லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்


மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்
இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் ரிங் வந்து கட் ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-
வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-
வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும். திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும்.

சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி(வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லாமேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை.

2-
வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லாமேரி தொடர்பு கொண்டால் எதிர்முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது. அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என
கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார்.

கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா-மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார். இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும்-
கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார்.

நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள். பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர்.

ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார். அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது.

நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார்.

எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு. ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது. கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு
அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி.

காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் திருச்சி பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts