லேபிள்கள்

திங்கள், 20 ஜூன், 2011

மடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்


மடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்

இன்றைய கணினி உலகில் நம் அனைவருக்குமே சுயமாக ஒரு கணினி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருகிவருகிறது . அதிலும் அதிகமானோர்க்கு மடிகணினிகளின் மீதான மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் மடிகணினிகளின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது . இதனால் சந்தையில் பல விதமான வகைகளில் இம்மடிகணினிகள் விற்கப்படுகின்றன , அதில் எது நமது தேவைக்கு ஏற்றது , உத்திரவாதமானது , பிரச்சனை தராதது என கண்டறிவது என ஆராய்வோம் . 
1. வாங்குவது என முடிவெடுத்த பின் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது பட்ஜெட். காசுக்கேத்த தோசை என்று ஒரு சொல்வழக்கமுண்டு அது போலத்தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கேற்றாற் போல்தான் கணினிகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளும் அமையும் . 
2. பட்ஜெட்டை முடிவு செய்தபின் , உங்களால் அதிகமாக இதற்காக செலவிட இயலும் என்கிற பட்சத்தில் HP,sony அல்லது Dell போன்ற பன்னாட்டு தயாரிப்பாளரின் மடிக்கணினிகளை தேர்வு செய்யலாம் , குறைந்த அளவு பணத்துடன் வாங்க எண்ணுபவர்கள் HCL,Acer,Zenith,Toshiba போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை முயற்ச்சிக்கலாம் . (toshiba மட்டும் வெளிநாட்டு தயாரிப்பு ) . அதற்கு காரணம் தொழில்நுட்பம் , ஒரே தொழில் நுட்ப வசதிகள் இந்திய மற்றும் பன்னாட்டு தயாரிப்பாளர்களிடம் வெவ்வேறு விலைகளில் கிடைப்பதே ஆகும் . 
ஆனால் ஆடம்பர தொழில்நுட்பங்கள் பன்னாட்டு தயாரிப்புகளில் அதிகம் , அது இந்திய பொருட்களில் குறைவு . அதுதவிர brand image எனப்படுகிற ஒரு விடயமும் இவ்விடயத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று . ஏன்னெனில் இன்று பலரும் மடிகணினியை ஒரு தனிப் பெருமையாக பார்க்கும் நிலை உள்ளது (brand image) . 
3.அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் , எதற்காக இந்த கணினியை நாம் வாங்கப்போகிறோம் , நாம் எவ்வாறு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை ஆராயவும் , எப்படி எனில் நீங்கள் பல இடங்களுக்கும் பயணிப்பவர் எனில் எடை குறைந்த உறுதியான , பாதுகாப்பு அம்சங்கள் அதிகமானவையாகவும் , அதிக நேரம் பேட்டரியால் இயங்கக்கூடியதாகவும் வாங்கலாம் . வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் உபயோகிக்க கூடியதாக இருப்பின் மேற்சொன்ன காரணங்களில் எடை தவிர்த்து மற்ற காரணிகளை எடுத்து கொள்ளலாம் . இது தவிர நம் பயன்பாடுகள் மிக முக்கியம் . நாம் இந்த கணினியில் எந்த வகையான பணிகளை செய்ய இருக்கிறோம் , பிற்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் , எந்த வகை மென்பொருட்களையும் பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொள்வது நல்லது . ஏனெனில் அதற்கேற்றாற் போல நமக்கு தேவையான configuration ஐ முடிவு செய்யலாம் . தேவையில்லாமல் இணைய பயன்பாட்டிற்கு high configuration கணினியை அதிக செலவில் வாங்க வேண்டியதில்லை . 
4. configuration மிக முக்கியமான ஒன்று , நீங்கள் வாங்கும் config. னின் முழு விபரத்தையும் வாங்கி கொள்ளவும் அது கீழுள்ள மாதிரியில் இருப்பது போல பெறவும் 
a. processor -(processor type , Processor speed, FSB speed , chipset) 
b.RAM or memory- 
c.Hard disk drive- 
d.Optical disk drive - Preferably a DVD writer 
e.Connectivity - (wifi , pcmcia port , bluetooth) 
f.Screen Size ( what kind of display and which type) - 
g.Weight- 
h.Operating systems - 
i.additional features- 
j.video and audio features - 
k.price - 
மேற்சொன்ன விடயங்களை பல மாடல்களிலும் பல தயாரிப்புகளிலும் வாங்கி ஆராய்ந்து பிறகு உங்கள் மடிக்கணினியை தேர்ந்தெடுக்கவும் . 
4. மேற்சொன்ன விடயங்கள் தவிர கவனிக்க வேண்டிய சில 
. பல கடைகளுக்கும் சென்று விலை விபரமும் config.ம் விசாரியுங்கள் . 
.தயவு செய்து பழைய மடிக்கணினிகளை வாங்க வேண்டாம் 
.நீங்கள் வாங்க இருக்கும் கணினியை விற்கும் கடை எப்படி என விசாரித்து வாங்கவும் 
.முக்கியமாக service and support எப்படி என விசாரித்து வாங்கவும். 
.விலை , பேரம் பேசி வாங்கவும் . 
இவை அனைத்தும் சரியாக செய்தால் நிச்சயம் உங்களுக்கு குறைந்த விலையில் உங்கள் உபயோகத்திற்கேற்ற நல்ல ஒரு மடிகணினி அமையும் 

கருத்துகள் இல்லை:

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது. இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்...

Popular Posts