லேபிள்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

உலக சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படையில் இன்று முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இந்த ஒப்பற்ற வளர்ச்சி உலக ஆதிக்க வக்கிரப் புத்தி கொண்ட சமூகங்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
உலக மதங்களில் வயதினடிப்படையில் மிகவும் இளைய மதமாகத்தான் இஸ்லாம் கணிக்கப்படுகின்றது. அதன் துரித வளர்ச்சி, கட்டுக்கோப்பு, தளர்வற்ற தன்மை, பிற மதத்தினர்களை இலகுவில் கவரும் திறண் போன்றவற்றை மேற்கத்திய நாடுகளும், கிறிஸ்தவ ஆதிக்க வர்க்கமும் சகித்துக் கொள்ள முடியாமல் திணறுவதை அவர்களது ஆக்கங்கள் அம்பலமாக்கிவிடுகின்றன!
‘அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்து விட நாடுகின்றனர். இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை’. – அல்-குர்ஆன் (9:32).
சத்தியத்தின் வளர்ச்சியை, உண்மையின் உயர்ச்சியை யார் தான் தடுக்க முடியும். சத்தியச் சூரியன் உதித்து விட்டால் சட்டென்று விலகிவிடும் இருட்டு. சூரியனுக்கு கருப்புச் சாயம் பூச நினைக்கின்றது ஒரு வக்கிரச் சமூகம்! சத்திய இஸ்லாத்தின் சர்ரென்ற வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தியத்தை அசத்தியமாக்கும் முயற்சிகளில் பலர் களமிறங்கியிருக்கின்றனர்.
உலகத்தாருக்கு அருட்கொடையாக உதித்த எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலிச் சித்திரத்தின் மூலம் அவமதிக்க அண்மைக் காலமாக டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ளவர்களால் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் முன்னர் இருந்ததை விட முஸ்லிம்களிடத்திலும், முஸ்லிமல்லாதோரிடத்திலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அந்தஸ்தும், மதிப்பும் அதிகரித்து வருவதை அவர்களே உணரத் தொடங்கியுள்ளனர்.
தரமான பொருட்கள் சந்தைகளில் அதிகம் கொள்முதல் செய்யப்படுவது அதன் சிறப்பை உணர்த்துகின்றது. தரமற்ற பொருட்கள் மற்றும் போலி உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகளுக்கு தரமான பொருட்கள் அதிகம் விலை போவதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் தரமான பொருட்கள் விற்போரைத் தாக்குவதையும், அந்த இடத்திலிருந்து அவர்களது வணிகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதையும் நாம் நாளாந்தம் அங்காடி விற்பனைத் தளங்களில் காணும் காட்சிகளாக மாறிவிட்டது.
தரம் குறைந்த பொருட்களையும், போலி உற்பத்திகளையும் அதிகம் விற்கும் இடங்களில் தரமான பொருட்களை சந்தைப்படுத்துவோருக்கு இடம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த வியாபாரிகளைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதையும், குறிப்பிட்ட அப்பொருட்களைப் பற்றி கீழ்தரமாகப் பேசுவதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இதனால் போலி வார்த்தைகளில் மயங்குபவர்கள் மயங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஏமாற்றமடைந்து போவது ஒரு புறம் கவலையாகவும் மறு புறம் வேதனையாகவும் இருக்கின்றது.
போலிகள் கவணம்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்: -
இந்த நடவடிக்கையினால் தரமான பொருட்கள் தரம் குறைந்ததாக மாறி விடாது. அதனை விற்கும் வியாபாரிகள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்பதும் தவறு. எனவே தான் நடுநிலையாளர்கள் நம் சிந்தனையைக் கிளறும் சிறந்த வரிகளைக் கற்றுத் தந்து விட்டு கறை சேர்ந்துள்ளனர்.
கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீரவிசாரித்து அறிந்ததே மெய்: -
இஸ்லாத்தை நோக்கி முஸ்லிமல்லாதோரின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எந்தப் பொருள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றதோ அப்பொருளைப் பற்றி அறிந்து கொள்ள மனிதர்கள் முற்படுவது இயற்கை. அதே போன்று தான் இன்று இஸ்லாமும், முஸ்லீம்களும் உலக மன்றத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாக மாறியுள்ளது. இஸ்லாம் எக்கோணங்களிலெல்லாம் அவமதிக்கப்பட வேண்டுமோ அக்கோணங்களில் எல்லாம் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துமே வீண் பழியும், பொய்க் குற்றச் சாட்டுக்களுமாகும். இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் மேற்கத்திய செய்தி ஊடகங்களும் சர்வதேச வலைப்பின்னல் தளங்களும் அதீத ஆர்வம் காட்டுகின்றன!
அரக்கர்களால் தூண்டப்பட்ட மக்கள் அல்-குர்ஆனைப் படிக்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். பெருபேறு என்னவென்றால் அல்-குர்ஆன் அவர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் நாளாந்தம் இனைந்து கொண்டிருக்கின்றனர். இது வெரும் போலிக் கூற்றன்று. http://www.tubeislam.com என்ற வெப்தளத்தைப் பாருங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இஸ்லாத்தை நோக்கி படையெடுப்போரின் பட்டியலை அங்கே காணலாம். அவர்களது சொந்த வாக்கு மூலம் அங்கே ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உண்மையை பொய்படுத்தும் நடவடிக்கையில் கிறிஸ்தவ அமைப்புக்கள் விடா முயற்சி எடுத்துள்ளனர். உலக பிரசித்தி வாய்ந்தவர்களின் பெயர்களை இட்டு இன்னார் முஸ்லிமாகி விட்டார், இன்னார் இஸ்லாத்தை ஏற்று விட்டார் என்றெல்லாம் போலியாக அவர்களே பொய் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். மைக்கல் ஜெக்ஸன் முஸ்லிமாகி விட்டார், சுனிதா வில்லியம்ஸ் முஸ்லிமாகி விட்டார் என்று சில கிறிஸ்தவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக புதிதாக இஸ்லாத்தை ஏற்போரின் உண்மைச் செய்திகளை உலகின் கண்களுக்கு பொய்ப்பிக்க முனைகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை நினைக்கும் போது பாவமாக உள்ளது. பொன்னான நேரத்தை வீணடித்து தீமைகளை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
சகோதரர்களே! சத்தியத்தை ஏற்று ஏக தெய்வ விசுவாசியாக வாழுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்போருக்கு வழிவிடுங்கள்

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts