லேபிள்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா?

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா? 

இஸ்லாம் பெண்களை மதிக்கும் மதம் அல்லவா? பின் ஏன் முகத்தை கட்டயாம் மறைக்க வேண்டும் என்று கூறுகிறது?


பெண்கள் கட்டயாமாக முகத்தை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக, பெண்கள் முகத்தையும், (மணிக்கட்டு வரை) கையையும் தவிர மற்ற பாகங்களை மறைக்கும்படியே இஸ்லாம் கட்டளையிடுகிறது. 

இதைப் புரிந்து கொள்வதற்காக திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை இங்கே நம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்வோம். 

24:30.(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். 

பெண்களின், முகம் உட்பட முழு உடலும் மறைக்கப்பட்டிருந்தால் இந்த வசனத்தில், ''தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' என்று ஆண்களுக்கு சொல்லியது அர்த்தமற்றதாகிவிடும். அறிமுகமில்லாத, பெண்களின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதை விட்டும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கு கட்டளையிடுவதிலிருந்து பெண்களின் முகங்கள் திறந்திருந்தாலே பார்வையை தாழ்த்திக்கொள்வது சாத்தியமாகும் - பார்ப்பதற்கு ஒன்றுமில்லை எனும்போது பார்வையைத் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை. 

மேலும் மனிதன் இயங்குவதற்கு மிக முக்கியமாக முகம் திறந்திருக்க வேண்டும். பெண்கள் முறையான வழியில் தமக்கென சொந்தமாக தொழில்களைத் துவக்கி பொருளீட்டலாம் என ஆண்களைப்போல், பெண்களுக்கும் இஸ்லாம் சுதந்திரம் வழங்கியுள்ளது. இதில் முகத்தை மூடிக்கொண்டு செயல்படுவதென்பது கடினமாகவே இருக்கும். இப்படியொரு நிர்ப்பந்தத்தை இஸ்லாம் எவர் மீதும் திணிப்பதில்லை! இன்னும் கூடுதல் விளக்கம் தேவையெனில் எழுதுங்கள் தோழரே! 

(குறிப்பு: சில நாடுகளில் பெண்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொள்கிறார்களே ஏன்? இந்தக் கேள்விக்கு: ஒரு பெண் தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டால் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று கொள்க! இஸ்லாம் அவ்வாறு கட்டாயப்படுத்தவில்லை.)

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts