லேபிள்கள்

சனி, 2 ஏப்ரல், 2011

நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.


நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல்
பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை
எப்படி திருடுகின்றனர் இதை தடுக்கும் வழிமுறை என்னென்ன
என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப் பதிவு.
மெமரி கார்டு , பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய
சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை
Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது
0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்
எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்
அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover  செய்து பெற
முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை
மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை, ஆரம்ப காலத்தில்
நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும்.
நம் மெமரி கார்டு அல்லது பெண்டிரைவ்-களை ரிப்பேர் செய்ய
கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில்
இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும்
அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணை கொண்டு அந்த
கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான
எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது. கணினி
பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம்
ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள்
மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க
சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்னதான் நாம் மெமரி
கார்டில்  இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக
Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை
பார்த்துகொண்டு தான் இருப்போம் ஆனாலும் நம் மெமரி கார்டின்
ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்றுவரை உள்ள்
அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும்,
உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ்
நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வரைஸை நீக்கலாம்,வைரஸ்
பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க
வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore
என்பதை சொடுக்கி வரும் திரையில் இடதுபக்கத்தில் Memory
Card -
க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை
காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி
செய்து முடித்த பின் Memory Card - Format செய்து பயன்படுத்தலாம்.





கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts