நாம் தான் முயல வேண்டும். |
உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதில்... வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார். தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார். பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார். பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டடத்தொழிலாளி. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான். ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா�ரியாவார். மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார். எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும். பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர். எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம். |
லேபிள்கள்
- CHILD CARE (158)
- COMEDY (51)
- COMPUTER (137)
- GENERAL (18)
- INFORMATION (542)
- ISLAM (442)
- MEDICAL (854)
- MY ALBUM (5)
- STORY (13)
ஞாயிறு, 29 மே, 2011
நாம் தான் முயல வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?
ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...
Popular Posts
-
உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...
-
இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...
-
பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன ? மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி அல்லாஹ் கூறுகின்றான்: وما نرسل بالآيات إلا تخويفا ' الإسرا...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக