லேபிள்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010

'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு

ஆறு மாதம் வைக்கப்பட்ட மெக்டொனால்ட் உணவு தீங்கை விளைவிக்கும் 'பிளாஸ்டிக்'காக மாறுவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. மெக்டொனால்ட், கே.எப்.ஸி போன்ற உணவகங்களில் பரிமாறப்படும் ஃபாஸ்ட் புட் எனப்படும் விரைவு உணவு கலாச்சாரம் உலகெங்கும் பரவி உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் இல்லாமல் இந்த உணவகங்கள் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இங்கு உணவருந்வது ஆடம்பரமாகவும், பெருமையாகவும் பெரும்பாலான இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் மத்தியிலும் கருதுப்படுகிறது.

மிக சுத்தமான உணவாக மிகுந்த ஆடம்பரமாக பரிமாறப்படும் இந்த உணவுகள் உண்மையில் உடல் நலத்திற்கு மிக கேடானது. மேலை நாடுகளில் இந்த உணவகங்களில் வாடிக்கையாக உணவருந்தும் குழந்தைகள் அதிகப்படியான உடல் பருமனாகி சிறிய வயதிலேயே இருதய கோளாறு, சக்கரை வியாதி போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கோழி, உருளைகிழங்கு, சோளம் மற்றும் சுவையை கூட்ட பயன்படும் மோனோ சோடியம் குளூட்டாமேட்  (Monosodium glutamate) போன்ற ஆபத்தான பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன இங்கு தயாரிக்கும் உணவுகள். இங்கு பயன்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட சோளம் தான் பேட்டரி போன்ற இராசாயன பொருட்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கலைஞர் ஒருவர் ஆறு மாத காலமாக மெக்டொனால்ட் உணவகத்தில் விற்கப்படும் உணவை வாங்கி தனது வீட்டில் தொடர்ந்து புகைப்படும் எடுத்து வந்தபோது அது இயற்கைக்கு மாறாக மாறியுள்ளது.

நியுயோர்க் நகரில் மன்ஹத்தன் பகுதியை சேர்ந்த சல்லி டேவிஸ் (Sally Davies) ஏப்ரல் 10ல் மெக்டொனால்ட் உணவகத்தில் 'ஹாப்பி மீல்' என்ற உணவை வாங்கி தினமும் அதை தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார். ஆனால் ஆறு மாதம் காலமாக அந்த உணவு இயற்கையாக கெட்டு போகாமல் 'பிளாஸ்டிக்' போன்று மாறியுள்ளது. 'மகிழ்ச்சியான உணவு' என்ற அந்த பதார்த்தம் இயற்கைக்கு மாற்றமான உணவாக இருப்பதை கண்டு அவர் மகிழ்ச்சிக்கு பதில் வியப்படைந்துள்ளர்.

வழக்கமாக இரண்டு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசத்துவங்கி நாளுக்கு நாள் அழுகி வரும் இயற்கையான உணவு. ஆனால் "மெக்டோனாட் உணவு இரண்டு நாட்கள் கழித்து வாசனையற்ற திடப்பொருளை" போன்று காட்சியளிக்க தோன்றியதாக அவர் கூறியுள்ளார். "உருளைகிழங்கு ஃபிரை வதந்கியும், பர்கர் காய்ந்து போனதே தவிர அதன் உருவம் மாறவில்லை" என்றுள்ளார் அவர். வழக்கமாக இயற்கை உணவு அழுகி உரு மாற தொடங்கும்.

மேலும் ஆறு மாதம் கழித்து அதை தொட்டுப்பார்த்ததில் அது 'அக்ரிலிக்' பெயிண்டில் ஆன பொருளை போல அவர் உணர்ந்துள்ளார். அவர் கலைஞர் என்பதால் அதில் அதிகம் அனுபவம் உண்டு. சல்லி டேவிஸ் ஒரு சைவ பிரியர் என்பதால் மெக்டோனாட் உணவு இவ்வாறு இராசாயணம் கலந்தது போன்று காணப்படுவது அவரை பயத்திற்குள்ளாகிவுள்ளார். ஆனால் இவரின் குற்றச்சாட்டை மெக்டோனாட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

சல்லி டேவிஸ் இனி மெக்டொனாட் பக்கமே தலை வைக்க மாட்டார் என்று தெரிகிறது. இந்த ஆபத்தான உணவு பற்றிய உணவு நம் நாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியிலும் பரவி இயற்கையான ஆரோக்கியமான உணவை உண்ணும் நிலை பெற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts