லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

ராஜாவைக் காதலிக்காதே

ஆபீசுக்குள் நுழைந்தவுடன் மீனா ராஜாவுக்கு போன் செய்தாள். 

" உடனே காபி ரூமுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்" 

" நாளைக்கு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப் போறோம் என்கறதைப் பத்தி பேசப்போறோமா?"

" அதை விட முக்கியமானது. நீ வா சொல்றேன்"

அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காபி ரூமை அடைந்தான் ராஜா. உள்ளே ஏற்கனவே அங்கு வந்திருந்த மீனா பரபரப்பாக காணப்பட்டாள்.

" என்ன ஆச்சு? இப்படி ஆபீசுக்கு வந்ததும் காபி ரூம்ல நம்மை பாத்தா மானேஜர் கோவிச்சுக்குவார்"

அவனை கையமர்த்தி கண்களில் நீர் ததும்ப " உன்னைக் காதலிக்க கூடாதுன்னுட்டாங்க" என்றாள் மீனா.

" யார் உங்க அப்பாவா? உனக்குத்தான் அப்பா கிடையாதே. உங்க அண்ணாவா? அவன் தான் அமெரிக்கால இருக்கறதா நீ சொன்னையே. போன் பண்ணி சொன்னானா?"

" உங்க அம்மா இன்னிக்கு ஆபிசுக்கு வர பஸ் ஏறும்போது இந்த விளம்பரத்தில வருமே ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட குளிக்காதேனு கத்துவாங்களே அதே மாதிரி ராஜாவை காதலிக்காதேனு கத்தினாங்க"

" யாரு அம்மாவா அப்படி சொன்னா. என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என்னிக்கும் நின்னதில்லயே அவங்களா அப்படி சொன்னாங்க. நீ கவலைப படாதே. ஈவினிங் வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்றேன்."

" என்ன பேசுவே?"

" உன்னைப் புகழ்ந்து சொல்வேன். உனக்கு அழகா கோலங்கள் போடத்தெரியும்னு சொல்வேன்."

" ஏய் அப்படியெல்லாம் சொல்லி என்னை மாட்டி விட்டுடாதே"

" சரி. உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்னு சொல்வேன்".

" அச்சுச்சோ அப்படியெல்லாம் சொல்லாதே. அப்பறம் வாழ் நாள் முழுக்க என்னை சமையக்காரி ஆக்கிடுவாங்க"

" அப்ப உன்னைப் பத்தி என்ன தான் சொல்றது?"

" ஏன் எனக்கு சண்டையே போடத் தெரியாதுன்னு சொல்லேன்"

" ஆரமபத்திலேயே சண்டையைப் பத்தி பேசணுமா?. நீ ஒரு நல்ல பொண்ணுனு சொல்றேன் போதுமா?"

மீனா தலையை ஆட்ட இருவரும் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர்.

மாலை வீடு திரும்பியதும் அம்மாவிடம் ராஜா " என்னை காதலிக்க கூடாதுன்னு மீனாகிட்ட சொன்னியா?"

" ஆமாம். அந்த பொண்ணு உனக்கு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"

" ஏன்?. அவளுக்கு என்ன குறைச்சல்?"

" வேண்டாம்னா வேண்டாம். நீங்க காதலிக்கறது ஆகாது".

" ஏன் அவளோட ஜாதகத்தைப் பாத்தீங்களா?. எனக்கு சரியான பதிலை சொல்லலைனா நான் சாப்பிட மாட்டேன் உங்களோட பேச மாட்டேன்"

ராஜாவின் அம்மாவிற்கு கண்ணீருடன் தொண்டையும் அடைத்தது. 

" நீங்க காதலிக்கறது ஆகாது. ஏன்னா அவ உன்னோட தங்கைடா"

ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அழாத குறையாக " ஏம்மா இப்படி ஒரு தப்பை பண்ணீங்க" என்றான்.

" அடச்சீ. நான் ஒண்ணும் தப்பு பண்ணலை. என்னோட தங்கை ஒருத்தி யாரோ ஒருவனைக் காதலிச்சு அவனை கலயாணம் பண்ணிக்க வீட்டை விட்டு ஓடிட்டா. அவளோட பொண்ணு தான் இந்த மீனா. சொல்லுடா உன்னோட தங்கையைவே நீ காதலிப்பயா?".

அம்மாவின் வார்த்தைகள் இடிகளாக இறங்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜா தெருவில் இறங்கி நடக்கலானான். அவனையும் அறியாமல் அவன் கால்கள் மீனாவின் வீட்டை அடைந்தன. 

ராஜாவைக் கண்டதும் மீனாவும் மீனாவின் அம்மாவும் " என்ன ஆச்சு ராஜா அம்மாகிட்ட பேசினீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ராஜாவுக்கு தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டு நடந்தவைகளை அவர்களிடம் கூறினான். அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் அம்மா " அக்காவுக்கு உண்மைகள் தெரியாது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஆனால் அந்த குழந்தை ஒரு வயதிலேயே இறந்து விட்டது. அதுக்கப்புறம் நாங்க மீனாவை தத்து எடுத்து வளர்த்தோம். எங்களுக்கு பிறக்காததல இவ உன்னோட தங்கையாக மாட்டா. வாங்க அக்காகிட்ட எடுத்துச் சொல்வோம்".

பல வருடங்களாக பிரிந்திருந்த தங்கையைப் பார்ததும் ராஜாவின் அம்மா உணர்ச்சி வசப்பட்டாள். அவள் கூறிய விவரங்களைக் கேட்டு பரவசமாகி மீனாவிடம் "என்னை மன்னிச்சுடும்மா. இப்போ நீங்க காதலிக்கறதுக்கு தடை ஏதும் இல்லை". 

குதூகலத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடப் போகும் ராஜாவையும் மீனாவையும் வாழ்த்துங்கள்.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts