லேபிள்கள்

புதன், 21 மார்ச், 2012

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!



* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்
மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
விருந்தாளிகளுக்கு டீ, காபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போது, கப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீ, காபி தளும்பி சிந்தாது. கா.அருள்நங்கை, திருநெல்வேலி.
மெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோ, குழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டு, உடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது. பா.சுவாதி, சிலட்டூர்.
இட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, இந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால், இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி! இதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்து, பக்கோடாக்களாகவும் பொரிக்கலாம். ஆர்.ஸ்ரீ நந்தினி, கோவை.
தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதா? ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும். பிரேமா ராஜன், திருப்பத்தூர்.
பட்டு, காட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான், அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டு, உடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்! ஆர்.கனிமொழி, கந்தர்வக்கோட்டை.
அப்ளிகேஷன் ஃபார்ம், முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன், இரு நகல்கள் எடுத்து, ஒன்றில் பூர்த்தி செய்து, அதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால், அடித்தல் திருத்தல், பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம். ஷாலினி, ஆரணி.
கிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா? அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம். ஆர்.சௌந்திரவல்லி, புதுச்சேரி.
வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.
ஆர்.ராமாத்தாள், சென்னை.
வளையல்கள் குவிந்து கிடக்கின்றனஅவற்றை அடுக்கி வைக்க ஸ்டாண்ட்இல்லையே என்ற கவலையா? வீட்டில் இருக்கும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால், செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி! லஷ்மி சுரேந்திரநாத், சென்னை.
கட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்கள். படுக்கப் போகும் முன், கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே! மீனாசங்கரன், மும்பை.
இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம். மீனா, சென்னை.
பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம். கவிதா வீராசுவாமி, சென்னை.
உங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்!
காலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.
முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.
அசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்…!
விளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.
வாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.
சமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.
பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.
தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.
உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா? அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியாஉங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.
ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் பிளீச்சிங் பவுடரைகரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.
எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.
டீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.
முட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.
பிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்: http://www.eegarai.net

2 கருத்துகள்:

ANBUTHIL சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி பாஸ்

sahabudeen சொன்னது…

thank u

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts