லேபிள்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

டவுச்சீட்டு! இந்தியாவில் மேதகு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும் ஓர் ஆவணமாக
கடவுச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். அதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம்.
Ordinary, Official, Diplomatic, Jumbo என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,Official அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomaticமுதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் 
வழங்கப்படும்!
பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஆர்டினரி, தட்கல் ஆகியவை. இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை 'பிரின்ட் - அவுட்' எடுத்துக்கொள்ள வேண்டும். அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் தங்கள் கைப்பட பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்பட மாட்டாது!
அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்ப்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் மையங்கள் இருக்கும். அங்கும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ் களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த மூன்றில் ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.
ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும்.
புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு  1,000, தட்கல் மூலம் என்றால்  2,500 கட்டணம்.
ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டு களுக்குச் செல்லுபடி ஆகும். 10 ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1,000 மற்றும் தட்கலுக்கு 500 கட்டணம்.
பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப் பித்துக்கொள்ளவும் ஆன் லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2ஐப் பயன்படுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் 'non traceable' சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2,500 மற்றும் தட்கலுக்கு 5,000 கட்டணம்.
 

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts