லேபிள்கள்

வெள்ளி, 14 மார்ச், 2014

தியாகத்தின் பயணம்

தியாகத்தின் பயணம்

மக்கமா நகரில் உள்ள இறைவனின் இல்லத்தை தரிசனம் செய்வது இணையில்லாத ஒரு அனுபவத்தை எமக்குத் தருகின்றது. படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம் ஹஜ் ஆகும். ஹஜ் கடமைகள் யாவும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தை நினைவு படுத்துவதோடு அவர் ஏக இறைக்கொள்கைக்காக செய்த தியாகங்களையும் நினைவுபடுத்துகின்றது.
ஹஜ் கடமைக்காய நீய்யத் வைத்ததுமே இத்தியாகப் பயணம் தொடர்ந்து விடுகின்றது. 'லப்பைக்லப்பைக்அல்லாஹும்ம லப்பைக்' உனது அழைப்பை ஏற்று விட்டேன் என்று கூறும் போதே இவ் உலகை துறந்து உன்னை நினைத்து விட்டேன் என்ற உணர்வு உடலெங்கும் பரவுகிறது. இதுவும் ஒரு தியாகம் தான்.
அதுமட்டுமன்றி தனது உடல் பொருள் அனைத்தையும் தியாகம் செய்தே மக்கா செல்ல வேண்டி இருக்கின்றது. இறை இல்லத்திற்கு சென்றாலும், தனது சொத்தில் ஒரு தொகையை இழக்க வேண்டி இருக்கின்றது. இதுவும் தியாகம் தான்.
இவ்வாறு தியாகம் பல செய்து புனித பூமிக்கு சென்று அங்கு நிறைவேற்றும் ஒவ்வொரு கிரிகையும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தை நினைவு படுத்துகிறது. திருமணம் ஆகியும் வெகு நாட்களாய் குழந்தைப் பாக்கியம் இல்லாறு இருந்த நபி அவர்கள் உளத் தூய்மையுடன் 'என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு சந்ததியாக அளித்தருள்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.
வெகு நாட்களாய் செய்த பிரார்த்தனையின் பயனாக முதுமைப் பருவத்தில் அன்னை ஹஜராவின் வயிற்றில் நபி இஸ்மாயில் (அலை) பிறந்தார்கள். சிறிது நாட்கள் சென்றபின் இறை கட்டளைக்கு ஏற்ப தனது மனைவியையும் அன்புப் பாலகனையும் அராபிய பாலைவனத்தில் குடியமர்த்திவிட்டு வரும்போது, நபி அவர்களைப் பார்த்து அன்னை ஹாஜிர் இது உம் விருப்பமா? அல்லது இறை கட்டளையா? என கேட்டார்கள். இது அல்லாஹ்வின் கட்டளை என பதில் அளிக்க அவ்வாறாயின் நீங்கள் சென்று வாருங்கள்.
எமக்கு அல்லாஹ் போதுமானவன் என பதில் கூறினார்கள். கொண்டு வந்த ஆகாரம் சில நாட்களில் முடிவடைந்து விட்டது. குழந்தை இஸ்மாயீல் பசியாலும் தாகத்தாலும் அலறியது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரும் இல்லை. ஸபா மர்வா மலைகளுக்கிடையே கானல் நீரைக் கண்டு தண்ணீர் என நினைத்து ஓடினார்.
அந்த வேளை குழந்தை கால் அடித்து கத்திய இடத்தில் நீரூற்று உண்டானது. அதனைக் கண்ட அன்னை ஓடி வந்து மண் அணைத்து ஸம்ஸம் (நில்நில்) என அணை கட்டினார். இந்த நீரே இன்று ஹாஜிகள் அருந்தும் ஸம் ஸம் நீராகும். இந்த பொறுமையும், தியாகமும் கலந்த இறையச்சத்தினை நினைவுபடுத்தியே ஸபாமர்வா மலைகளுக்கு இடையே தொங்கோட்டம் நடப்படுகிறது.
'நிச்சயமாக ஸபாமர்வா (எனும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா எனும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செல்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல.'
(2 : 138)
குழந்தை வளர்ந்து பெரியவனானதும் அக் குழந்தையை அறுத்து பலியிடுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். நபியின் உள்ளத்தில் தனது மகனோ மனைவியோ பெரிதாக தெரியவில்லை. அல்லாஹ்வின் கட்டளையே பெரிதாக தெரிந்தது. ஒரு கரத்தில் மகனையும் மறு கரத்தில் அறுப்பதற்குரிய கூரிய கத்தியையும் கயிற்றையும் எடுத்துக் கொண்டு துல்ஹஜ் பிறை 10இல் மி¨னாவிற்கு சென்றார்கள்.
மினா எல்லையை அடைந்ததும் தனது மகனை நோக்கி என் அருமை மகனே! உன்னை அல்லாஹ்வின் பாதையில் அறுத்து பலியிடும்படி எனக்கு உத்தரவு வந்துள்ளது.
இதுபற்றி நீர் என்ன நினைக்கிaர் எனக் கேட்டார்கள். அதற்கு அருமை மைந்தன் இறைவன் தங்களுக்கு கட்டளையிட்டுள்ளதை அவசியம் நிறைவேற்றுங்கள். நான் அஞ்சி அழுவேன் என்று கவலை அடைய வேண்டாம் என்றார்கள். மேலும் இறுதியாக நான் முன்வைக்கும் 3 வேண்டுகோள்களையும் நிறைவேற்றுங்கள் என்றார்.
1. ஒரு கயிற்றினால் என் கால் கைகளை கட்டிவிடுங்கள்
2. பலியிடும் போது என்னை முதுகு புறமாக கிடத்துங்கள். காரணம் என் முக அழகு உங்கள் உறுதியை இழக்க செய்யும்.
3. நான் பலியான செய்தியை என் தாயாருக்கு தெரிவிக்க வேண்டாம்.
அருமை மகனின் சம்மதத்திற்குப் பின்னர் கை கால்களை இறுகக் கட்டி குப்புற கிடத்தி தானும் பார்க்க கூடாது என தன் கண்ணையும் இறுக கட்டி, தனது பலம் முழுவதையும் பாவித்து கூரிய கத்தி கொண்டு அறுக்கலானார்கள். ஆனால் அறுபடவே இல்லை. கோபத்தின் காரணமாக அருகில் இருந்த கல்லில் அடித்தார்கள் கல் இரண்டாக பிளந்தது.
அப்போது கத்தி பேசலானது, 'ஏ! இப்ராஹீமே ஏன் கோபப்படுகிaர் நீர் ஒரு முறை அறுக்காவிட்டால் உம்மை கலால் ஏற்ற அந்த எப்பு அறுக்க வேண்டாம் என எழுபது முறை உத்தரவிடுகிறான். எதை நான் நிறைவேற்றுவது என்றது. நபி இப்ராஹிமின் கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது.
வானின் பக்கம் இரு கரம் ஏந்தி இந்த சோதனையில் நான் தோற்றதற்கு என்ன பாவம் செய்தேன் என்று பிரார்த்தித்தார்கள். மினாவில் ஜிப்பிரில் (அலை) மூலம் ஆட்டை கிடைக்க செய்து இதனை அறுப்பீராக! உம்முடைய காணிக்கை ஏற்கப்படும் எனக் கூறினார்கள். இந்த நிகழ்வே இன்று ஹஜ்ஜின் போது குர்பானியாக நினைவு கூரப்படுகின்றது.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

வெள்ளை முட்டை நல்லதா? பழுப்பு முட்டை நல்லதா? என்ன வித்தியாசம்?

முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் கோரப்படும் காலை உணவுகளில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளக் கூடிய தேர்வுக...

Popular Posts