'நீங்கள் யாரையும் காதலித்தது உண்டா?, என்று கேட்டவுடன் குப்பென்று வேர்த்தது அவனுக்கு.
சில நாட்களாய் வேதிகா என்ற பெண்னுடன் ஒரு தளத்தில் உரையாடுவது வழக்கமாய் விட்டது.
"இது வரை இல்லை.யாரையும் நம்ப முடியவில்லை."
"சரி..உங்கள் பொழுது போக்குகள்?"
"டி.வி பார்ப்பது,பாட்டு கேட்பது,பாடுவது மற்றும் கவிதை எழுதுவது.உங்களுக்கு?"
"ஷாப்பிங்,ட்ராயிங் மற்றும் சிங்கிங்...வெறு ஏதும் பெண் நண்பர்கள் உண்டா?"
"உண்டு ஒரே ஒரு ஆள்தான்.இதுவரை நேரில் பார்த்ததில்லை"
"அப்படியா?யார் அது?"
'வேற யாரு நீங்கதான்"
"ம்ம்ம்..நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு"
"சரி நாம் நாளை பேசலாம்..ஒரு வேலை இருக்கு.பாய்..டேக் கேர்"
கம்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு இனி என்னென்ன பேசலாம் என்ற நினைப்பில் உறங்கிபோனான் அவன்....
காலேஜ் வளாகம்...
"என்னப்பா சொல்ற?ஏதும் ப்ரூடாவா இருக்க போகுது." நண்பர்கள் சிரிப்புடன் நக்கலடித்தனர்.
"இல்ல...எனக்கென்னவோ அப்படி தோனல..படமெல்லாம் அனுப்பியிருக்கா."
"என்னவோப்பா...ஆல் த பெஸ்ட்...ரொம்ப வழியாத.எடுத்த உடன் ஏடாக்கூடமா ஏதும் கேட்டு காரியத்த கெடுத்துறாத."
"ஒரு நாள் ரெண்டு பேரும் சந்திக்கலாமானு கேட்க்கப் போறேன்"
"ஓக்கே...நாளைக்கு நல்ல செய்தியோட வா.மற்றத அப்புறம் பேசலாம்.அது சரி உன்பேரு என்னெனு அவகிட்ட சொல்லிருக்க?"
"ராஜான்னு சொல்லிருக்கேன்"
"ஓகே..தட்ஸ் குட்..சீ யூ..நாளை பார்க்குறேன்"
வேதிகா வீட்டில்...
"என்ன சொல்ற..உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.ஐயோ பாவம் அந்த ராஜா.தேவையில்லாம ஏதும் வம்புல மாட்டிக்காத.அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளோதான்.வீடு ரெண்டாயிரும்"வருத்ததுடனும் பயத்துடனும் பதறினாள் மாலதி.
"சும்மா இருடி ஒன்னும் நடக்காது..இவன வச்சு நமக்கு ஏதும் காரியம் ஆகுதான்னு பாரு"எந்தவித சலனமும் இன்றி பதிலளித்தாள் வேதிகா.
பஸ் ஸ்டாப்..
"என்னப்பா ஆச்சுது"ஆர்வத்துடன் கேட்டது நண்பர்கள் கூட்டம்.
"அவளுக்கு கம்மிங் 18த் பர்த்டேவாம்.மெரினா பீட்ச் அம்பேத்கார் சிலைக்கு அருகே சந்திக்கலாம்னு சொல்லிருக்கா.என்ன வாங்கி கொடுக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன் பா."
" கொஞ்சம் காஸ்ட்லியா எதும் வாங்கி கொடு"
"எனக்கும் அதான் தோனுச்சு..அதான் நேற்றே ஒரு ட்ரெஸ் 1000 ருபாய்க்கு வாங்கி வச்சிருக்கேன். பீச்சுக்கு வந்துட்டா நம்ம ஃப்ரென்ட் யாரையும்விட்டு ஏதும் சரியான காரணம் சொல்லி அத வாங்கிக்கலாம்"பின்னாடி மொத்தமா அவகிட்டேருந்து கறந்துடலாம் கண்ணடித்தவாறே பதிலளித்தான் ராஜா.
மனதுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்
மெரினா பீச்..
வேதிகா சொன்ன காப்பி கலர் உடையில் அல்லாமல் வேறு உடையில் நின்றிருந்தான் ராஜா.சிலையின் முன்னே கூட்டமாயிருந்தது.
"நான் சொன்ன மஞ்சள் உடையில் இந்நேரம் வந்திருப்பாளா?'மனதுக்குள் கேள்வி கேட்டவாறே கண் அலைபாய காத்திருந்தாள் ராஜா என்ற சங்கீதா.
அவளிடமிருந்து சற்றுத்தள்ளி ....
"நான் சொன்ன காப்பிகலர் ட்ரெஸ்ஸில் வந்திருப்பானா?தங்கை மாலதி பேச்சைக்கேட்டாள் உருப்படுமா?"மனதிற்க்குள் சொல்லியவாறே கூட்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா என்ற வேதிகா.
லேபிள்கள்
- CHILD CARE (158)
- COMEDY (51)
- COMPUTER (137)
- GENERAL (18)
- INFORMATION (557)
- ISLAM (442)
- MEDICAL (862)
- MY ALBUM (5)
- STORY (13)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..
உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...
Popular Posts
-
இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...
-
உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...
-
பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன ? மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி அல்லாஹ் கூறுகின்றான்: وما نرسل بالآيات إلا تخويفا ' الإسرا...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக