ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது….
1. `நாம் கொஞ்சம் பேசணும்‘
உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.
ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடுவார்.
`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.
பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.
எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.
2. `நீங்க அம்மா பையன்’
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்கஸ உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.
பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளைஸ உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.
பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.
3. `உங்க நண்பரைப் பாருங்க’
`உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமாஸ’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.
இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.
பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.
கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.
4. ‘நீங்க எப்பவும் இப்படித்தான்…’
திருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.
ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.
அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.
மாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்ஸ’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்லஸ’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.
5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’
மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமனூ. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தேஸ இப்போ தடியிடையா ஆயிட்டேஸ’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா….?!
ஆண்களிடம் பெண்கள் விரும்பாதவை
பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும்! அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக்க வேண்டும்! அவர்கள் விரும்பாத மாதிரிதான் நம் நடவடிக்கைகள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம்.
1. நேரத்தை சரியாக கனக்கிட்டு வைத்திருக்காவிட்டால்…
நேரத்தை எப்படி சரியாக கணக்கிட்டு அந்த நேர வேலைகளை சரியாக முடிக்கவேண்டும்!! அப்படியில்லாமல் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை எப்போதும் காக்க வைக்கிறீர்களா? நிச்சயம் இது சந்தோசத்தைத் தராது..அதன் பின் கேள்விகளும்.. விளக்கங்களும் …சண்டைகளும்.. சரியா வராது.
நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா? என்று அம்மணி கேட்க .. இதுக்குப் பிறகு நாம என்னத்தை சந்தோஷமாக இருப்பது?
இதே பிரச்சனை அலுவலகத்தில்,நண்பர்களிடம் என்று பரவினால் எந்த இடத்திலும் நல்லபடியா சந்தோசமா இருக்கமுடியாது. மொத்த விசயங்களும் கொலாப்ஸ் ஆகி விடும்.
2. சாக்கு போக்கு சொல்லி காலத்தை ஓட்டினால்….
சும்மா சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுபவரா.. ஒரு வேலையைச் செய்யாமல் “மறந்து விட்டேன்” என்று நிற்பவரா? கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். சின்னச்சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் மறதி மிகப்பெரிய பிரச்சினைகளில் உங்களை மாட்டிவைக்கும்.
சிலபேர் அவர்கள் வேலைகளை மறக்காமல் செய்துவிட்டு மனைவியுடன் வெளியில் செல்ல வேண்டியதையோ அல்லது மனைவி சம்பந்தமான முக்கிய விஷயங்களையோ மறந்துவிடுவார்கள். இது அவர்கள் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையின்மை, அலட்சியப்போக்கு என்றே கருதப்படும்!!
3. சூழ்நிலைக்கேர்ப நடந்து கொள்ளாவிட்டால்…
சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கவேண்டும். மனைவியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்தபொழுதை மிகுந்த சந்தோஷத்துடன் கழிக்கவேண்டும்! பிரச்சினைகள் எல்லோருக்கும் உள்ளதுதான். இது பெண்களுக்கும் தெரியும்.
ஆனாலும் சந்தோசமான, மகிழ்ச்சியான தருணங்களையே அவர்கள் விரும்புவார்கள். அதுவும் முன்னேற்பாடுடன் ஜோக்குகள், விளையாட்டுக்கள் என்று அசத்தினீர்களென்றால் அவ்வளவுதான். ஆள் ஃபிளாட் ஆகிவிடுவார்கள்!!
4. நன்றாக உடையணியாவிட்டால்….
உடை அணிவது முடிஅலங்காரம் ஆகியவற்றில் நாம் அக்கறையுடன்இருக்கவேண்டும். காதலியின் தாத்தாவின் பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் அவருக்கு ஒரு பரிசு வாங்கிச்செல்வது, (முடிந்தால் உங்க ஆளுக்கும் ஒன்று.. சும்மா ஒரு சாக்குத்தானே…) நல்ல உடை அணிந்து செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
தாத்தாதானே என்று ஏனோதானோ என்று உடையணிந்தோ, பரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. அது அங்குள்ளோர்களுக்கு முக்கியமாக உங்கள் காதலிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்!! நீங்கள் உங்கள் காதலியால் பெரிதும் ரசிக்கப்படும் முக்கிய நபர் என்பதை மறக்கவேண்டாம்.
5. அனாவசியமாக விஷயங்களை மறைத்தால்….
விஷயங்களை அனாவசியமாக மறைப்பது, அப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும் பிரச்சினையை உண்டு பண்ணும். உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. நீங்கள் நிறைய விஷயங்களை மறைத்துவைத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நம் சொந்தக்காரர்கள் (கோள் சொல்வதற்கென்றே இதில் சிலர் இருப்பர்) , நண்பர்கள் மூலம் தெரியும்போது நீங்கள் எந்தச்சமாதானமும் சொல்ல முடியாது.
முழுப்பொய்யராகக் காட்சியளிக்கும் நிலைக்குத் தள்ளப் படுவீர்கள்!! அப்புறம் நாம் சொல்லும் சமாதானங்கள் எடுபடுமா என்ன!!” நீங்கள் அவ்வளவு பெரிய விசயத்தையே மறத்தவர்… உங்களை எப்படி நம்புவது?” என்றுதான் கேட்பார்கள்.
6. மனைவியை வைத்துக்கொண்டு மற்ற பெண்களை ஸைட் அடித்தால்….
மிக முக்கியமானது. நாம் நமது பக்கவாட்டிலோ, பின்புறமோ ஒரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு. ஆனால் மனைவி அதைத் தவறாக (‘மிகப்பெரிய தவறாகக்) கருதுகிறார்கள்… அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!.. ஹி.. ஹி…ஹி.. இதை உடனே சொல்ல மாட்டர்கள்.
கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நல்லா ப்ரூஃபானவுடன் கேட்பார்கள். நாம முழிக்கவேண்டியதுதான். “ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க… அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே…” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. பார்ப்பதற்கே இப்படியென்றால் பிற பெண்களைப் பாராட்டிப் பேசினீர்களென்றால் அவ்வளவுதான்.
6 கருத்துகள்:
சொந்த சரக்கா? Really Good!
JUST FOR FUN
அனுபவம் பேசுது மாமோய்!!
hellow SAHA BUDEEN இது நடந்ததா? நடக்க போறதா ?
THANK U FOR U R COMMENT
THANK U FOR U R COMMENT
கருத்துரையிடுக