லேபிள்கள்

திங்கள், 23 ஏப்ரல், 2012

தொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவல்கள்,


தொலைக்காட்சிக்கு வோல்டெஜ் ஸ்டெபிலைசர் மிக அவசியம்.
தொலைக்காட்சியை நிறுத்தும்போது முதலில் தொலைக்காட்சியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்டுப் பிறகு மின் இணைப்பைத் துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும். தொலைக்காட்சியை இயக்க விரும்பும்போது முதலில் மின் சப்ளை சுவிட்சைப் போட்டு விட்டுப் பிறகு தொலைக்காட்சி. சுவிட்சைப் போட வேண்டும்.
அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள இடத்திலும் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. அறையிலுள்ள விளக்கு 40 முதல் 60 வாட் பல்புகளுக்கு மேற்பட்டதாக இருக்கக் கூடாது.
சுவற்றை ஒட்டினாற் போல் தொலைக்காட்சியை வைக்கக் கூடாது. அரை அடி இடைவெளியாவது அவசியம். அப்போது தான் செட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும். அழகான காபினட்களில் சிலர் தொலைக்காட்சியை வைத்திருப்பார்கள். அதன் பின்புறம் திறந்தபடி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
தண்ணீர் டம்பளர் போன்றவற்றை தொலைக்காட்சி மேல் வைக்கக் கூடாது. ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும்.
ரேடியோ, டேப்ரிகார்டரை கலர் டி,வி மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் தொலைக்காட்சியில் கலர்ப்புள்ளிகள் தோன்றச் செய்யும்.
ஆன் செய்த நிலையில் தொலைக்காட்சியை நகர்த்தக் கூடாது.
தொலைக்காட்சி மேல் நட், ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவை தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் தொலைக்காட்சி பழுதடையும்.

ரிமோட் கன்ட்ரோல் வைத்திருப்போர் அதையே பயன்படுத்தவும்.
புயல், மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி ஒயரின் இணைப்பை துண்டித்து விட வேண்டும்.
மின்சாரம் தடைபடும்போது உடனடியாக தொலைக்காட்சியை அணைத்து விட வேண்டும்.
தொலைக்காட்சியை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும்போது தொலைக்காட்சியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் தொலைக்காட்சியை வைக்க வேண்டும்.
எப்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்குப் பாதுகாப்பானது.
தொலைக்காட்சியை ஜன்னல் அருகில் வைப்பதை தவிர்ப்பதன் மூலம் மழை, இடி, மின்னல் ஆகியவற்றிலிருந்து தொலைக்காட்சியை காக்கலாம். தொலைக்காட்சியின் பிரதானப் பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாக பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். தொலைக்காட்சியும் அடிக்கடி பழுதாகாது.
Pettagum

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts