லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

சில தகவல்கள்.



* புறா நீரை உறிஞ்சிக் குடிக்கும்.
* அண்டார்டிகா தவிர உலகெங்கிலும் புறா காணப்படுகிறது.
* மாடப் புறா தொடர்ந்தார் போல் 2,500 கி.மீ. பறந்து செல்லும்.
* புறாக்களுக்கு இரு வயிறுகள் உண்டு.
* புறாக்களில் 300 இனங்கள் உள்ளன
* அமெரிக்க தேசிய கீதத்தை இயற்றியவர் ஒரு ரஷ்யர்.
* மிகவும் லேசான உலோகம் லித்தியம்.
* உலகில் முதல் சிறைச்சாலை 1403-ம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்டது.
* உலகில் முதன்முதலாக லாட்டரிச் சீட்டு 15-ம் நூற்றாண்டில் ரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய கொடி சீனக் குடியரசின் கொடிதான்.
* உலகின் மிகக் குளிர்ச்சியான நகரம் ரஷியாவில் உள்ள நோரில்ஸ்க் என்ற நகரமாகும்.
 அதிக மொழிகள் பேசும் நாடு இந்தியா.
* புத்த இலக்கியம் பாலி மொழியில் எழுதப்பட்டது.
* திராவிட மொழிகளில் பழமையான எழுத்துருவினைக் கொண்ட மொழி தமிழ்.
* உலகின் மிகப் பெரிய அனல்மின் நிலையம் கலிபோர்னியாவில் உள்ளது.
* போக்குவரத்துக்கு என தனிப்பிரிவு காவலர்களே இல்லாத நாடு நியூசிலாந்து.
* அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.

* தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார்.
* பாரதி இயற்றிய "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாடல்1908-ல் சென்னையில் அரங்கேற்றப்பட்டது.
* உள்ளான், காடை போன்ற பறவைகளில் முட்டையிடுவது பெண் பறவை என்றாலும், அது அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது ஆண் பறவைதான்.
* கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் ஹேர்ஸ் பிரிங் பன்றியின் ரோமத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* வெண்மை நிற புலிகள் இந்தியாவில் மத்தியபிரதேசத்திலுள்ள ரேவா என்னுமிடத்தில் மட்டுமே காணப்படுகிறது.
* சூரிய வெப்பத்தால் வளிமண்டலத்தில் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளே காற்று வீசக் காரணம்.
* ஒலி அலைகளை நமக்கு எதிரொலித்து அனுப்புவது அயனி மண்டலமாகும்.
* வெளவால், நாய் இரண்டும் ஒலியைத் துல்லியமாக அறியும் திறன் கொண்டவை.
* தொடு உணர்வு செல்கள் நமது தோலில் மட்டுமே உள்ளது.
* கௌதம புத்தர் முதன்முதலில் புனித ஆசி வழங்கிய இடம் சாரநாத்.
* கிராமங்களில் 100 சதவீத மின்சார வசதி ஏற்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் அரியானா
.
 உடலிலிருந்து மூளையை எடுத்த பின்பும் உயிர் வாழக்கூடிய ஒரே இனம் ஆமை.

* உலகில் 123 மொழிகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

* கடலில் செல்லும் கப்பலின் வேகம் நாட் எனும் அலகால் அளக்கப்படுகிறது.

* இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன்முதலில் சட்டப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது.

* ஆபிரகாம் லிங்கன் புனித வெள்ளியன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

* "ஜன கன மன' முதன்முதலில் 1911 டிசம்பர் 27-ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது

* உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் துபாய் 4.1.2010 அன்று துபையில் திறக்கப்பட்டது.

* இதன் வடிவமைப்பாளர் அட்ரியன் ஸ்மித் ஆவார்.

* இதன் உயரம் 2,683 அடி ஆகும்.

* இது 160 மாடிகளைக் கொண்டது.

* இக்கட்டடத்தின் 76-வது மாடியில் நீச்சல் குளம் உள்ளது.

* இது எம்பயர் ஸ்டேட் கட்டடம் போல இரண்டு மடங்கு உயரம் கொண்டது.

* ராக்கூன் எனும் ஒருவகை கிரீப் பிள்ளை போன்ற பிராணி குறட்டை ஒலியுடன் தூங்குமாம்.

* சில வகை மான்கள் தூங்கும் போது தமது சுவாச சக்தியின் மூலம், பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் சக்தி கொண்டவை.

* ஆந்தையைத் தவிர பெரும்பாலான பறவைகள் இரவில் உறங்கும் பழக்கம் கொண்டவை.

* நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள், தன் உடலைச் சுருட்டிக் கொண்டு உடலின் வெப்பத்தைக் காப்பாற்ற, தலையை உடலின் உள்ளே பதித்துத் தூங்கும்.

* ஆடு, மாடு, மான் போன்றவை நான்கு கால்களையும் மடித்து, தலையை உடலின் மேல் வைத்து உறங்கும்.

* யானை, குதிரை ஆகியவை நின்று கொண்டே தூங்கும் பழக்கம் கொண்டவை.

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts