225 குழந்தைகளை மீட்டுள்ளனர் காவல் துறையினர். ஆனால், அவர்களின் கவனத்துக்கு வராமல் காலம் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் எத்தனை பேர் என்பதை எப்படி அனுமானிப்பது?இந்தப் பட்டியலில் உங்கள் குழந்தையும் சேரத்தான் வேண்டுமா?
நன்றி: அவள்விகடன்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts