லேபிள்கள்

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?---உபயோகமான தகவல்கள்


இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற பண்டைய விவாதத்திற்கு முடிவு தெரியாதது போலவே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா' என்று கேட்டால் கண்டவர் சொன்னதில்லை. சொல்பவர் கண்டதில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல சேலை கட்டும் பெண்ணுக்கும்தான் பொருந்தும் என்றே நாம் கூறவேண்டும். 

அயல்நாட்டு அரைகுறை ஆடைகளைவிட நம் நாட்டு புடவை தான் பெரிதும் விரும்பப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புடவை பெண்களின் தேசிய உடையாக இருந்தாலும் , குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகள் அணியப்படுகிறது.
 

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால், புடவை தலைப்பைத் மடித்து தோளில் பின்செய்து கொள்ளவும். வேலை செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் புடவைத் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் பின்செய்து கொள்ளுங்கள்.
 

புடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணியுங்கள். ஆர்கன்ஸா வேண்டாம், ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம்.
 

குள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள்.
 

மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம்.
 

புடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம்.
 

மழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற புடவை அவர்களுக்கு ஏற்றது.
 

சிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும்.
 

சுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீர்கள். அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள்.
 

சிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்
Pettagum

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts