லேபிள்கள்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

குக்கர் பராமரிப்பு---வீட்டுக்குறிப்புக்கள்


1. குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும்.
2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்புக் கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.
3. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப் வழியாக நீராவி வருவதைப் பார்த்த பிறகே குண்டு போட வேண்டும். நீராவி வரவில்லையென்றால் அடுப்பைச் சிறிய அளவில் வைத்து விட்டு குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப்பில் பொருள்கள் அடைத்து இருந்தால் சுத்தம் செய்துவிட்டு குண்டு போட வேண்டும்.
4. குக்கரில் கைப்பிடி உடைந்து விட்டால் உடனடியாகப் புதியது மாற்றி விட வேண்டும். ஏனென்றால் குக்கரில் பொருள்களை வைத்து மூடுவதற்கும் திறப்பதற்கும் கஷ்டமாக குக்இருக்கும். அதோடு அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடம்பின் மீது படுவதற்கும் வழியாக இருக்கும்.
5. பிரஷர் குக்கரில் உள்ள காஸ்கெட்டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
6. புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
7. குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப் பிடிக்காமல் இருக்கும்.
8. குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
9. குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் குறையல்ல. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
10. குக்கரில் காய்கறி வேகும் போது அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
11. குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.
Pettagum

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts