விந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்
ஆ ஹா வந்திட்டாங்கையா வந்திட்டாங்க ! தடுக்கவே முடியாத கிரெடிட்காட் திருடர்கள் வந்திட்டாங்க. ஒவ்வொரு முறையும் திருட்டு கிரெடிட்காட் செய்பவர்களைப் பொலிசார் பிடிப்பதும், அவர்கள் பாவிக்கும் டெக்னோலஜியை கண்டு பிடித்து தடைசெய்வதும் வழக்கம். ஆனா இம் முறை கொஞ்சம் கடினமாக இருக்கு போல ! சரி விடையத்துக்கு வருவோம்.
சுமார் 10 , 15 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கிரெடிட் காட்டை இன்னொருவர் களவாடி அதனை வைத்து பணம் சம்பாதித்தனர். ஒருவாறாக அதனை ஒழித்துக்கட்டிய பொலிசாரும் பாங்கும் சேர்ந்து புதுவகையான கிரெடிட்காட்டை வெளிவிட்டனர். பின்னர் அதனை இலத்திரனியல் உபகரணம் கொண்டு வாசித்து, அதில் உள்ள தகவல்களை வேறு ஒரு கிரெடிட் கார்டில் போட்டு அதனை வைத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினர்கள். அதனையும் ஒழித்துக்கட்ட கட்டாமம் சிப் அன் பின் வரவேண்டும் என்பதற்காக எல்லா கிரெடிட் காட் கம்பெனிகளும் சிப் அன் பின்னுடன் கூடிய கிரெடிட் காட்டுகளை வெளிவிட்டனர்.
இதனை பார்த்த திருடர்கள், மக்கள் சென்று பணம் எடுக்கும் ஏ.ரி.எம் (தானியங்கி காசு இயந்திரம்) அதில் கமராவைப் பூட்டி கிரெடிட் காட்டின் நம்பரையும் மற்றும் இரகசிய இலக்கத்தையும் எடுத்து தாமே புதிதாக ஒரு காட்டைச் செய்து அதில் இந்தத் தகவல்களைப் போட்டு வேறு ஏ.ரி.எம் மெசினுக்குச் சென்று காசாக அடித்து எடுத்தனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், முன்னர் எல்லாம் கள்ளக் கிரெடிட்காட்டைப் போட்டு ஏதாவது சாமான்கள் தான் வாங்குவார்கள் பின்னர் அதனை அரைவிலைக்கு விற்று காசாக்குவார்கள். அதனைத் தடுக்க சிப் அன் பின் கொண்டுவந்தால், இப்ப அதனைப் பயன்படுத்தி பணமாக எடுத்துச் செல்கிறார்கள் இந்தக் கள்ள கிரெடிட்காட் கும்பல். சமீபத்தில் இதனைத் தடுக்க பொலிசாரும் வங்கிகளும் சேர்ந்து பெரும் பரப்புரைகளில் ஈடுபட்டனர். அதாவது ஏ.ரி.எம் மெசினாக இருக்கலாம் இல்லை வேறு எந்த இடத்திலும் உங்கள் கிரெடிட்காட்டை பாவித்தால் பின் நம்பரை அடிக்கும்போது உங்கள் கைகளால் மறைத்துக்கொண்டு அழுத்துங்கள் என்பதே அந்தத் "திருவாசகம் ஆகும்"
அதுக்கும் இப்போது ஆப்புவைத்தார்கள் மாப்பு ! அதுதான் பொலிசார் குழப்பிப்போயுள்ளனர். என்ன தான் கைகளால் பொத்திப் பொத்தி உங்கள் பின் நம்பரை அடித்தாலும் அதனை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகிறார்களாம் கள்வர்கள். எப்படி என்று தெரியாமல் எப்.பி.ஐ முழிக்க இதனை நாம் கண்டுபிடிக்கிறோம் என அமெரிக்க பல்கலைக்காழக இலத்திரனியல் விரிவுரையாளர் சிலர் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் திகைத்துப்போனார்களாம். ஏன் தெரியுமா அதி நவீன தொழில் நுட்ப்பத்துடன் கூடிய வெப்பத்தை உணரும் புற ஊதாக் கதிர்களைக் கொண்ட கமராக்களை தற்போது திருடர்கள் பாவிக்கின்றனராம். இதன் விலை வெறும் 1,200 டாலர்கள் தான் என்பது பெரும் கவலைக்குரியவிடையமாக உள்ளது. சரி இதற்கும் பின் நம்பருக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா ? இருக்கிறது ...
அதாவது ஒருவர் தனது கிரெடிட் காட்டை ஏ.ரி.எம் மெசினுக்குள் செலுத்திய பின்னர் தனது பின் நம்பரை அடிக்கிறார் அவர் விரல்கள் உலோகத்தினாலான பட்டன்களில் அழுத்தப்படுகிறது, மனித உடம்பில் உள்ள வெப்பம் அந்த உலேகங்களுக்கு கடத்தப்படுகிறது. அது சுமார் 1 நிமிடத்துக்கு மேலாக அந்த உலோக பட்டன்களில் மேல் இருக்கும். அவர் பணத்தை எடுத்துவிட்டுச் சென்ற பின்னர் உடனடியாக அச் சிறிய கமராக்களோடு அங்கே வரும் திருடர்கள், அந்தக் கமரா ஊடாகப் பார்த்தால் முன்னர் பணம் எடுத்த நபர் அழுத்திய 4 இலக்க பின் நம்பர் மேல் வெப்பம் இருக்கும். அதனை இந்தக் கமரா கண்டுபிடித்துவிடும். சரி 4 இலக்கங்கள் இருக்கிறதே. அதை அறிந்தால் கூட எத்தனையோ காம்பினேஷன் இருக்கே சரியான பின் நம்பரை எவ்வாறு கண்டு பிடிப்பது. இல்லை இந்த 4 இலகங்களில் எது முதலில் எது நடுவில் எது கடைசியில் வரும் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்று நீங்கள் அடுத்த கேள்வி கேட்பீர்கள் என்று எமக்குத் தெரியும். அதுவும் சுலபமாகிவிட்டது.
ஏன் தெரியுமா ? ஒருவர் தனது 4 இலக்க பின் நம்பரில் முதலாவதை அழுத்தி பின்னர் மில்லி செக்கன் இடைவெளியில் அடுத்த இலக்கத்தை அழுத்தி பின்னர் 3 வது இலக்கத்தை அழுத்தி பின்னர் 4 வது இலக்கத்தை அழுத்துவார். ஆகவே ஒவ்வொரு தடவையும் 1 நம்பரை அழுத்த இடைவெளி இருக்கும். பின்னர் அவர் சென்றதும் கமராவோடு வந்து அதனூடாகப் பார்க்கும்போது முதலில் அழுத்திய நம்பருக்கு உரிய பட்டன் மேல் மெல்லிய சிவப்பும், அடுத்து அழுத்திய பட்டனுக்கு மேல் கொஞ்சம் கடுமையாகவும் அதற்கடுத்ததாக அழுத்திய பட்டன் மேல் இன்னும் கடுமையாகவும் கடைசியாக அழுத்திய பட்டன்மேல் கடுமையான சிவப்பு நிறம் தெரியுமாம். அதை வைத்தே 4 இலக்க பின் நம்பர் அதற்குரிய வரிசை என்பனவற்றைக் கண்டு பிடித்துவிடலாமாம். இதனை எப்படித் தடுப்பது என்று தான் தற்போது பொலிசார் கலங்கியுள்ளனராம். உலகில் உள்ள பல மில்லியன் ஏ.ரி.எம் மெசின்களில் இலக்கங்கத் தகடுகள் உலேகத்தில் தான் இருக்கிறது. இவை அனைத்தையும் மாற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு. இல்லை இதனைக் கண்டு பிடித்த அமெரிக்க பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு தீர்வை எட்டினால் நல்லது. பொதுவாக நீங்கள் ஏ.ரி.எம் மெசினில் காசை அடித்து எடுத்தால் அவ்விடத்தில் இருந்து 1 நிமிடம் கழித்துச் செல்வது நல்லது. இல்லையேல் ஒரு ஈரத் துணியால் துடைத்துவிட்டுச் செல்வது நல்லது.
இனி வருங் காலத்தில் பக்கத்தில் ஒரு ஈரத் துணியை வங்கிகள் வைத்தாலும் ஆச்சரிப்படவேண்டாம் ஐயா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக