லேபிள்கள்

திங்கள், 20 ஜூன், 2011

கொகா கோலாவின் உண்மையான கலவை


மக்களே உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.

இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.

கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?

கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.
1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகாகோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.

கொகா கோலா எதனால் உருவாகிறது.

கொகா கோலா அடைக்கப்பட்டுவரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள்பற்றியஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.

ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

கசிந்தது பார்முலா ரகசியம்.

இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.

இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.

ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?

கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.

இதுதான் அந்த ரகசிய பார்முலா.

Fluid extract of Coca 3 drams USP.

Citric acid 3 oz .

Caffeine 1oz .

Sugar 30 (it is unclear from the markings what quantity is required).

Water 2.5 gal.

Lime juice 2 pints 1 qrt.

Vanilla 1oz .

Caramel 1.5oz or more to colour.

7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).

Alcohol 8oz .

Orange oil 20 drops.

Lemon oil 30 drops.

Nutmeg oil 10 drops.

Coriander 5 drops.

Neroli 10 drops.

Cinnamon 10 drops.

பார்முலா வெளிவந்த விதம்.

கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.

அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life's என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸீரா இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.

கொகா கோலா பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்ன?

கொகா கோலாவின் கலவையில் கலக்கப் படும் பல ரசாயனங்களில் அல்கஹாலும் ஒன்றாக இருக்கிறது. அல்கஹாலைப் பற்றிய மார்க்கதின் நிலைபாட்டை முதலில் நாம் தெரிந்து கொண்டாலே கொகா கோலா பற்றிய மார்க்கத் தெளிவை லேசாகப் புரிய முடியும்.

ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?

ஆல்கஹால் போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.

போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உஎனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர்என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: புகாரி 6124

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 1788> நஸயீ 5513> 3725

و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி> நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால்> போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (3995)

3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

முஸ்லிம் (4071)

மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.

எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts