லேபிள்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

தெரியுமா உங்களுக்கு


  தெரியுமா உங்களுக்கு?

1.             இணைய இணைப்பின் வேகம் 8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” 
என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது. 
3.
பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும். 
4.
அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
5.
உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6.
லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7.
கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims  என்ற கேம்.
8.
உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.
ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும்  கணக்கிட்டுப் பார்க்கவும். 
10. “Hotswapping” 
என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11.
அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும். 
12.
ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும்முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம்இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட்  பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13.  FAT16, FAT32, 
மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும். 
14.
விண்டோஸ் என்.டி. (Windows NT)  யில் உள்ள என். டி. என்பதுNew Technology  என்ற சொற்களைக் குறிக்கிறது. 
15. 1977
ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார். 
16.
விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ரியர்  (Charles O’Rear).கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts