லேபிள்கள்

சனி, 18 ஜனவரி, 2014

பிராண்ட் என்னும் மாயாஜாலம்

பிராண்ட் என்னும் மாயாஜாலம்


எந்த சோப் வாங்குவது, என்ன பேஸ்ட் வாங்குவது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். . இந்த அத்தனை கேள்விகளுக்குமான எளிய பதில்தான் பிராண்ட். எளிய வழி என்று சொல்லுவதை விட குறுக்குவழி என்று சொல்லலாம். இந்த பொருளுக்கு இந்த பிராண்ட என்று மக்கள் மனதில் பதிய செய்துவிட்டால் போதும், அதன்பிறகு விற்பனையை மக்கள் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் இதை மக்கள் மனதில் பொசிஷன் செய்யவேண்டும். அது ஒன்று அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. அதே சமயத்தில் முடியாத காரியமும் கிடையாது.
மக்கள் மனதில் ஒரு பொருள் பதிய வேண்டும் என்றால் அந்த பொருள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை, ஒரு பொருள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் போது கிடைக்கும்.
தவிர, ஒரு பொருள் தொடர்ந்து நிலையான தரத்திலே பொருளைத் தயாரிக்க வேண்டும்.
இது முதல் படிதானே தவிர இது இறுதிநிலை கிடையாது. ஏனென்றால் உங்களை மாதிரியே நிறைய நிறுவனங்கள் தரமான பொருளைத் தயாரிப்பார்கள் இருக்கிறார்கள்.
முதல் முதலில் சந்தைக்கு வரும் போது, மற்ற நிறுவனங்களில் இல்லாத புதுமை உங்கள் தயாரிப்புகளில் இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்புகளில் புதுமை இருக்கலாம். ஆனால் சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனம், இதே போல பொருளை தயாரிப்பு எவ்வளவு நாள் ஆகப்போகிறது? அதனால் உங்களை தயாரிப்புகளை ஒரு பிராண்ட் ஆக்குங்கள். உங்கள் பொருள் பற்றிய மதிப்பீடுகளை சந்தையில் உருவாக்குங்கள். இதற்கு பொசிஷனிங் என்று சொல்லுவார்கள்.
சந்தையில் நிறைய ஷூக்கள் இருக்கிறது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கான ஷு என்றால் அது அடிடாஸ் என்று ஆகிவிட்டது. அடிடாஸ் போட்டு விளையாடும் போதும் எதுவும் சாத்தியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த நிறுவனம்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக பேசி, அவர்களுக்கு தேவையானதை உருவாக்குகிறது இந்த நிறுவனம். தேவையானதை மட்டுமல்லாமல் தரத்திலும் உறுதியாக இருக்கிறது. ஆனால் இத்தோடு இந்த நிறுவனம் நிறுத்திக்கொள்வதில்லை. நிறைய விளம்பரங்கள், வீரர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர்ஷிப் வழங்குவது உள்ளிட்ட வேலைளையும் இந்த நிறுவனம் செய்கிறது.
மேலும் வெற்றியடைந்த வீரர்களை இந்த நிறுவனத்துக்காக பேசவைப்பது, 'Nothing is impossible' என்ற வார்த்தையை வீரர்கள் மனதில் விதைக்கிறது. இப்போதுஅடிடாஸ் என்றாலே நத்திங் இஸ் இம்பாஸிபிள் என்றாகிவிட்டது.
1950களில் ஆரம்பிக்கப்பட்டது ரேமண்ட் நிறுவனம். ஆண்களுக்கான பிராண்ட் இது. இதன் துணிகள் மிகவும் தரமாக இருக்கும். இதன் விலையும் கூட மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகமே. தரம் நன்றாக இருந்தாலும் விலை அதிகமாக இருப்பது என்றைக்குமே ரிஸ்க்தான். அதனால் தரமான துணிகளையும்
தாண்டி அடுத்த கட்டமாக ஒரு வேலையை செய்தது ரேமண்ட். இதை பயன்படுத்துவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கிறது. . Raymond's – 'The Complete Man' இந்த வாக்கியம் மிக பிரபலம். இந்த துணியை பயன்படுத்துபவர்கள் ஒரு முழுமையான ஆண் என்று சொல்லி விளம்பரபடுத்தியது.
அதாவது நல்ல அப்பா, நல்ல மகன், நல்ல கணவன் என்று சொல்லி விளம்பரபடுத்தியது.
இந்த ஸ்லோகனை விளம்பரப்படுத்தி பல வருடங்கள் ஆகியும், ஆண்களுக்கான ஆடையில் இந்த நிறுவனம் இன்னும் முன்னணியில் இருக்கிறது.
இது போல இன்னும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். விஷயம் இதுதான். ஒரு தரமான பொருளை தயாரிப்பதை விட முக்கியம், அதை சரியான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதும் அதை பிராண்ட் ஆக்குவதும்.
சந்தையில் இருக்கும் பல பொருட்களில், மற்றவற்றைத் தவிர்த்துவிட்டு, உங்களை பொருட்களை வாங்கவேண்டும் என்றால் நம்பிக்கை, பிராண்ட், பொஷுசன் இவை முக்கியம் என்று உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஆர். கே. செந்தில்வேல்குமார் தொடர்புக்கு krsvk@jsb.ac.in


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

வெள்ளை முட்டை நல்லதா? பழுப்பு முட்டை நல்லதா? என்ன வித்தியாசம்?

முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் கோரப்படும் காலை உணவுகளில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளக் கூடிய தேர்வுக...

Popular Posts