லேபிள்கள்

சனி, 3 செப்டம்பர், 2011

காது குடையலாமா? ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான்


காது குடையலாமா? ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான்


எப்போது பார்த்தாலும் காதுக்குள் ஏதோகுறுகுறுவென்று இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சூழலில் எதையாவது எடுத்துக் குடையலாமா? குத்திக் கொள்ளலாமா? என்கிற அளவுக்கு அரிப்பும், வலியும் தாங்க முடியவில்லை.

நானும் தினம்பட்ஸ்எல்லாம் போட்டு க்ளீன் பண்ணிப் பார்த்து விட்டேன். ஆனாலும், என் காதுப் பிரச்னை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் என்ன செய்வது டாக்டர்? ஏன் அப்படி ஆகிறது?

டாக்டர் ரவி ராமலிங்கம் (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)

‘‘
நீங்கள் உங்கள் பிரச்னைக்குக் காரணம். இதுவரை காதுக்குள் விட்டுக் குடைந்தபட்ஸ்தான் உங்களின் எதிரி. என்ன ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா?

உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான். உங்களுக்கு ஏற்பட்டிருப்பதுஒடிடிஸ்எக்ஸ்டெர்னாஎனப்படும் காது சம்பந்தப்பட்ட நோய்.

இது வருவதற்குக் காரணமே காதுக்குள் விரல், சாவி, குச்சியை விட்டு நோண்டுவது, ஊக்கை விட்டு குடாய்வது, இறகை உள்ளே விட்டுக் குடைந்து சுகம் காண்பது. அது மட்டுமில்லாமல் காதை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்றுபட்ஸ்ஸை உள்ளே விட்டுக் குடைவது ஆகியக் காரணங்களால்தான் இந்நோய் ஏற்படுகிறது.

அதுவும் உலக அளவில் இந்தியாதான் இந்நோயில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறதாம்.

செவிப்பாதையின் மெல்லிய தோலில் வலி, வீக்கம், சிராய்ப்பு என்று சிறிய புண்களோடு ஆரம்பிக்கும் இந்நோய் முற்றும்போது காது கேட்கும் திறனையே நிறுத்தி விடும். அதோடு, நீச்சல் அடிக்கும்போது தண்ணீர் காதுக்குள் புகுந்திட இன்பெக்ஷன் ஏற்படக்கூடும். இதற்குஸ்விம்மர்ஸ் இயர்என்று பெயர்.

காதைப் பொறுத்தவரையில் எந்த கிரிமியும் உள்ளே புகாது. அதற்கு பாதுகாக்கத்தான் (கீணீஜ்) வாக்ஸ் எனப்படும் மெழுகு போன்ற திரவம் இருக்கும். காதுக்குள் நுழையும் ஒலிக் காற்று என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செவிப்பாதையில் பாதுகாவலனாக விளங்குகிறது.

காதினுள் புகும் நீர், தூசு போன்றவைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு வெளியேற்றும் தன்மை கொண்டது. அதைப் பலர்அழுக்குஎன்று நினைத்துபட்ஸைக் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர்.

இதனால் காதுப் பிரச்னைகள் இன்னும் அதிகரிக்கிறது. எனவே காதுக்குள் எதையும் விட்டுக் குடையாமல் இருந்தாலே பிரச்னை வராது.

பிரச்னையின் ஆரம்பக்கட்டத்திலேயே சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் எனக்குணப்படுத்திவிடலாம். ஆனால், அப்படியே விட்டு விட்டால் செவிப்பறையில் ஓட்டை விழுந்து காது கேட்காமல் போய் விடும். சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்னை வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts