லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

ஜோரான ஜோக்ஸ்..!-5



# மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
# கணவன் - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
மனைவி- இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்................

# காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது. 
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
 
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.
# என்னங்க..சீக்கிரம் டி.வி.ஆஃப் பண்ணுங்க..!
-
ஏன் பையன் படிக்கிறானா..?
-
இல்லைங்க..! பக்கத்து வீட்டிலே ஏதோ சண்டை…ஒண்ணுமே
கேட்க மாட்டேங்குது..!

# நேத்து எங்க வீட்டுக்குத் திருட வந்த திருடன் என்னை 
சேர்ல வச்சு கட்டிட்டான்..!
உன் புருசன் என்ன பண்ணினாரு?
சந்தோஷத்திலே அவனுக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டுக் 
கொடுத்தாரு..!
# உங்ககிட்டேதான் டூ வீலர் எதுவுமே இல்லை. அப்புறம் 
எதுக்கு ஹெல்மெட் வாங்கிட்டுப் போறீங்க?
என் மனைவி கொஞ்சம் முன் கோபக்காரி, அதான்

# உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts