லேபிள்கள்

திங்கள், 16 ஏப்ரல், 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி ?


1. படிச்சவரும் முட்டாளும் 

படிச்சவர் யாரு? முட்டாள் யாரு? இது ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம். ஆனா எப்படி யோசிக்கிறது?
 

படிச்சவர் அனாவசியமா யோசிப்பார் . முட்டாள் யோசிக்கவே மாட்டார் அப்படினு ஒரு பொது கருத்து வைச்சிப்போம். ஒரு பக்கத்துல படிச்சவரே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். மறு பக்கத்துல முட்டாளே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். இவங்க சொல்ற கருத்தை எல்லாம் எடுத்து ஒரு குறிப்பு வைச்சிப்போம். அப்புறம் யாரு படிச்சவர், யாரு முட்டாளு அப்படினு தெரிஞ்சி போயிரும். இவங்க பேசி முடிக்கிறவரைக்கும் நாம காத்திருப்பது சரிதானுங்களா, அதுதான் இல்லை. இவங்க பேசறதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்காங்க பாருங்க அவங்க தான் முட்டாளுங்க. இதுவும் சரிதானா, அதுதான் இல்லை.
 

சரி, தமிழ் விக்கிபீடியாவில , ஆங்கில விக்கிபீடியாவில அப்படி இப்படி பீடியாவில் எல்லாம் போய் தேடித்தான் பாருங்க. படிச்சவர், முட்டாள் அப்படிங்கிறதுக்கு என்ன விளக்கம் அப்படினு. ஒரு மண்ணும் இருக்காது. எதுக்குனா இதை எல்லாம் ஒரு கட்டத்துக்குள்ள விளக்க முடியாது. இது ஒரு பெரிய வட்டம். சுத்தி சுத்தி வரும்.
 

படிச்சவர் : குறைந்தது ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். இவருக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை பாகுபடுத்தி பார்க்கத் தெரியும். சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவதில் சிறப்பானவர்.
 

முட்டாள் : இவருக்கு குறைந்தபட்சம் ஒரு மொழியை கூட எழுதவோப் படிக்கவோ தெரியாது. சமயோசிதமாக சிந்திப்பதில் சற்று குறைபாடு இவரிடம் இருக்கும். என்ன பேசுகிறார் என்பதற்கான சிந்தனை கூட இவரிடம் இருப்பதில்லை.
 

சரி படிச்சவங்களுல முட்டாளுங்க இல்லையா அப்படினு சமயோசிதமா ஒரு கேள்வி வரும். முட்டாளுங்க படிச்சவங்க மாதிரி நடந்துக்க முடியாதா அப்படினு இன்னொரு கேள்வி வரும். இப்படி கேள்வி கேள்வி கேட்கறவங்க எல்லாம் படிச்சவங்கனு சொல்ல முடியாது. எதுக்குனா முட்டாத்தனமா கேள்வி கேட்கறவங்க முக்காவாசி பேரு படிச்சவங்கதான்.
 

ஆக மொத்தம் படிச்சவங்களுல முட்டாளுங்க இருக்காங்க. அவங்கதான் படித்த முட்டாள்கள். இப்ப இருக்கிற வாழ்க்கையில நூத்துக்கு ஐம்பது சதவிகிதம் இப்படிப்பட்ட படித்த முட்டாள்கள் தான் உலகை ஆக்கிரமிச்சிட்டு இருக்காங்க. மீதி ஐம்பது சதவிகிதம் படிச்ச விரக்தியில ஒன்னும் செய்ய முடியாதா அப்படிங்கிற மன அழுத்தத்துல இருக்காங்க. அவங்களும் ஒரு முட்டாள் கூட்டம் தான். ஆக இது, மொத்தத்துல ஒரு முட்டாள்களின் உலகம். இல்லை, இல்லை நான் முட்டாள் இல்லை, அப்படி இப்படினு நீங்க குதிச்சா நல்லா குறிச்சி வைச்சிகோங்க, நீங்கதான் உண்மையிலேயே முட்டாள். 'எப்படி மன நிலை பிறழ்ந்தவர் தன மனநிலையை குறித்த சிந்தனையை அறிய இயலாதோ அதைப் போலவே முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தை ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை. அப்படி முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டாலும் முட்டாள்களாகவே வாழ்பவர்கள் இருப்பவர்கள் அதிகம்'.
 

ஒரு பாட்டு கேள்வி பட்டுருப்பீங்க, அந்த பாட்டை இன்னொருதரம் கேட்டு பாருங்க. நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவனு நாலு பேரு சொன்னாங்க, ஏற்கனவே சொன்னவங்க ஏமாளியானாங்க, எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க.
 

எப்படி சீரும் சிறப்புமா வாழ்க்கையில வாழறது அப்படினு புத்தி சொல்றதை விட, எப்படி சீரழிஞ்சி போறதுனு சொன்னா ரொம்பவே நல்லா இருக்கும்.
 

நல்லது கெட்டது பாகுபாடு படுத்தி பார்க்கிறவங்க நல்லவர், கெட்டவர் அப்படினு பிரிச்சி பார்க்கலாம். படித்த நல்லவர், படித்த கெட்டவர். நல்ல முட்டாள், கெட்ட முட்டாள். ஆனா எப்ப கெடுதலை குறித்த சிந்தனை இருக்கோ அவங்க முட்டாள் அப்படினு ஆயிரும், அதனால படித்த கெட்டவர் எல்லாம் சரியில்லை. அவர் முட்டாள். அதுதான் முன்னமே சொல்லிட்டமே முட்டாள்களின் உலகம் இது. படித்த, படிக்காத முட்டாள்களின் உலகம்.
 

சரி படித்த முட்டாளைத் தவிர்த்து முட்டாள்களுல, ஓரளவு சிந்திக்க தெரிந்த முட்டாள், அடி முட்டாள், வடிகட்டின முட்டாள் அப்படிங்கிற பிரிவினை எல்லாம் உண்டு. அதனால அவங்ககளை எந்த பிரிவுல சேர்க்கிறது அப்படிங்கிற சிந்தனையை அப்புறம் பார்த்துக்கிரலாம்.
 

எதுக்கு இப்படி ஒரு விவரிப்பு அப்படினா வாழ்க்கையில் சீரழிய முதல் தேவை நீங்கள் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்படிப்பட்ட முட்டாள் என்பதை உங்கள் செயல்பாடுகள் தீர்மானிக்கும்.

இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் என்ன தெரியுமா? என்னதான் நான் இது முட்டாள்களின் உலகம் அப்படினு ஒரு பொது கருத்தை சொன்னாலும் உங்க கடமைனு ஒன்னு இருக்கு இல்லையா? அது என்னனா...

நீங்க முட்டாளா, இல்லையா அப்படிங்கிற ஒரு முடிவுக்கு இதுநாள் வரை நீங்க நடந்து கொண்ட முறையை, இப்ப நடந்துகிட்ட முறையை ஒரு அலசு அலசுனும். அது உங்க நடத்தை, படிப்பு, பிறர் கிட்ட எப்படி நடந்து கிட்டீங்க, துரோகம், நட்பு, காதல், கத்தரிக்காய், திருமணம், புடலங்காய், வியாபாரம், கல்வி, கலவி பொருளாதாரம், கடன், உடன், ரசிக கூட்டம், தொண்டர் கூட்டம் அது, இது அப்படினு ஒன்னு விடாம அலசனும். அலசிட்டு நீங்க முட்டாளா இல்லையானு ஒரு முடிவுக்கு வரனும், அப்படி நீங்க உங்களை முட்டாள் அப்படினு முடிவு கட்டிட்டா வாழ்க்கையில் சீரழியறதுக்கு உங்களை தயார் படுத்திட்டீங்கனு மார் தட்டி சொல்லிகிரலாம்.
 
Muthamilmantram

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts