லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

உட்கார்ந்து யோசிச்சது


ஒரு வடை கதை
15 வருடத்திற்கு முன் ஒரு வடை 1 ரூபாய், ஒரு கால் பண்ண 4 ரூபாய்,இப்போ பார்த்த ஒரு கால் பண்ண 10 பைசாதான், ஆனால் ஒரு வடை 4ரூபாய், என்ன ஒரு விஞ்சான வளர்ச்சி அடைந்து இருந்தாலும்வடை போச்சே.
சீரியஸா ஒரு மேட்டர் 
அழகான ஓவியம் என்று உலகே ரசிகிறது, நான் எப்படி புரியவைப்பேன் அது என் புகைபடமென்று
சீரியஸா பேசும்போது சிரிக்க கூடாது 
ஒரு பள்ளிகூடத்தில்  
வரலாறு வாத்தியார் விடுமுறையில் இருந்த சமயம், அந்த பள்ளிகூட அறிவியல் ஆசிரியர்  வரலாறு பாட பரீட்சைக்கு கேள்வி தாள் தயாரித்தார், பரிட்சையில் அதை பார்த்த மாணவர்கள் அப்படியே ஷாக் ஆகிடாங்க, ஏன் தெரியுமா, அவருடை கேள்வி "Describe Jhansy Rani with neat Diagram?" - முடியலை!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு மொக்கை,
ப்ளூ வுக்கும், பச்சைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? இது தெரியாதா, ப்ளூ ஆங்கில வார்த்தை பச்சை தமிழ் வார்த்தை, நீங்க உங்க பொது அறிவை இன்னும் வளர்க்கணும் . 
ஜொள்ளு பார்ட்டி
ஒரு பொண்ணு ஒன்னு பஸ் ஸ்டாப் லே பஸ்க்கு காத்திருந்தது, வெயில் காரணமாக துப்பாடுவுளே அவ பாதி முகத்தை மூடி இருந்தா, இது தெரியாம ஒரு ஆளு அவ கிட்டே பொய் லிப்ட் வேணுமானா அதுக்கு அவ சொன்ன அய்யோ அப்பா இது நான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு குழப்பம்
சோம்பெரிதனம்தான்  நம்முடைய பெரிய எதிரி என்றார் நேரு அவர்கள். 
நாம எதிரிய நேசிக்க கத்துக்க வேண்டும் என்கிறார் நம்ம காந்தி  தாதா 
எப்படி குழப்புறாங்க பாருங்க...............
ஒரு ஹல்வா ஜோக் .
ஒரு இந்திய பிரஜை ஒரு அமெரிக்க காரனுக்கு ரத்ததானம் செய்தார் அதற்க்கு அவன் ஒரு கார் அன்பளிப்பு குடுத்தான். உடனே நம்ம ஆளு மறுபடியும், ஒரு முறை ரத்ததானம் செய்தான் பேராசையிலே, அதுக்கு அந்த அமெரிக்கன்காரன் திருப்பி இவனுக்கு ஹல்வாதான் குடுத்தான்,கொய்யாலே நம்ம ரத்தமள்ளே   ஓடுது..........
மனிதன் ஒரு விளக்கம்,
மனிதன் என்னும் உயிரணம், அது மரங்களை வெட்டி காகிதங்கள் செய்து, அதில் "மரங்களை காப்பாற்றுங்கள்" என்று அழகு பார்க்கும்
 ஆச்சர்யமான உண்மை
1872 - இல்  மெக்சிக்கன் விமானமும், ஜெட் விமானமும் நாடு வானில் நேருக்கு நேர் மோதி இழப்புக்குள்ளாகின, அதே மாதிரி மறுபடியும் 1976 -இல் இதே இந்த இரண்டு விமானமும், இதே போல விபத்துக்குள்ளாகின, ஆனால் இது எதனால் என்று 2009 வரை யாருக்கு தெரியவில்லை, 2009 -இல் தான் ISRO-இல் தான் கண்டுபுடிச்சாங்க, எப்படி தெரியுமா, ஒரு தடவை முட்டிட்டு விட்ட கொம்பு முளைசிடுமே அதான் -  ----  சாகடிகிராங்கயா?????????????????? 
ஒரு அப்பா அவருடைய முன்று வயது பையனிடம் கேட்டார் உனக்கு தம்பி பாப்பா புடிக்கும இல்லை தங்கச்சி பாப்பா புடிக்கும? அதுக்கு அவன் சொன்னான் எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பவைதான் புடிக்கும்னு,  -   பயபுள்ளே எப்படி யோசிகிறான் பாருங்க..............

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts