லேபிள்கள்

சனி, 23 ஏப்ரல், 2011

மானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பார்க்கலாம்


மானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பார்க்கலாம். மடிக்கணிணிகளே மிகுதியாகிப்போன இன்றைய சூழலில் கணித்திரைகள் தேவையில்லையே எனினும், சில பல காரணங்களுக்காக கணிணி மானிட்டர்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் சாதாரண மடிக்கணிணியின் சிறிய திரை அளவு மற்றும் சிறிய எழுத்துரு அளவுகள் உங்கள் கண்பார்வைக்கு வசதியாக இல்லாத போது ஒரு பெரிய மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அல்லது வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் மடிக்கணிணி திரை மட்டுமல்லாமல் இன்னொரு ஸ்கீரீன் கூட (Dual screen) இருந்தால் வேலை செய்ய இன்னும் எளிதாக இருக்குமே என எண்ணினால் நீங்கள் கூடுதலாக ஒரு மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அப்போது நினைவில் வைக்க வேண்டிய சில குறிப்புகள்.

1.திரை அளவு:
பல்வேறு Screen Size-களில் வரும் கணித்திரைகள் இஞ்சு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. 21” முதல் 23” அளவு வரையான மானிட்டர்கள் பிரபலம். இந்த இஞ்ச் அளவுகள் டயகணல் அளவுகளாகும். அதாவது வலது மேல் மூலையிலிருந்து இடது கீழ் மூலைவரையான இஞ்ச் அளவாகும் (படம்). விலையில் உங்களுக்கு தகுதியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

2.திரைத் தரம்:
பெரும்பாலும் LCD மானிட்டர்கள் தான் மார்கெட்டில் உள்ளன.VN,TN,IPS போன்ற LCD நுட்பங்கள் உள்ளன. இதில் In-Plane Switching எனப்படும் IPS பேனல்கள் பெட்டர்.அவை LED Backlight ஆக இருந்தால் இன்னும் உச்சிதம். Dead pixels எதுவும் இல்லாமல் இருந்தால் அது நம் அதிஷ்டம். HD எனப்படும் High Definition அளவில் 1080p இன்றைய சராசரி உச்சம். ரெசல்யூசனுக்கு 1920x1080 அளவை உச்சமாக கொள்ளலாம். அகல திரையாக அதாவது wide screen-னாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.போர்ட்டுகள்:
ஒன்றுக்கும் மேல் HDMI போர்ட்கள் இருப்பது மிகவும் நல்லது.ஒரு வேளை உங்கள் கணிணி கொஞ்சம் பழையதுவெனில் VGA போர்ட்டை பயன் படுத்துவீர்கள்.

4.ஸ்பீக்கர் மற்றும் டிவி டியூனர்:
பெரும்பாலான மானிட்டர்கள் தன்னுடன் ஸ்பீக்கருடன் வருவதில்லை. சில மானிட்டர்கள் ஸ்பீக்கர்களை இணைக்க வழி கொண்டிருக்கும். அப்படியெனில் ஒலியையும் ஒளியையும் ஒரே வயரில் கடத்தும் HDMI போர்ட் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் மானிட்டரை டிவியாகவும் பயன்படுத்த யோசனை இருந்தால் டிவி டியூனர் உள்ள மானிட்டராக வாங்கவும். கொஞ்சம் விலை அதிகமாயிருக்கும்.

5.இன்னும் பிற:
மானிட்டரின் ஸ்டைல், எடை மற்றும் கனத்தை கூட சிலர் கருத்தில் கொள்ளவேண்டி வரும்.கேமிங்குக்காக நீங்கள் இந்த மானிட்டரை பயன்படுத்துவதாக இருந்தால் Response Time 2ms ஆக இருப்பது நல்லது. மானிட்டரின் ஸ்டாண்ட் மற்றும் அதை திருப்பும், உயர்த்தும் வசதிகளும் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது நல்லது.

பிகு:
LCD திரைகளின் Stuck மற்றும் Dead pixels-களையும் பிளாஸ்மா திரையின் screen burn-in-களையும் JScreenFixதீர் கும்

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts